Latest Updates
-
ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க.. -
சனி-சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காங்க கவனமாக இருக்கணும்! -
காரசாரமான பன்னீர் தேங்காய் மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
ஆயுத பூஜை நாளில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. துர்கையின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள்
இந்த 4 ராசிக்காரங்க ஓவர் தன்னம்பிக்கையால் எப்பவும் சொதப்பிட்டே இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய மிகவும் அவசியமான குணங்களில் ஒன்று தன்னம்பிக்கையாகும். தன்னம்பிக்கை ஒருவரின் வளர்ச்சிக்கு மிகவம் அத்தியாவசியமான ஒன்றாகும். ஒருவரின் தன்னம்பிக்கை கவர்ச்சிகரமான குணமாக இருந்தாலும், அது எல்லை மீறும் போது அசட்டு துணிச்சலாக மாறிவிடுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில், சில ராசிகள் இயல்பாகவே தைரியமானவர்களாகவும், மன உறுதி கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இது சில சமயங்களில் ஊக்கமளிப்பதாக இருந்தாலும், அது மிகைப்படுத்தப்பட்ட ஓவர் நம்பிக்கைக்கு வழிவகுக்கக்கூடும். இந்த அதீத தன்னம்பிக்கை அவர்களுக்கு தேவையற்ற சிக்கல்களையும், ஆபத்துகளையும் ஏற்படுத்தலாம். இது அவர்களின் முன்னேற்றத்திற்க்கு பல சமயங்களில் பெரிய தடைகல்லாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களின் இவர் தன்னம்பிக்கையால் பல விஷயங்களை சொதப்புவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
தன்னம்பிக்கையைப் பொறுத்தவரை, சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் முதலிடத்தில் இருக்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் இயல்பான தலைமைப் பண்பு, வசீகரம் மற்றும் துணிச்சலான ஆளுமைக்காக அறியப்படுகிறார்கள். தாங்கள் ஜெயிப்பதற்காகவே பிறந்ததாக அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள், பல சமயங்களில் ஜெயிக்கவும் செய்கிறார்கள். ஆனால், சிம்ம ராசிக்காரர்கள் சில சமயங்களில் தாங்கள் எப்போதும் சரியானவர்கள் அல்லது அனைவரையும் விட சிறந்தவர்கள் என்று கருதி, அதீத தன்னம்பிக்கை கொள்ளக்கூடும். அவர்கள் விமர்சனங்களைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு, அவர்களைப் பற்றிய மற்றவர்களின் கருத்துக்களைப் புறக்கணிப்பார்கள்.
மேஷம்
செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள், மனக்கிளர்ச்சி மிக்கவர்களாகவும், ஆற்றல் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். மேஷ ராசியினர் தாங்கள் நினைத்ததை எல்லாம் செய்துவிட முடியும் என்று கண்மூடித்தனமாக நம்புவார்கள். அவர்களின் தன்னம்பிக்கை, அவர்களுடைய ஆற்றல் மற்றும் இயல்பிலிருந்தே உருவாகிறது. ஆனால், அவர்கள் சவால்களைக் குறைத்து மதிப்பிடும்போதோ அல்லது மற்றவர்களின் ஆலோசனைகளைப் புறக்கணிக்கும்போதோ, இந்த நம்பிக்கை அதீத தன்னம்பிக்கையாக மாறிவிடும். அவர்கள் தாங்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தாங்களே சமாளித்துவிடுவோம் என்று கருதி, சிந்திக்காமல் செயல்படுவார்கள்.
தனுசு
குருபகவானால் ஆளப்படும் தனுசு ராசிக்காரர்கள் சாகச குணம் கொண்டவர்கள் மற்றும் தங்கள் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர்கள். தனுசு ராசியினர் தங்கள் நம்பிக்கைகளில் மிகுந்த உறுதியுடன் இருப்பார்கள், மேலும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல எப்போதும் நடந்து கொள்வார்கள். அவர்கள் பெரிய கனவுகளைக் காண்பதையும், பெரிய அளவில் திட்டமிடுவதையும் விரும்புவார்கள். அவர்கள் யோசிக்காமல் பேசும்போதும் அல்லது தங்களால் செய்ய முடியாததை வாக்குறுதியளிக்கும்போதும், இந்த நம்பிக்கை சில சமயங்களில் விபரீதமாக மாறக்கூடும். அவர்களின் உற்சாகம், அவர்களை எதார்த்தத்தை பார்க்க விடாமல் தடுக்கிறது. வாழ்க்கை எவ்வளவு கடினமானது அவர்கள் ஒருபோதும் உணரமாட்டார்கள்.
மிதுனம்
கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலிகள், நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் மற்றும் பலவித யோசனைகள் கொண்டவர்கள். மிதுன ராசியினர் பெரும்பாலும் தங்கள் தகவல் தொடர்புத் திறனாலும் அறிவாற்றலாலும் மற்றவர்களைக் கவர்வார்கள். அவர்கள் தங்கள் உரையாடல்களில் நம்பிக்கையுடன் இருப்பார்கள் மற்றும் சமூக நிகழ்வுகளில் தலைமை ஏற்க விரும்புவார்கள். ஆனால் அவர்களின் விரைவான சிந்தனை, பல சமயங்களில் அதீத தன்னம்பிக்கையாக மாறக்கூடும். அவர்கள் தங்களுக்கு அரைகுறையாகப் புரிந்த தலைப்புகளைப் பற்றிப் பேசலாம் அல்லது அவர்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்கலாம். அவர்களிடம் கூர்மையான புத்தி இருந்தாலும், அவர்களின் அதீத தன்னம்பிக்கை சில சமயங்களில் சொதப்பல்களுக்கு வழிவகுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

