ஆயுத பூஜை நாளில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. துர்கையின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..

Ayudha Pooja 2026: நவராத்திரியின் கடைசி நாள் தான் மகா நவமி மற்றும் ஆயுத பூஜையாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் துர்கா தேவியின் சித்திதாத்ரி தேவி வழிபடப்படுகிறார். நம்பிக்கைகளின் படி, மகா நவமி நாளன்று முறையாக துர்கா தேவியை வழிபாடு செய்து வந்தால், துர்கா தேவி மனதார மகிழ்ச்சியடைந்து, வாழ்வில் செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் விரும்பிய பலன்களை வழங்குவார்.

Ayudha Pooja 2026 Things To Donate On Maha Navami According To Zodiac Signs

இது மட்டுமின்றி, ஒரு நல்ல நாளில் தானம் செய்வது மிகவும் நல்லது. இது ஒருவரது பாவத்தைக் குறைத்து, புண்ணியத்தை அதிகரிக்கும். ஜோதிட நம்பிக்கைகளின்படி, மகா நவமி அன்று ராசிக்கு ஏற்ப சில பொருட்களை தானம் செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இப்போது ஆயுத பூஜை மற்றும் மகா நவமி நாளன்று ராசிப்படி எந்த பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் மகா நவமி நாளன்று பெண்களுக்கு 21 ரூபாயை தானம் செய்ய வேண்டும். இப்படி செய்வது வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் மகா நவமி நாளன்று அரிசி அல்லது பாலை தானம் செய்வது நல்லது. இதன் மூலம் துர்கா தேவியின் அருளால் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் விலகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் மகா நவமி நாளன்று வெண்கல பாத்திரத்தை தானம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், அது நேர்மறை ஆற்றலை அதிகரித்து, துர்கா தேவியின் ஆசியைப் பெற்று தருவதாக நம்பப்படுகிறது.

கடகம்

கடக ராசிக்காரர்கள் மகா நவமி நாளன்று தண்ணீர் தானம் செய்ய வேண்டும். இது வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் மகா நவமி நாளன்று கோதுமை தானம் செய்ய வேண்டும். இது வாழ்வில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் வெற்றியை கொண்டு வருவதோடு, செழிப்பையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் மகா நவமி நாளன்று பசுக்களுக்கு தீவனம் அளிக்க வேண்டும். இது துர்கா தேவியின் ஆசியைப் பெற்றுத் தந்து, வாழ்வில் சந்தோஷத்தையும், அமைதியையும் கொண்டு வரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் மகா நவமி நாளன்று வெள்ளை நிற கைக்குட்டையை தானம் செய்ய வேண்டும். இதன் மூலம் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் குறைந்து, மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

விருச்சிகம்

விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் மகா நவமி நாளன்று வெல்லம் மற்றும் கொண்டைக்கடலையை தானம் செய்வது நல்லது. இதன் மூலம் துர்கா தேவியின் பரிபூர்ண அருள் கிடைத்து, வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் மகா நவமி நாளன்று குங்குமப்பூவை தானம் செய்ய வேண்டும். இது வாழ்வில் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து, வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

மகரம்

மகர ராசியைந் சேர்ந்தவர்கள் மகா நவமி நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இது துர்கா தேவியின் ஆசியைப் பெற்று தந்து, வாழ்வில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

கும்பம்

கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் மகா நவமி நாளன்று தங்களால் முடிந்த வரை ஏழை எளியோருக்கு தானம் செய்ய வேண்டும். இது மகிழ்ச்சியையும், மன அமைதியையும், துர்கா தேவியின் ஆசீர்வாதங்களையும் பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது.

மீனம்

மீன ராசிக்காரர்கள் மகா நவமி நாளன்று லட்டு அல்லது கடலைப்பருப்பு தானம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், துர்கையின் அருளால் வாழ்க்கை செழிப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, October 19, 2026, 12:47 [IST]
Desktop Bottom Promotion