For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஆறு பொருள் ரூம்ல இருக்கறதுதான் புற்றுநோய் வர காரணமாம்... மொதல்ல அத மாத்துங்க...

|

உலகம் முழுவதும் உண்டாகும் இறப்பிற்கு இரண்டாவது முக்கிய காரணமாக விளங்குவது புற்று நோய். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளியியல் படி, தோராயமாக 9.6 மில்லியன் மக்கள் 2018ம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இது நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் செய்தியாக உள்ளது.

cancer causing things you need to remove from your bedroom

புற்றுநோயை அதிகரிக்கும் பல்வேறு காரணிகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றிற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையுடன் தொடர்புள்ளது. புற்றுநோயை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய காரணம், புகை பிடிப்பது. மற்ற பிற காரணிகள், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், அதிக மது அருந்துவது, அதிக உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை, தனிப்பட்ட சுகாதாரத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பது, மரபணு போன்றவை ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புற்றுநோய்

புற்றுநோய்

புற்று நோய் உண்டாவதற்கான பொதுவான காரணிகளை நாம் மேலே கூறியிருந்தாலும், சில குறிப்பிட்ட பொருட்கள் உங்கள் படுக்கை அறையில் இருப்பதும் புற்று நோயை உண்டாக்கும். ஆம், இதனைக் கேட்க கொஞ்சம் பயமாக இருக்கிறது அல்லவா? ஆம், சில வகை பொருட்களை உங்கள் படுக்கை அறையில் வைப்பதால் புற்று நோய் தாக்கும் அபாயம் உள்ளது. அந்த பொருட்களைப் பற்றி அறிந்து கொள்ள உங்களுக்குள் ஆவல் எழுகிறது அல்லவா? தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

MOST READ: வெறும் வயிற்றில் சுடுநீரில் மிளகு சேர்த்து ஒரு மாசம் குடிங்க... உங்க உடம்புல இந்த மேஜிக்லாம் நடக்கும

பருத்தி தலையணை மற்றும் பெட்ஷீட்

பருத்தி தலையணை மற்றும் பெட்ஷீட்

நாம் அனைவரும் தலையணை பயன்படுத்துவோம். ஆனால் பருத்தி தலையணை பயன்பாடு புற்று நோய் வாய்ப்பை அதிகரிக்கும். பருத்தி விளைவிக்கும்போது அதில் அதிக அளவு பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு இதற்கான முக்கிய காரணம். பருத்தியைப் பாதுகாக்க, சில வகை மூலிகை பூச்சிகொல்லிகளும் இவற்றின்மீது தெளிக்கப்படுகின்றன. ஒரு ஆய்வின்படி, மூலிகை பூச்சிகொல்லியில் உள்ள க்ளைபோசெட் என்னும் மூலப்பொருள் புற்று நோய் அபாயத்துடன் தொடர்புடையதாக அறியப்படுகிறது ஆகவே இந்த அபாயத்தைக் குறைக்க ஆர்கானிக் பருத்தியால் செய்யபப்ட்ட போர்வைகள் மற்றும் தலையணைகளை பயன்படுத்தலாம்.

பெயிண்ட்

பெயிண்ட்

நம்மில் பலருக்கு பெயிண்டின் வாசனை பிடிக்கும். ஆனால் இது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்பது மிகவும் வருந்த வேண்டிய ஒரு விஷயம். எளிதில் ஆவியாகும், கரிம சேர்மங்கள் (வோலடைல் ஆர்கானிக் காம்பவுண்ட் என்னும் VOC) பெயிண்டில் சேர்க்கப்படுகின்றன. இவை புற்று நோயை உண்டாக்குகின்றன. ஜர்னல் ஆப் ஆகுபெஷனால் அன்ட் என்வைரான்மேண்டல் மெடிசின் வெளியிட்ட ஆய்வின்படி, தொழில் ரீதியாக பெயிண்ட்டுடன் தொடர்பு கொண்ட ஓவியர்கள், பெயிண்டர்கள், மற்றும் இதர தொழிலாளர்களுக்கு நுரையீரல், சிறுநீர்ப்பை, வாய்வழி மற்றும் கணைய, இரத்த புற்று நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக தெரிவிக்கிறது. ஆகவே இந்த வகை கரிம சேர்மங்கள் இல்லாத nonVOC பெயிண்ட் வாங்கி பயன்படுத்தலாம்.

