ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க..

Gas Problem Home Remedies In Tamil: ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜைக்கு கொண்டைக்கடலை சுண்டலை செய்து படைத்து வழிபாடு செய்வது வழக்கம். என்ன தான் கொண்டைக்கடலை புரோட்டீன், நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு என்றாலும், அது வாயு தொல்லை, வயிற்று உப்புசம் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியது. ஏனெனில் இப்படியான பருப்பு, பயறு வகைகளில் உள்ள சில கார்போஹைட்ரேட்டுகளை குடலில் உள்ள பாக்டீரியாக்கள் உடைக்கும் போது வாயு உருவாகலாம். இதனால் வயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வும் ஏற்படலாம்.

Top 5 Herbal Waters for Gas And Bloating Caused By Sundal During Ayudha Pooja

இந்த ஆயுத பூஜைக்கு நீங்கள் சுண்டலை அதிகமாக சாப்பிட்டு வாயு தொல்லையால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அதிலிருந்து நல்ல நிவாரணத்தைப் பெற நம் வீட்டு சமையலறையில் உள்ள சோம்பு, சீரகம், ஓமம் போன்ற விதைகளைக் கொண்டு மூலிகை நீரைத் தயாரித்து குடித்து வரும் போது, அது அஜீரண கோளாறு, வாயு தொல்லை, வயிற்று அசௌகரியம் போன்றவற்றை தணிக்க உதவக்கூடும்.

இப்போது சுண்டல் சாப்பிட்டு வாயு தொல்லையால் சிரமப்படுவதைத் தடுக்க உதவும் சில இயற்கை பானங்களைக் காண்போம். ஒருவேளை இந்த பானங்களை குடித்தும், தொடர்ந்து வயிற்று அசௌகரியத்தை சந்தித்தால், மருத்துவரை அணுகுங்கள்.

1. ஓம நீர்

அஜீரண கோளாறுகளுக்கு இயற்கை வைத்தியத்தில் பரிந்துரைக்கப்படும் ஒரு பானம் தான் ஓம நீர். இந்த ஓம நீரை குடித்தால் வயிற்று வலி, வாயு தொல்லை, அஜீரண பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இந்த நீரை தயாரிக்க ஒரு பாத்திரத்தில் 1/2 டீஸ்பூன் ஓம விதைகளை எடுத்துக் கொண்டு, அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டினால், ஓம நீர் தயார். இந்த ஓம நீர் கடைகளிலும் விற்கப்படுகிறது.

Top 5 Herbal Waters for Gas And Bloating Caused By Sundal During Ayudha Pooja

2. சோம்பு நீர்

வயிற்று அசௌரியத்தால் அதிகம் சிரமப்பட்டு வந்தால், சோம்பு நீரை தயாரித்து குடிக்க நல்ல நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் சோம்பு வயிற்று உப்புசத்தை நீக்கும் மற்றும் குடல் தசைகளை தளர்த்த உதவுகிறது. எனவே இந்த சோம்பு விதைகளை 1 டீஸ்பூன் எடுத்து, 1 டம்ளர் சுடுநீரில் போட்டு ஊற வைத்து, பின் அந்த நீரை வடிகட்டி குடியுங்கள். இதன் மூலம் வாயு தொல்லையில் இருந்து உடனடி நிவாரணத்தைப் பெறலாம்.

3. சீரக நீர்

சீரகம் இயற்கையாகவே வாயு வெளியேற்றத்திற்கு உதவுகிறது. இது தவிர வயிற்று உப்புசம் மற்றும் அஜீரண கோளாறுகளையும் சரிசெய்ய உதவுகிறது. இப்படிப்பட்ட சீரக விதைகளை 1/2 டீஸ்பூன் எடுத்து 1 டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி பருகினால், வாயு தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைப்பதைக் காணலாம்.

4. பெருங்காய நீர்

பருப்பு வகைகளால் வாயு உடம்பில் ஏறக்கூடாது என்பதற்காகவே, சமைக்கும் போதே பெருங்காயம் சேர்க்கப்படுகிறது. ஒருவேளை இதைத் தாண்டியும் சுண்டல் சாப்பிட்டு வாயு தொல்லையால் கஷ்டப்பட்டு வந்தால், ஒரு சிட்டிகை பெருங்காயத் தூளை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலந்து குடியுங்கள். இதனால் வாயு தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Top 5 Herbal Waters for Gas And Bloating Caused By Sundal During Ayudha Pooja

5. இஞ்சி நீர்

இஞ்சியில் ஜிஞ்சரோல்கள் என்னும் சேர்மங்கள் உள்ளன. இது வயிற்றில் இருந்து உணவு இரைப்பை வழியாக சீராக வெளியேற உதவுகின்றன. மேலும் இஞ்சி குடல் நொதித்தலைக் குறைத்து, குடல் அழுத்தத்தைத் தளர்த்துகிறது. எனவே சுண்டல் சாப்பிட்டு வாயு தொல்லையால் கஷ்டப்பட்டு கொண்டிருந்தால், இஞ்சியைத் துருவி சுடுநீரில் போட்டு 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் குடியுங்கள். இதன் மூலம் வாயு தொல்லையில் இருந்து விடுபடுவதைக் காணலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, October 19, 2026, 19:10 [IST]
Desktop Bottom Promotion