3 மாதம் கேரட் ஜூஸில் சிறிது வேப்பிலை சாற்றினை கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ பலரும் முனைகின்றனர். இதற்காக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்கள், பானங்கள் போன்றவற்றை அன்றாடம் தங்களது உணவில் சேர்த்து வருகின்றனர். அதில் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுப் பொருட்கள் தான் கேரட் மற்றும் வேப்பிலை.

இந்த இரண்டு பொருட்களையும் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடித்து வந்தால், அதில் உள்ள மருத்துவ குணங்களால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இங்கு அந்த கேரட் வேப்பிலை ஜூஸை எப்படி தயாரிப்பது என்றும், அதைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜூஸ் தயாரிக்கும் முறை

ஜூஸ் தயாரிக்கும் முறை

2 டேபிள் ஸ்பூன் வேப்பிலை சாற்றினை, 4 டேபிள் ஸ்பூன் கேரட் ஜுஸ் உடன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் உணவு உட்கொண்ட பின் குடிக்க வேண்டும். இப்படி மூன்று மாதத்திற்கு குடித்து வந்தால், உடலின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை நன்கு உணர முடியும்.

குடல் சுத்தமாகும்

குடல் சுத்தமாகும்

இந்த ஜூஸில் உள்ள லிமோனாய்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், குடலில் உள்ள டாக்ஸின்களை சுத்தம் செய்து வெளியேற்றி, வயிற்று பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

புத்துணர்ச்சியான சருமம்

புத்துணர்ச்சியான சருமம்

இந்த பானத்தில் உள்ள வளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து, சரும செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்து, சருமத்தை பொலிவாக்கும்.

கண் பார்வை மேம்படும்

கண் பார்வை மேம்படும்

இந்த பானத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது கண் பார்வை நரம்புகளை வலிமைப்படுத்தி, கண் பார்வையை மேம்படுத்தும்.

காய்ச்சல் தடுக்கப்படும்

காய்ச்சல் தடுக்கப்படும்

இந்த ஜூஸில் உள்ள நொதிகள் ஆன்டி-பாக்டீரியல் தன்மையுடன் உள்ளதால், இது உடலில் உள்ள குறிப்பிட்ட நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, காய்ச்சல் மற்றும் இதர தொற்றுகளில் இருந்து தடுக்கும்.

பசியின்மை நீங்கும்

பசியின்மை நீங்கும்

இந்த ஜூஸில் உள்ள ப்ளேவோனாய்டுகள் செரிமானத்தை மேம்படுத்தி, பசியின்மையைப் போக்கும். இதனால் பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த ஜூஸைக் குடிப்பது மிகவும் நல்லது.

கொலஸ்ட்ரால் குறையும்

கொலஸ்ட்ரால் குறையும்

இந்த பானத்தில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைத்து, கொலஸ்ட்ரால் பிரச்சனையை கட்டுக்குள் வைக்கும்.

கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்

கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்

இந்த பானத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கல்லீரலை சுத்தம் செய்து, கல்லீரலின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ளும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Happens When You Drink Neem Juice With Carrot Juice?

Check out the amazing health benefits of neem and carrot juice, that can be made at home!
Story first published: Friday, February 10, 2017, 16:15 [IST]
Subscribe Newsletter