இந்த ஊட்டச்சத்துக் குறைபாடுகள் தான் உங்க மன அழுத்தத்திற்கு காரணம் எனத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் சிலருக்கு தான் உணவுகளுக்கும், மன ஆரோக்கியத்திற்கும் இருக்கும் நேரடி சம்பந்தம் இருப்பது தெரியும். எப்போது ஒருவரது மூளைக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகிறதோ, அப்போது மூளையின் செயல்பாடு பாதிக்கப்படும். அதுவும் சில முக்கியமான ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு கிடைக்காமல் குறைபாட்டுடன் இருந்தால், அதன் விளைவாக மன இறுக்கம் அல்லது இதர மனநல பிரச்சனைகளால் அவஸ்தைப்பட நேரிடும்.

ஆகவே ஒவ்வொருவரும் தங்களது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் சரிவிகித டயட்டை மேற்கொள்ள வேடியது என்பதை உணர வேண்டும். இன்று ஏராளமானோர் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Common Deficiencies That Are Linked To Depression

இந்த மன அழுத்தத்திற்கு அதிகப்படியான வேலைப்பளு மட்டுமின்றி, ஒருசில ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகளும் தான் காரணம். உங்களுக்கு எந்த ஊட்டச்சத்துக்கள் உடலில குறைவாக இருந்தால், மன அழுத்தம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

இக்கட்டுரையில் மன இறுக்கம் மற்றும் இதர மனநல பிரச்சனைகளுக்குக் காரணமான 7 விதமான ஊட்டச்சத்துக் குறைபாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, உங்களுக்கு இருக்கும் மன அழுத்தத்திற்கான சரியான காரணத்தை தெரிந்து கொண்டு, அதிலிருந்து விடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் டி குறைபாடு

வைட்டமின் டி குறைபாடு

நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும், மூளையின் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் டி மிகவும் இன்றியமையாததாகும். இத்தகைய வைட்டமின் டி ஏராளமான அளவில் கிடைப்பது சூரியவெளிச்சத்தில் இருந்து தான். ஆய்வுகளிலும் மன இறுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வைட்டமின் டி குறைபாடு இருப்பதைக் கண்டறிந்துள்ளது. ஆகவே ஒருவருக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்தால், மன இறுக்கம் அல்லது மன அழுத்தத்தினால் கஷ்டப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

வைட்டமின் பி குறைபாடு

வைட்டமின் பி குறைபாடு

ஆய்வுகளில் வைட்டமின் பி குறைபாட்டிற்கும், மனநல பிரச்சனைகளான மன இறுக்கத்திற்கும் சம்பந்தம் இருப்பது தெரிய வந்துள்ளது. வைட்டமின் பி12 மற்றும் இதர பி வைட்டமின்கள் மூளையில் கெமிக்கல்களை உற்பத்தி செய்ய உதவி, மனநலம் மற்றும் இதர மூளை செயல்பாடுகளை பாதிக்கப்படாமல் தடுக்கும். வைட்டமின் பி குறைபாடுகள் மூளையில் கெமிக்கல்களின் அளவைப் பாதித்து, மன இறுக்கம் மற்றும் இதர மனநல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே இந்த வைட்டமின் பி குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அயோடின் குறைபாடு

அயோடின் குறைபாடு

உடலில் தைராய்டு மிகவும் முக்கியமான சுரப்பியாகும். இந்த சுரப்பியின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு போதுமான அயோடின் தேவைப்படுகிறது. தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாமல் இருந்தால், அது நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் மூளையில் பிரச்சனைகளை உண்டாக்கும். ஆய்வுகளில் அயோடின் குறைபாட்டிற்கும் அறிவாற்றல் பிரச்சனைகளுடன், மனநல கோளாறுகளுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அடிக்கடி உங்களின் தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

