தண்ணீரை ப்ளாஸ்டிக் பாட்டிலில் குடிக்கிறீர்களா அப்போ கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!

Posted By:
Subscribe to Boldsky

குடிக்கும் நீரைக் கூட விலைக்கு வாங்கக்கூடிய நிலமைக்கு வந்துவிட்டோம். சுத்தம்,நாகரிகம் என்ற பெயரில் வெளியிடங்களில் பாட்டில் அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கி பருகுவதையே பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அதை விட அந்த பாட்டிலையே மீண்டும் தண்ணீர் பிடிக்க, குடிக்க என்று ரியூஸ் செய்கிறோம். இப்படி ரீ யூஸ் செய்வது உடல்நலனுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும்.

What happens when we reuse plastic water bottles

Image Courtesy

நீங்கள் ஏன் ப்ளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்தக்கூடாது என்பதற்கு சில உதாரணங்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாக்டீரியா :

பாக்டீரியா :

மற்ற பொருட்களை விட ப்ளாஸ்டிக் பொருட்களில் அதிகப்படியான பாக்டீரியா வளரும். அதனை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் பாக்டீரியா அதிலேயே தங்கி பல்கிப் பெருகும்.

நமக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டால் டயேரியா வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்படும்.

கெமிக்கல் :

கெமிக்கல் :

சந்தையில் கிடைக்க கூடிய பெரும்பாலான மினரல் வாட்டர் பாட்டில்களில் பாலிதைலின் டெரிப்தலேட் Polyethylene Terephthalate என்ற கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது.

இதனை பயன்படுத்தியிருந்தால் அந்த பொருளை ரீ யூஸ் செய்யக்கூடாது. தொடர்ந்து ரீயூஸ் செய்வதால் அந்த கெமிக்கல் உங்கள் உடலுக்குள் சென்றிடும். இந்த கெமிக்கல் நம் உடலில் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தூண்டிவிடும்.

பிபிஏ( BPA) :

பிபிஏ( BPA) :

பெரும்பாலான ப்ளாஸ்டிக் பொருட்களில் பிபிஏ இருக்கும். வாட்டர் பாட்டில் மட்டுமல்லாது, குழந்தைகள் விளையாடும் ப்ளாஸ்டிக் பொம்மைகளில் கூட இந்த கெமிக்கல் இருக்கிறது.

முதல் முறை ப்ளாஸ்டிக் பாட்டிலில் குடிக்கும் போது இந்த கெமிக்கலின் அளவு குறைவாக இருக்கும். இதனையே நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது, பாட்டிலில் இருக்கும் கெமிக்கல் தண்ணீரோடு கலந்து நம் உடலுக்குள் சென்றிடும்.

அப்படிச் செல்லும் கெமிக்கலால் நமக்கு ஹார்மோன் மாற்றம் உண்டாகும், இதனால் இதயம், நரம்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

சூழலுக்கும் கேடு :

சூழலுக்கும் கேடு :

ப்ளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் குடிப்பதால் நம் உடலுக்கு மட்டுமல்ல இந்த சுற்றுச்சூழலுக்கும் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தண்ணீர் பாட்டில் மட்டுமின்றி சோடா பாட்டில், ஜூஸ் பாட்டில் போன்ற எல்லாவற்றிலுமே கெமிக்கல் இருக்கிறது. இவற்றை ஒரு முறை பயன்படுத்துவதால் உடல் நலனுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து ஓரளவுக்கு தப்பித்தாலும் அவற்றை அப்புறப்படுத்தில் நாம் காட்டும் மெத்தனம் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும்.

பாதுகாப்பான பாட்டில் :

பாதுகாப்பான பாட்டில் :

பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்வது அவசியமானது ஆனால் ப்ளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் சில வழிகள் இருக்கிறது.

குறைந்த அடர்த்தியில் பாலிதைலின் இருக்கும் பாட்டில் பயன்படுத்தலாம். சந்தையில் இருக்கும் இயற்கை அங்காடியில் கிடைக்கும். இதைத் தவிர ஸ்டீல் அல்லது அலுமினியம்,க்ளாஸ் பாட்டிலில் தண்ணீரை கொண்டு செல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What happens when we reuse plastic water bottles

What happens when we reuse plastic water bottles
Story first published: Wednesday, September 13, 2017, 11:35 [IST]
Subscribe Newsletter