Latest Updates
-
காரசாரமான பன்னீர் தேங்காய் மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
ஆயுத பூஜை நாளில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. துர்கையின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
சனி-சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காங்க கவனமாக இருக்கணும்!
Saturn Sun Make Shadashtak Yog 2026: நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் சேர்த்து யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். மேலும் இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார்.

அந்த வகையில் சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் நுழைந்தார். இந்த துலாம் ராசியில் சூரியன் நீச்ச நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ராசிக்கு சூரியன் நுழையும் போது, நீதிமான் சனி பகவான் மீன ராசியில் இருப்பதால், சூரியன் மற்றும் சனி பகவானின் நிலையால் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது.
ஜோதிடத்தில் ஷடாஷ்டக யோகமானது இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 6 ஆம் மற்றும் 8 ஆம் வீடுகளில் இருக்கும் போது உருவாகிறது. பொதுவாக இந்த யோகம் உடல் மற்றும் மன ஆரேதாக்கியம், உறவு மற்றும் குடும்பம், தொழில் மற்றும் நிதி நிலையில் பிரச்சனைகளை உருவாக்கக்கூடும்.
அதுவும் இரண்டு பகை கிரகங்களால் இந்த யோகம் உருவாகும் போது தீய பலன்கள் சற்று அதிகமாக இருக்கும். அதுவே சுப மற்றும் நட்பு கிரகங்களால் இந்த யோகம் உருவானால், அதன் தீய விளைவுகள் குறைவாக இருக்கும். இப்போது சனி சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கன்னி
சனி சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். கூட்டு தொழில் செய்பவர்கள் பரிவர்த்தனைகளை செய்யும் போது அல்லது புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களிடம் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். திருமண தடைகளும் ஏற்படும்.
துலாம்
சனி சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகத்தால் துலாம் ராசிக்காரர்கள் வேலை விஷங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலையில் பொறுப்புகள் அதிகரிப்பதால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். எந்த ஒரு அவசர முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக புதிய பிரச்சனைகள் எழும். எந்த ஒரு திட்டத்திலும் பணத்தை முதலீடு செய்யும் முன் முழுமையாக ஆராய்ந்த பின் முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக நண்பர்களை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும்.
தனுசு
சனி சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேர்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பண விஷயங்களில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்கலாம். அபாயகரமான முதலீடுகுள் மற்றும் சூதாட்டத்தில் இருந்து விலகி இருப்பது நல்லது. முக்கியமாக இக்காலத்தில் பழை பிரச்சனைகள் மீண்டும் எழுந்து, சிக்கலை உண்டாக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


