Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கால்களின் வலிமையை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இந்த ஆசனங்களை தினமும் செய்யுங்க...
இங்கு கால்கள் மற்றும் பாதங்களின் வலிமையை அதிகரிக்கும் சில யோகா நிலைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உடலைத் தாங்கி வலிமையுடன் வைத்துக் கொள்வதில் கால்களும், பாதங்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆனால் வயது அதிகரிக்கும் போது, கால் எலும்புகளின் ஆரோக்கியம் குறைவதோடு, கால்களின் வலிமை குறைய ஆரம்பித்து, நடக்கும் போது மிகுந்த சிரமத்தை உணர வைக்கிறது.

ஆகவே கால்கள் மற்றும் பாதங்களின் ஆரோக்கியத்தையும் வலிமையையும் அதிகரிக்க, கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதோடு, குறிப்பிட்ட சில யோகா பயிற்சிகளையும் மேற்கொண்டு வர வேண்டியது அவசியம். இக்கட்டுரையில் கால்கள் மற்றும் பாதங்களின் வலிமையை அதிகரிக்கும் சில யோகா நிலைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கருடாசனம்
கருடாசன நிலை கால்கள் மற்றும் பாதங்களின் வலிமையை அதிகரித்து, சமநிலையை மேம்படுத்தும். ஆகவே இந்த கருடாசனத்தை தினமும் தவறாமல் செய்து வாருங்கள்.

உட்டனாசனம்
இந்த ஆசனம் உடல் தோற்றத்தை மேம்படுத்தவும், பாதங்கள் மற்றும் முழங்கால் மூட்டுக்களை புத்துணர்ச்சி பெறவும் செய்யும். மேலும் இந்த ஆசனம் கணுக்கால் மற்றும் தொடைகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும்.

மலாசனம்
மலாசனத்தை ஒருவர் தினமும் செய்து வருவதன் மூலம், பாதங்கள் மற்றும் கால்கள் வலிமை அடைந்து, அவை உகந்த முறையில் செயல்படச் செய்யும்.

உட்கடாசனம்
நாற்காலியில் அமர்வது போன்ற இந்த நிலையினால், கால்களில் உள்ள முக்கியமான பெரிய தசைகள் மட்டுமின்றி, சிறிய தசைகளின் தோற்றமும் மேம்பட்டு, உடலைத் தாங்கும் கால்களின் உறுதி அதிகரிக்கும்.

அதோ முக சவனாசனம்
அதோ முக சவனாசனத்தின் போது கால்களின் வலிமை அதிகரிப்பதோடு, பாத பிரச்சனைகளும் தடுக்கப்படும். ஆகவே கால் வலி பிரச்சனை இருந்தால், இந்த ஆசனத்தை தினமும் தவறாமல் செய்து வாருங்கள்.

ஏக பாத அதோ முக சவனாசனம்
இந்த ஆசனம் கால் தசைகளின் வலிமை, நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த உதவும். எனவே இந்த ஆசனத்தை அன்றாடம் மேற்கொண்டு உங்கள் கால்களை வலிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications