1 கைப்பிடி கொடாமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க..

Posted By:

Kothamalli Thakkali Chutney Recipe In Tamil: காலையில் இட்லிக்கு நல்ல சுவையான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? வீட்டில் கொத்தமல்லி நிறைய உள்ளதா? அப்படியானால் அந்த கொத்தமல்லியுடன், தக்காளியையும் சேர்த்து வதக்கி அரைத்து சட்னி செய்யுங்கள். இந்த சுவையில் மல்லி சட்னியை செய்து கொடுக்கும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த சட்னயை செய்து கொடுக்கும் போது, அவர்கள் சட்னியை அள்ளிப் போட்டு சாப்பிடுவார்கள்.

Kothamalli Thakkali Chutney How To Make This Healthy Green Chutney For Idli Dosa

உங்களுக்கு இந்த கொத்தமல்லி தக்காளி சட்னி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி மல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 7
* பூண்டு - 3 பல்
* வரமிளகாய் - 1
* பச்சை மிளகாய் - 3
* புளி - சிறிய துண்டு
* தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து, அதோடு புளியையும் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லியை சேர்த்து, துருவிய தேங்காயையும் சேர்த்து, கொத்தமல்லி சுருங்கும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் சிறிது நீரை ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், கொத்தமல்லி தக்காளி சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, October 19, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion