இளநீரை அப்படியே குடிப்பதை விட தேன் கலந்து குடிப்பதே நல்லதுன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நம் அனைவருக்குமே இளநீர் ஏராளமான நன்மைகளைக் கொண்ட பானம் என்பது தெரியும். தற்போது நோய்கள் அதிகம் பரவும் சுற்றுச்சூழலில் வாழ்ந்து வருவதால், உடல் ஆரோக்கியத்தின் மீது கட்டாயம் அக்கறை காட்ட வேண்டிய நிலையில் உள்ளோம்.

What Happens When You Drink Coconut Water With Honey

இல்லாவிட்டால், நோய்களை உடலைத் தாக்கி ஆரோக்கியத்தை கெடுத்துவிடும். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் இளநீர் பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் இந்த இளநீருடன் தேன் கலந்து குடித்தால், உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.

சரி, இப்போது இளநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்துக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடிக்கும் முறை:

குடிக்கும் முறை:

ஒரு டம்ளர் இளநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

முதுமை தடுக்கப்படும்

முதுமை தடுக்கப்படும்

இளநீருடன் தேன் கலந்து குடிக்கும் போது, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, செல்களை ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து, விரைவில் முதுமை தோற்றம் வருவதைத் தடுக்கும்.

செரிமானம் மேம்படும்

செரிமானம் மேம்படும்

இளநீரில் தேன் கலந்து குடிப்பதால், குடலியக்கம் சீராகும் மற்றும் வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான அமில சுரப்பு குறையும். இதனால் அசிடிட்டி பிரச்சனை தடுக்கப்படும்.

தொற்றுகள் நீங்கும்

தொற்றுகள் நீங்கும்

இளநீருடன் தேன் கலந்து குடிக்கும் போது, உடலினுள் உள்ள அழற்சி குறைவதோடு, தொற்றுக்கிருமிகளும் அழிக்கப்படும்.

கொலஸ்ட்ரால் குறையும்

கொலஸ்ட்ரால் குறையும்

இந்த இயற்கை பானம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இரத்தக் குழாய்களில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுத்து, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

நோயெதிர்ப்பு மண்டலம்

நோயெதிர்ப்பு மண்டலம்

இளநீர் தேன் கலவையில் உள்ள ஏராளமான வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும், உடலினுள் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

சிறுநீரகங்கள் சுத்தமாகும்

சிறுநீரகங்கள் சுத்தமாகும்

இந்த இயற்கை பானத்தை வெறும் வயிற்றில் குடிப்பதால், சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு, சிறுநீரகங்கள் ஆரோக்கிமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

மலச்சிக்கல் நீங்கும்

மலச்சிக்கல் நீங்கும்

இளநீரில் தேன் கலந்து குடிப்பதால், குடலியக்கத்தின் செயல்பாடு மேம்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Happens When You Drink Coconut Water With Honey

Have a look at some of the health benefits of this remedy, here.
Story first published: Thursday, March 16, 2017, 10:10 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter