யாரெல்லாம் உணவில் கிராம்பு சேர்க்கக்கூடாதுன்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உணவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என அனைவருக்குமே தெரியும். அதிலும் கிராம்பில் ஏராளமான நன்மைகள் நிறைந்திருப்பது சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. பல் வலி என்றால் உடனே ஒரு கிராம்பை வாயில் போட்டு கடித்துக் கொண்டால், பல் வலி போய்விடும் என்று சொல்வார்கள்.

Dangerous Side Effects Of Cloves

அவ்வளவு சக்தி கொண்ட கிராம்பை உணவில் சேர்த்துக் கொண்டால், அது அந்த உணவையே நல்ல நறுமணத்துடன் காட்டும். இத்தகைய கிராம்பை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதனால் தீவிரமான பக்கவிளைவை சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா?

இக்கட்டுரையில் கிராம்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் சந்திக்கும் பக்க விளைவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. யாரெல்லாம் கிராம்பை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பதையும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்தம் சம்பந்தப்பட்ட குறைபாடு

இரத்தம் சம்பந்தப்பட்ட குறைபாடு

அளவுக்கு அதிகமாக கிராம்பை உட்கொள்ளும் போது, அது இரத்தத்தை மெலிதாக்கும். அதிலும் இரத்தம் சம்பந்தப்பட்ட குறைபாடுகளான ஹீமோபிலியா அல்லது ஆன்டிகோவாகுலன்ட் மருந்துகளை எடுப்பவர்கள் கிராம்பை அதிகம் உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் போகிறவர்கள், 2 வாரத்திற்கு முன்பிருந்தே கிராம்பை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

குறைவான இரத்த சர்க்கரை அளவு

குறைவான இரத்த சர்க்கரை அளவு

இரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருப்பவர்களும், கிராம்பை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கிராம்பு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மேலும் குறைக்கச் செய்வதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே ஹைப்போ கிளைசீமியா நோயாளிகள் கிராம்பை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

நச்சுத்தன்மை

நச்சுத்தன்மை

கிராம்பை ஒருவர் அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, அது தீவிர பக்க விளைவை உண்டாக்கும். அதில் குமட்டல், வாந்தி, சுவாசிப்பதில் பிரச்சனை, தொண்டைப் புண், திரவ ஏற்றத்தாழ்வு, சிறுநீரக கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

அலர்ஜி

அலர்ஜி

கிராம்பால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளுள் ஒன்று அலர்ஜி. அளவுக்கு அதிகமாக கிராம்பை எடுக்கும் போது, அதனால் பல்வேறு அலர்ஜிகளை சந்திக்க நேரிடும். அதில் அரிப்பு, வீக்கம், தொண்டை கரகரப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இன்னும் தீவிர நிலையில் அனாபிலாக்சிஸ் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

சுவாசப் பிரச்சனைகள்

சுவாசப் பிரச்சனைகள்

தற்போது கிராம்பு சிகரெட் மிகவும் பிரபலமானதாக உள்ளது. ஆனால் கிராம்பை அடிக்கடி புகைக்கும் போது, அது பல்வேறு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த புகை சுவாசப் பாதையில் அதிகம் செல்லும் போது, அதனால் மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நுரையீரல் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். எனவே கிராம்பு சிகரெட்டை தவிர்த்திடுங்கள்.

வலிப்பு

வலிப்பு

எப்போது ஒருவர் உணவில் கிராம்பை அதிகம் சேர்க்கிறாரோ, அவர்களுக்கு வலிப்பு வரும் அபாயமும் அதிகரிக்கும். ஏனெனில் இது மூளைச் செல்களில் முறையற்ற அதிர்வை ஏற்படுத்தி, வலிப்புக்கு வழிவகுக்கும். ஏற்கனவே வலிப்பு வருபவர்கள், மறந்தும் இதை உணவில் சேர்க்க வேண்டாம்.

சென்சிடிவ் சருமம்

சென்சிடிவ் சருமம்

கிராம்பு சருமத்தை மிகவும் சென்சிடிவ் ஆக்கும். ஆகவே ஏற்கனவே அலர்ஜி இருக்குமானால், கிராம்பு எண்ணெயை நேரடியாக சருமத்தில் பயன்படுத்த வேண்டாம். இல்லாவிட்டால், அது அரிப்பு, எரிச்சல், காயம் அல்லது ஒவ்வாமையை உண்டாக்கும். சில நேரங்களில் சரும செல்களைப் பாதிக்கும்.

வாய் சென்சிடிவிட்டி

வாய் சென்சிடிவிட்டி

அளவுக்கு அதிகமாக கிராம்பை உட்கொள்வதால், வாயின் உப்புற சுவற்றில் அமைந்துள்ள சளி சவ்வில் அலர்ஜி ஏற்படும். பல ஆய்வுகளில் அதிகளவிலான கிராம்பு ஈறுகள், பற்கள் மற்றும் பல் திசுக்கள் பாதிக்கப்படுவதோடு, கடுமையான எரிச்சலையும் உண்டாக்கும்.

உணர்வு இழப்பு

உணர்வு இழப்பு

கிராம்பில் உள்ள உட்பொருள், உணர்வை இழக்கச் செய்யும். இந்த மசாலா பொருளின் எண்ணெய்யை சருமத்தில் அடிக்கடி பயன்படுத்தும் போது, அது சருமத்தில் உணர்வு இழப்பை ஏற்படுத்தும்.

ஆண்களின் பாலியல் பிரச்சனைகள்

ஆண்களின் பாலியல் பிரச்சனைகள்

ஆண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளான விறைப்புத்தன்மை அல்லது முன்கூட்டி விந்து வெளியேறுவது போன்றவற்றை சரிசெய்வதற்கு கிராம்பு நிறைந்த க்ரீமை ஆண் குறி அருகில் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், அதுவே விறைப்புத்தன்மை பிரச்சனையை தீவிரமாக்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dangerous Side Effects Of Cloves

There are also some potential side effects of the spice that can harm you significantly. Yes, the little clove can harm your body. How? Read on...
Story first published: Thursday, January 4, 2018, 10:30 [IST]