MOST READ: எந்த க்ரீமுக்கும் முகம் கலராகலையா? பால் பவுடரை இப்படி அப்ளை பண்ணுங்க... இரண்டே நாள்ல சிகப்பாயிடுவீங்

ரூம் ப்ரெஷனர்

ரூம் ப்ரெஷனர்

சமீப காலங்களில் நமது குளியலறை, படுக்கையறை, வேலை பார்க்கும் இடங்கள், மேலும் கார்களில் கூட ஒரு நறுமணம் வேண்டும் என்ற நோக்கத்துடன் ரூம் ப்ரெஷ்னர் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த பொருள் புற்றுநோயை உண்டாக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? அதனால் இதனைத் தவிர்த்திடுங்கள். ரூம் ப்ரெஷ்னர் பயன்படுத்தி மனம் உண்டாக்குவதை விட, மல்லிகை, ரோஜா போன்ற பூக்கள் மூலம் மனம் சேர்க்கலாம் அல்லது அத்தியாவசிய எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நீங்களே இயற்கை ஸ்ப்ரே தயாரித்து பயன்படுத்தலாம்.

சின்தடிக் தோல் அறைகலன்கள்

சின்தடிக் தோல் அறைகலன்கள்

சின்தடிக் லெதர் தயாரிக்க PVC என்னும் பாலி வினைல் க்ளோரைடு பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு பிளாஸ்டிக் பாலிமர் ஆகும். இது மிகவும் ஆபத்தானது. இதில் இன்னும் பல்வேறு ஆபத்தான ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே சின்தடிக் லெதர் கொண்டு தயாரிக்கப்பட்ட அறைகலன்களை வாங்குவதை தவிர்க்கவும். மேலும் மெலமைன், மீடியம் டென்சிட்டி பைபர் போர்ட், பார்டிகில் போர்ட், போன்றவை கொண்டு தயாரிக்கப்பட்ட அறைகலன்கள் நச்சு பொருந்திய ரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டவை.

ஆகவே தரமான மரம் கொண்டு தயாரிக்கபட்ட அறைகலன்களை வாங்குவது நல்லது. வாட்டர் ப்ரூப் குஷன் மற்றும் தலையணை வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. இவற்றிலும் நச்சு கலந்த ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதனால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கிறது. நச்சுப்பொருட்கள் மற்றும் சின்தடிக் லெதர் கொண்டு தயரிக்கப்பட்ட அறைகலன்களை வாங்காமல் கவனமாக நல்ல பொருட்களை வாங்குவது நல்லது.

கேட்ஜட் மற்றும் எலெக்ட்ரானிக் உபகரணங்கள்

கேட்ஜட் மற்றும் எலெக்ட்ரானிக் உபகரணங்கள்

தற்போது நாம் உறங்கும்போது நமக்கு அருகில் நமது செல்போனை வைத்துக் கொள்வது நம் ஒவ்வொருவருக்கும் பழக்கமாகி விட்டது. மேலும் படுக்கை அறையில், கம்ப்யுட்டர், தொலைக்காட்சி போன்றவையும் வந்து விட்டன. இந்த உபகரணங்கள் மின்காந்த கதிர்விச்சை வெளிபடுத்துகின்றன. இந்த கதிர்வீச்சுகள் புற்று நோய் உண்டாக்கும் தன்மை உடையதாக இருப்பதால் தொடர்ந்து இந்த கதிர்வீச்சை எதிர்கொள்வதால் நாளடைவில் நம்மை புற்று நோய் தாக்கும் அபாயம் உள்ளது. ஆகவே இதனைத் தடுக்க, உறங்கும்போது செல்போனை பிளைட் மோடில் வைத்துக் கொள்ளலாம் அல்லது எல்லா எலெக்ட்ரானிக் உபகரணங்களையும் அணைத்து விட்டு உறங்கலாம். இதனால் புற்று நோய் பாதிப்பு தடுக்கப்படுவதோடு, ஆழ்ந்த உறக்கமும் கிடைக்கும்.

MOST READ: முட்டையில் மட்டும் நாம் கட்டாயமாக மிளகு சேர்த்து சாப்பிடுவது எதற்காக என்ற காரணம் தெரியுமா?

மெத்தை மற்றும் திரைச்சீலைகள்

மெத்தை மற்றும் திரைச்சீலைகள்

மெத்தைகள் மற்றும் திரைச்சீலைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு பல்வேறு ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவை புற்று நோயை உண்டாக்குவதாக உள்ளன. இந்த ரசாயனங்கள், மூளை வளர்ச்சியை பாதித்து, ஹார்மோன் உற்பத்தியை தடுக்கின்றன. இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க ஒரே வழி, ஆர்கானிக் மெத்தைகள் மற்றும் ஆர்கானிக் துணியால் தயாரிக்கப்பட்ட திரைச்சீலைகளை பயன்படுத்துவது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

cancer causing things you need to remove from your bedroom

you will be surprised to know that certain things in your bedroom can cause cancer too.
Story first published: Friday, November 30, 2018, 12:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more