For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  அரிய வகை முள் சீத்தா, புற்றுநோய் முதல் சர்க்கரை வரை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது...!

  |

  பூமியில் எண்ணற்ற ஜீவ ராசிகள் இருக்கின்றன. அதில் பல உயிரினங்களின் மதிப்பு இன்னும் அறியப்படாமலே இருக்கின்றன. சிறிய பூச்சிகள் முதல் பெரிய விலங்கினம் வரை ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு குணம் உண்டு. அவற்றில் சில நன்மை தர கூடியதாகவும், சில தீமை தர கூடியதாகவும் இருக்கும். இதே போலத்தான் சிறிய செடி முதல் ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ள பெரிய மரம் வரை எண்ணில் அடங்காத மருத்துவ குணங்கள் அவற்றில் ஒளிந்து கொண்டுள்ளது. இன்னும் சிலவற்றை நாம் கண்டறியாமலே இருக்கின்றோம். அத்தகைய வகையை சேர்ந்ததுதான் இந்த முள் சீத்தா மரமும். மற்ற மரங்களை போலவே இயல்பாகவே இது இருக்கும்.

  Benefits Of Soursop Leaves For Skin, Hair And Health

  ஆனால், இவை நமக்கு தரும் பயன்கள் எக்கச்சக்கம்...! ஒரே மரத்தில் இத்தனை பயன்களுமா...? என்று மூக்கின் மேல் கை வைக்கும் அளவிற்கு முள் சீத்தா பல மகத்துவம் வாய்ந்தது. இந்த பதிவில், புற்றுநோய் முதல் இதய நோய் வரை அனைத்திற்கும் உதவும் முள் சீத்தாவின் முழு மருத்துவ குணங்களையும் பற்றி அறிந்து கொண்டு, நாமும் பயன் பெறுவோம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  முற்றும் தரும் முள் சீத்தா..!

  முற்றும் தரும் முள் சீத்தா..!

  தலைப்பே இதன் குணத்தை சொல்லி விடும். உண்மைதாங்க, இந்த முள் சீத்தா மனித உடலின் அனைத்து செயல்பாட்டிற்கும் நன்கு உதவுகிறது. இவற்றில் அதிகமான ஊட்டசத்துகள் நிறைந்துள்ளது. புரதம், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், கால்சியம், வைட்டமின் எ, பொட்டாசியம், இரும்பு சத்து, வைட்டமின் பி போன்ற மூல பொருட்கள் உடலை சீராக வைக்க பயன்படுகிறது. முள் சீத்தா பழத்தை காட்டிலும் அவற்றின் இலைகள் அதிக மருத்துவ தன்மை வாய்ந்தது.

  இதய நோயை தடுக்கும் சீத்தா..!

  இதய நோயை தடுக்கும் சீத்தா..!

  இந்த முள் சீத்தாவில், அதிகமான பொட்டாசியம் உள்ளது. இது இதய பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் காக்கும். உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி இதயத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைக்கும். இந்த முள் சீத்தா இலைகளை டீ போட்டு குடித்தால் இதயம் சார்ந்த கோளாறுகளை தடுக்கலாம். அத்துடன் மன அழுத்தம், மன விரக்தி ஆகியவற்றிற்கும் தீர்வு தரும்.

  கச்சித உடல் அமைப்பிற்கு..!

  கச்சித உடல் அமைப்பிற்கு..!

  நமது உடல் மிகவும் அழகாகவும், கச்சிதமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலானோர்க்கு இருக்கின்ற எண்ணம்தான். இதை எளிமையாக பூர்த்தி செய்கிறது இந்த முள் சீத்தா. இஃது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்க செய்கிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் பி, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.

  முள் சீத்தாவும் புற்றுநோயும்..!

  முள் சீத்தாவும் புற்றுநோயும்..!

  பல வருடங்களாக செய்த ஆராய்ச்சியில் ஒரு அற்புதமான தகவல் வெளி வந்துள்ளது. அதுதான், முள் சீத்தா இலைகளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உள்ளது என்பது. இதில் உள்ள அசிடோஜெனின் (acetogenins), உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியை தந்து புற்றுநோய் செல்களை உடலில் வரவிடாமல் காக்கும். புற்றுநோய் உள்ளவர்கள் முள் சீத்தா இலைகளை டீ போட்டு குடித்து வந்தால், கீமோதெரபிக்கு சமமானதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.

  சர்க்கரை அளவை சீராக வைக்க...

  சர்க்கரை அளவை சீராக வைக்க...

