மதிய உணவுக்கு பின் தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

பாலில் இருந்து பெறப்படும் தயிரில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருப்பது அனைவரும் அறிந்ததே. இத்தகைய தயிர் வீட்டிலேயே எளிதில் தயாரிக்கக்கூடிய ஒரு உணவுப் பொருள் என்பதால் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளவும் முடியும். இந்தியாவில் தயிரை பலர் முக்கிய நிகழ்வுகளான தேர்வு அல்லது வேலைக்கு செல்லும் போது, தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், அந்த காரியம் வெற்றியில் முடியும் என்று பலர் கருதுகின்றனர்.

Curd and Sugar A Cooling Health Shot-Benefits

சிலர் தினமும் மதியம் உணவு உட்கொள்ளும் போது, தயிரை சாதத்துடன் சேர்த்து சாப்பிடாமல், தனியாக ஒரு பௌலில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். இது ருசியாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. ஏனெனில் தயிரில் லாக்டிக் அமிலம் அதிகம் இருப்பதோடு, நல்ல பாக்டீரியாவான புரோபயோடிக்குகளும் ஏராளமாக நிறைந்துள்ளது.

இந்த தயிரை ஒருவர் அன்றாடம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டாலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள நன்மைகள் தான் கிடைக்கும் என்பதால், உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயலான சர்க்கரை கலந்த தயிரை தினமும் சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படி தயாரிப்பது?

எப்படி தயாரிப்பது?

* தயிர் - 1 கப்

* சர்க்கரை - 1-2 டீஸ்பூன்

* ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து, மதிய உணவிற்கு பின் சாப்பிடுங்கள். இதனால் உங்கள் நாவிற்கு விருந்து அளித்தது போன்று இருக்கும்.

ஏன் சர்க்கரை?

ஏன் சர்க்கரை?

சர்க்கரை தீங்கு விளைவிக்கும் பொருள் தான். இருப்பினும் இதனை அளவாக தயிருடன் சேர்த்து சாப்பிடும் போது, உடலின் ஆற்றல் உடனடியாக அதிகரிக்கப்படும். குறிப்பாக கோடையில் இப்படி சாப்பிடுவதால், அதிக வேலையால் வியர்வையின் மூலம் இழந்த சத்துக்களை மீண்டும் பெற்று, சுறுசுறுப்பாக இருக்கலாம்.

பற்கள் எலும்புகளின் வலிமை

பற்கள் எலும்புகளின் வலிமை

தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஏராளமான அளவில் உள்ளது. இவை எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்க தேவையான சத்துக்களாகும். ஒருவர் தயிருடன் சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், அது ஆர்த்ரிடிஸைத் தடுக்க உதவி, பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆகவே அன்றாடம் தயிரை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நோயெதிர்ப்பு மண்டலம்

நோயெதிர்ப்பு மண்டலம்

தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் ஏராளமான அளவில் நிறைந்திருப்பதால், இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், வெள்ளையணுக்களின் அளவை மேம்படுத்த உதவி, உடலை நோய்த்தொற்றுகளிடமிருந்து பாதுகாக்கும். எனவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைத்தால், தயிரை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் வீட்டில் தயாரித்த தயிரை உண்பதே மிகவும் நல்லது.

செரிமான மண்டலம்

செரிமான மண்டலம்

தயிரில் உள்ள புரோபயோடிக்குகள் செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவும். மேலும் தயிர் எளிதில் செரிமானமாகும். எனவே லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் கூட இதை சாப்பிடலாம். ஏனெனில் இது நொதிக்கும் செயல்முறையின் போதே, லாக்டோஸை உடைத்துவிடுவதால், எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்தாது.

இதயத்திற்கு நல்லது

இதயத்திற்கு நல்லது

அன்றாடம் தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், கொலஸ்ட்ரால் அளவை குறையும். இதனால் உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கான அபாயமும் குறையும். இதன் விளைவாக இதய ஆரோக்கியம் மேம்படும். ஆகவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், அன்றாட உணவில் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

எடை குறைவு

எடை குறைவு

கார்டிசோல் என்னும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் தான், இடுப்பைச் சுற்றி அதிகப்படியான கொழுப்புக்கள் தேங்குகின்றன. தயிரில் உள்ள கால்சியம், இந்த கார்டிசோல் ஹார்மோனின் உற்பத்தியைக் குறைத்து, எடையைக் குறைக்க உவும். மேலும் தயிர் நீண்ட நேரம் பசி எடுக்காமலும் தடுக்கும். இதனால் கண்ட உணவுகளை உண்பது தடுக்கப்படும்.

யோனி ஆரோக்கியம்

யோனி ஆரோக்கியம்

தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் யோனியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். யோனியில் உள்ள pH அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் போது தான், யோனியில் தொற்றுகள் ஏற்படும். ஆனால் தயிர் இதைத் தடுக்கும். ஆகவே பெண்கள் அன்றாடம் தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால், யோனியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு

தயிரில் எளிதில் கரையக்கூடிய புரோட்டீன் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். அதிலும் க்ரீக் தயிரை சாப்பிடுவதால், இதய நோயின் அபாயம் குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டுடன் இருப்பதாக ஆய்வுகளும் கூறுகின்றன. முக்கியமாக ப்ளேவர் சேர்க்காத தயிரைத் தான் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். ஆனால் சர்க்கரை சேர்க்காமல் தயிர் சாப்பிடுவதே சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

சிறந்த ஆற்றல் உணவு

சிறந்த ஆற்றல் உணவு

உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்க நினைத்தால், அதற்கு தயிர் தான் மிகச்சிறந்த உணவுப் பொருள். தயிரில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்கும். அதிலும் தயிர் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, உடற்பயிற்சிக்கு பின் விரைவில் பாதிக்கப்பட்ட தசைகள் குணமாக உதவும் என்பதால் உடற்பயிற்சிக்கு பின் சாப்பிட ஏற்ற உணவும் கூட.

அசிடிட்டி

அசிடிட்டி

தயிர் குளிர்ச்சியான உணவுப் பொருள் என்பதால், இதனை அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள், வயிற்று எரிச்சலை சந்திப்பவர்கள் மற்றும் உடல் சூட்டால் அவஸ்தைப்படுபவர்கள் அன்றாடம் சாப்பிட்டு வருவதன் மூலம் எளிதில் விடுபடலாம். ஆயுர்வேதமும் இதைத் தான் பரிந்துரைக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குடல் ஆரோக்கியம்

குடல் ஆரோக்கியம்

தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் உள்ள புரோபயோடிக்ஸ் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை சீராக பராமரித்து, குடல் பிரச்சனைகளைத் தடுக்கும். மேலும் குடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவியும் புரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Curd and Sugar A Cooling Health Shot-Benefits

Here are some health benefits of eating curd with sugar. Read on to know more...