Latest Updates
-
கருப்பு கவுனி தேங்காய் பால் கஞ்சியும், கறிவேப்பிலை துவையலும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்கப்போகுதாம் -
இந்த 4 ராசிக்காரங்க ஓவர் தன்னம்பிக்கையால் எப்பவும் சொதப்பிட்டே இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க.. -
சனி-சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காங்க கவனமாக இருக்கணும்! -
காரசாரமான பன்னீர் தேங்காய் மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
ஆயுத பூஜை நாளில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. துர்கையின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம்
சுக்கிரன் அஸ்தமனமாவதால் இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
Venus Combust In Libra 2026: வேத ஜோதிடத்தில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். அசுரர்களின் குருவான சுக்கிரன் மாதந்தோறும் தனது நிலையை மாற்றுவார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், தற்போது தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சுக்கிரன் அக்டோபர் 19 ஆம் தேதி அஸ்தமனமாகி பலவீனமான நிலையில் பயணிக்கிறார். அதுவும் இந்த நிலையில் சுக்கிரன் அடுத்த 10 நாட்கள் பயணிக்கவுள்ளார்.

சுக்கிரன் அஸ்தமனமாகியிருப்பதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். மேலும் சுக்கிரன் இந்த நிலையில் இருக்கும் போது நிறைய தடைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் சொந்த ராசியில் சுக்கிரனின் அஸ்தமன நிலை சில ராசிக்காரர்களுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் தொழில் முன்னேற்றம், எடுத்த வேலைகளில் வெற்றி போன்ற பல நல்ல விஷயங்கள் நடக்கலாம். இப்போது துலாம் ராசியில் சுக்கிரன் அஸ்தமனமாகியிருப்பதால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகியிருப்பதால், குடும்ப வாழ்வில் அதன் தாக்கம் காணப்படும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால், இக்காலத்தில் அது தீர்ந்து துணையுடனான உறவு வலுவடையும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நல்ல பொருள் வசதிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக ஆரோக்கிய பிரச்சனைகளால் சிரமப்பட்டு வந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ்வார்கள். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால் நல்ல உயரத்தை அடையலாம்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். பணியிடத்திலும் சரி, வீட்டிலும் சரி உங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படும். மேலும் உங்களின் வேலைகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் உங்களின் புதிய திட்டங்கள் நல்ல எதிர்பார்த்த வெற்றியைத் தரும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



