For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் மூளையை முழுவதுமாக மழுங்கடிக்கின்ற இந்த செயல்களை நிச்சயம் செய்யதீர்கள்...!

|

நமது உடலில் உள்ள உறுப்புகளில் சில முக்கியமான உறுப்புகள் உள்ளன. அவற்றின் செயல்திறன் அதி அற்புதமானது. இதயம், மூளை, கண் போன்றவை முதன்மையான உறுப்பாக கருதப்படுகிறது. இதில் மூளை தான் நமது முழு செயல்திறனையும் நிர்ணயிக்கும் இயற்கை கணினி.

உங்கள் மூளையை முழுவதுமாக மழுங்கடிக்கின்ற இந்த செயல்களை நிச்சயம் செய்யதீர்கள்...!

மனிதனின் மூளையை தோற்கடிப்பதற்கு இன்னும் செயற்கை மூளைகள் வரவில்லை. இத்தகைய மூளையின் மகத்துவம் அதன் நினைவாற்றலையும் ஞாபக திறனையும் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், நாம் செய்கின்ற பல செயல்களால் மூளையின் செயல்திறன் குறைந்தும், மங்கியும் போய்விடுகிறது. இதற்கான காரணங்களை நாம் விரிவாக தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாயாஜாலங்கள் கொண்ட மூளை..!

மாயாஜாலங்கள் கொண்ட மூளை..!

மூளையின் செயல்திறனை வைத்து தான் பல ஆராய்ச்சிகள் இன்று நடந்து கொண்டிருக்கின்றன. எந்திரன் படத்தில் நாம் பார்த்தது போன்றே வருங்காலத்தில் ரோபோட்ஸ்கள் நம்மை ஆள்வதற்கு சாத்திய கூறுகள் அதிகம் உள்ளன. இதனை செயற்கை நுண்ணறிவியலை பயன்படுத்தி செய்ய கூடும்.

வயசை மட்டும் கேட்காதீர்கள்...!

வயசை மட்டும் கேட்காதீர்கள்...!

அடிக்கடி உங்களின் வயசை பற்றி நீங்கள் யோசித்து கொண்டோ அல்லது கண்ணாடியில் உங்களின் முகத்தை பார்த்து கொண்டோ இருந்தால் நீங்கள் வயதானவராக உங்களின் மனதுக்குள் ஒரு ஆழ்ந்த எண்ணம் முளைக்க தொடங்கி விடும். இதுவே, மூளையின் திறனை குறைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

வெண்ணெய் விரும்பிகளா..?

வெண்ணெய் விரும்பிகளா..?

பலருக்கு சாதாரண எண்ணெய்யை காட்டிலும் வெண்ணெய்யில் சமைத்து சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். ஆனால், இதில் அதிக அளவில் நிறையுற்ற கொழுப்புகள் உள்ளதால் மூளையின் செயல்திறனை குறைக்க கூடும்.

மாத்திரைக்கு நோ நோ..!

மாத்திரைக்கு நோ நோ..!

இப்போதெல்லம் எதை அதிகம் சாப்பிடுகின்றோமோ இல்லையோ, மாத்திரைகளை நாம் கணக்கில் அடங்காதவாறு சாப்பிட்டு கொண்டே இருக்கின்றோம். குறிப்பாக அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிடுவதால் அவை மூளையின் ஞாபக திறனை குறைத்து விடும்.

MOST READ: உடல் எடையை குறைப்பதற்கு உலக நாடுகளில் கடைபிடிக்கின்ற வினோத முறைகளை தெரிஞ்சிக்கோங்க...!

நிறையுற்ற கொழுப்புகளா..?

நிறையுற்ற கொழுப்புகளா..?

அதிக கொழுப்புகள் கொண்ட உணவுகளை உண்டால் கட்டாயம் மூளையின் ஆரோக்கியம் பாதிக்க கூடும். எனவே, கொழுக்கள் அற்ற உணவுகளை உண்ணுங்கள். அல்லது நல்ல கொலஸ்ட்ரால் கொண்ட உணவுகளை சாப்பிடலாம்.

படிப்ஸ்களுக்கு ஜாலிதான்..!

படிப்ஸ்களுக்கு ஜாலிதான்..!