ஒமேகா-3 குறைபாடுகள்

ஒமேகா-3 குறைபாடுகள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மீன், ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் போன்றவற்றில் அதிகளவில் காணப்படும். ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களில் குறைபாடுகள் ஏற்பட்டாலும், அது மன இறுக்கத்திற்கு வழிவகுக்கும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. மேலும் இவை அழற்சி மற்றும் வலியைக் குறைக்க உதவும். ஆய்வுகளில் பலருக்கும் மன இறுக்கம் மற்றும் மனநல கோளாறுகள் ஏற்படுவதற்கு ஒமேகா-3 குறைபாடு இருப்பது தான் என கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே வாரந்தோறும் தவறாமல் மீனை வாங்கி சாப்பிடுங்கள்.

இரும்புச்சத்து குறைபாடு

இரும்புச்சத்து குறைபாடு

இரும்புச்சத்து குறைபாடு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளான இரத்த சோகையை உண்டாக்கும். இரத்த சோகைக்கான அறிகுறிகளும், மன இறுக்கத்திற்கான அறிகுறிகளும் ஒரே மாதிரி தான் இருக்கும். அதில் மிகுதியான சோர்வு, எரிச்சல் தன்மை மற்றும் மந்தமான மூளை போன்றவை குறிப்பிடத்தக்கவை. எப்போது மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு போதுமான இரும்புச்சத்து கிடைக்கவில்லையோ, அப்போது நரம்பியக்கடத்தி சமிக்ஞை செய்வதில் இடையூறு ஏற்பட ஆரம்பிக்கும். இதன் விளைவாக மன பதற்றம் மற்றும் மன இறுக்கம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

அமினோ அமில குறைபாடு

அமினோ அமில குறைபாடு

அமினோ அமிலங்கள் விலங்கு புரோட்டீன்கள், கடல் உணவுகள், பருப்பு வகைகள், நட்ஸ், விதைகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவற்றில் காணப்படுகின்றன. உங்கள் உடலானது உணவுகளை செரிமானமடையச் செய்வதற்கு, திசுக்களை சரிசெய்து வளர்ச்சி பெற செய்வதற்கு மற்றும் மூலக்கூறுகளான ஆக்ஸிஜன் உடல் முழுவதும் ஓடச் செய்வதற்கு அமினோ அமிலங்கள் அவசியமானதாகும். ஆய்வுகளில் அமினோ அமிலங்கள் நிறைந்த சப்ளிமெண்ட்டுகளை மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் போது, அதன் அறிகுறிகள் குறைந்திருப்பது தெரிய வந்தது. எப்படியெனில் அமினோ அமிலங்களானது நரம்பியகடத்தி சமிஞ்ஞைகளாக மாற்றப்பட்டு, மன இறுக்கம் மற்றும் இதர மனநில பிரச்சனைகளில் இருந்து விடுவிக்க உதவுகிறது.

ஃபோலேட் குறைபாடு

ஃபோலேட் குறைபாடு

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஃபோலேட் அளவை சோதிக்கும் போது, ஆரோக்கியமானவர்களை விட இவர்களுக்கு 25% குறைவாக ஃபோலேட் இருப்பது கண்டறியப்பட்டது. மற்றொரு ஆய்வில் 500 mcg ஃபோலிக் அமிலம் நிறைந்த மருந்துகளானது மன இறுக்க நிவாரணியாக செயல்படுவது கண்டறியப்பட்டது. ஆகவே ஒருவரது மூளையின் ஆரோக்கியத்தில் ஃபோலேட் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருவருக்கு போதுமான அளவு ஃபோலேட் இல்லாவிட்டால், அவர்கள் மன இறுக்கம், மன அழுத்தம் போன்ற மனநல பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும். எனவே உஷாராக இருங்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளது போன்று தெரிந்தால், நீங்கள் மட்டும் படித்து தெரிந்து கொள்ளாமல், உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common Deficiencies That Are Linked To Depression

Here we listed some common deficiencies that are linked to depression. Read on to know more...
Story first published: Monday, March 19, 2018, 11:45 [IST]