  இன்று முக்கால் வாசி பேர் இந்த நீரிழிவு நோயினால்தான் பெரும் அவதி படுகின்றனர். இதற்கு ஒரு அற்புதமான தீர்வை கொடுக்கிறது முள் சீத்தா. சர்க்கரையின் அளவை இது அதிகரிக்காமல் உடலை சீராக வைக்கிறது. முள் சீத்தா டீயை மருத்துவரின் ஆலோசனை பெற்று அருந்தினால், சர்க்கரை அளவு கூடாது.

  மலச்சிக்கலை போக்கும் முள் சீத்தா...!

  மலச்சிக்கலை போக்கும் முள் சீத்தா...!

  தேவையற்ற உணவுகளை அளவுக்கு மிஞ்சி சாப்பிடுவதால் இன்று பலர் அவதிப்படும் ஒரு மிக மோசமான நிலைதான் இந்த மலசிக்கல். முள் சீத்தா இலைகள் இந்த பிரச்சினைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது. அஜீரண கோளாறுககள், தசைப்பிடிப்பு, வீக்கம் போன்றவற்றையும் குணப்படுத்தும்.

  சீரான ரத்த ஓட்டம்...

  சீரான ரத்த ஓட்டம்...

  பலருக்கு அடிக்கடி ரத்தம் கட்டி கொள்ளும். இதனால் எந்தவித செயல்பாடுகளும் செய்ய முடியாமல் போய்விடும். அவர்களுக்கென்றே இந்த முள் சீத்தா டீ இருக்கிறது. தினமும் முள் இந்த டீயை பருகி வந்தால், ரத்த ஓட்டம் சீராகும். இதில் உள்ள இரும்பு சத்து ரத்த நாளங்களுக்கு அதிக வலு தரும்.

  உடல் வலிமைக்கும் இதுவே..!

  உடல் வலிமைக்கும் இதுவே..!

  முள் சீத்தாவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், அசிடோனிஜெனின் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். மேலும் வைட்டமின் சி இதில் உள்ளதால் வெள்ளை சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய்கள் உடலில் ஏற்படாதவாறு காக்கும். அத்துடன் உறுப்புகளின் அழுத்தத்தையும் குறைக்கும்.

  பரந்து ஓடி போகும் முதுகுவலி..!

  பரந்து ஓடி போகும் முதுகுவலி..!

  ஒரே இடத்தில் உட்கார்ந்து நாம் இன்று அதிகப்படியாக வேலைகளை செய்கின்றோம். கிட்டத்தட்ட 2 அல்லது 3 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் அது முதுகு வலியை ஏற்படுத்தும். தினமும் 3/4 கப் முள் சீத்தா இலை டீ குடித்து வந்தால், முது வலி ஏற்படாமல், நிம்மதியாக இருக்கலாம்.

  நீண்ட இளமைக்கு முள் சீத்தா..!

  நீண்ட இளமைக்கு முள் சீத்தா..!

  முள் சீத்தா அருமையாக முக அழகை மேம்படுத்தும். முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, சருமத்தை இருக செய்யும். மேலும் முகத்தில் ஏதேனும் கட்டிகள், பருக்கள் இருந்தால் அவற்றிற்றையும் இது குணப்படுத்தும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் முகத்தை இளமையாக வைக்க உதவுகிறது.

  முடியின் ஆரோக்கியத்திற்கு...

  முடியின் ஆரோக்கியத்திற்கு...

  பலரின் முடி எண்ணற்ற வேதி பொருட்களை பயன்படுத்தி மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கும். அவர்களுக்கு முள் சீத்தா சிறந்த தேர்வாகும். முடி உதிர்தல், இளநரை, முடி உடைதல், பொடுகு, பேன் தொல்லை போன்ற அனைத்து முடி சார்ந்த பிரச்சினைக்கும் இது தீர்வு தருகின்றதாம்.

  டீ தயாரிக்கும் முறை...

  டீ தயாரிக்கும் முறை...

  6 காய்ந்து அல்லது ஃபிரஷ் முள் சீத்தா இலைகளை எடுத்து கொண்டு, அதனை 4 கப் நீரில் மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும். மேலும் தேவைக்கேற்ப 1 டீஸ்பூன் தேனையும் கலந்து கொள்ளலாம். 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு, வடிகட்டி குடியுங்கள்.

  இந்த டீயை எடுத்து கொள்ளும் முன் இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று குடித்தால் நன்று.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Benefits Of Soursop Leaves For Skin, Hair And Health

  Soursop tea has list of health benefits. It is used to boost the immune system, prevent the development and spreading of cancer, lower blood pressure, protect the skin..etc
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more