அதிகமாக படிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு இந்த மூளையின் செயல்திறன் கூடுதலாக இருக்கும் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். மூளைக்கு வேலையை நாம் எந்த அளவுக்கு தருகின்றோமோ அந்த அளவிற்கு தான் மூளை பயங்கரமாக வேலை செய்யும். இல்லையேல் மங்கி போக கூடும்.

அதிக இனிப்பு...அதிக ஆப்பு..!

அதிக இனிப்பு...அதிக ஆப்பு..!

இனிப்புகள் அதிகம் கொண்ட உணவுகளை நீங்கள் அதிகம் விரும்பி உண்கிறீர்களா..? அப்போ உங்களுக்கு ஆபத்து அதிகம். அதிக இனிப்பு உணவுகள் ஞாபக திறனை குறைக்க கூடியதாகும். மேலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் உயர்த்த கூடும்.

குறைந்த தூக்கமா..? அதிக தூக்கமா..?

குறைந்த தூக்கமா..? அதிக தூக்கமா..?

மூளைக்கு அதிகமாக வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக நாம் கண்ட வேலைகளையும் கண்ட நேரத்தில் பார்க்க கூடாது. அவ்வாறு செய்தால் மூளை பாதிக்கப்படும். 6முதல் 7 மணி நேர தூக்கம் ஒரு நாளைக்கு மிக அவசியமானது. அதிக நேரம் தூங்கினாலும், குறைந்த நேரம் தூங்கினாலும் அது மூளைக்கு உகந்ததல்ல.

MOST READ: குடலில் உள்ள அழுக்குகளை முற்றிலுமாக வெளியேற்ற கூடிய ஆயுர்வேத வழி முறைகள்...!

அர்த்தமற்ற வாழ்க்கையா..?

அர்த்தமற்ற வாழ்க்கையா..?

காலையில் ஏன் எழுந்து கொள்கிறோம், எதற்காக இந்த வாழ்வு என்ற கேள்விக்கான பதில் நம்மில் பலருக்கு தெரியாது. இந்த நிலை பல வருடமாக நீடுத்தால், நமக்கு வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடும். இந்த நிலை உங்களின் மூளையை அதிகம் பாதித்து நினைவாற்றலை குறைக்க ஆரம்பிக்கும்.

தனிமை...தனிமை..!

தனிமை...தனிமை..!

அதிக நேரம் தனிமை பல சமயங்களில் நமக்கு ஆபத்தை தர கூடும். நீங்கள் தனிமையாக இருந்தால் தேவையற்ற நினைவலைகள் வரா கூடும். ஆதலால், மூளை அதன் செயல்திறனை குறைத்து கொள்ள நேரிடலாம்.

புகை மூளைக்கு பகையா..?

புகை மூளைக்கு பகையா..?

புகை பழக்கம் என்கிற ஒரு தொற்று கிருமி இன்று பலரிடம் காணப்படுகிறது. இது ஏற்படுத்துகிற ஆபத்துகளில் மூளை பாதிப்பும் அடங்கும். ஞாபக மறதி, சோம்பலான நிலை, கவன குறைவு ஆகியவற்றை இது தரும்.

உச்சநிலை மன அழுத்தம்..!

உச்சநிலை மன அழுத்தம்..!

பலருக்கு இந்த பிரச்சினை இருக்கிறது. தேவையற்ற பிரச்சினைகளுக்கெல்லாம் தங்களது மண்டையை போட்டு குழப்பி கொள்வார்கள். இந்த நிலை பலருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடும். அதிக மன அழுத்தம் மூளையை பெரிதும் பாதித்து, ஞாபக திறனை அழிக்க செய்யும்.

காய்கனிகள் வேண்டாமா..?

காய்கனிகள் வேண்டாமா..?

நம்மில் பலர் காய்கனிகளை முற்றிலுமாக தவிர்த்து விடுவார். பச்சை காய்கறிகளை சாப்பிடுவதால் பல நன்மைகளே கிடைக்கும். இவற்றை தவிர்த்தால் நிச்சயம் ஆரோக்கியம் பாதிக்க கூடும். அத்துடன், இதய நோய்கள், ஊட்டசத்து கோளாறுகள், எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவை ஏற்படும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Habits That Can Increase Your Dementia Risk

Habits that can increase your risk of Dementia
Desktop Bottom Promotion