For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களின் அந்தரப் பகுதியில் ஏன் நாற்றம் வருகிறது? அதற்கு காரணம் என்ன?

பெண்களின் அந்தரப் பகுதியில் ஏன் நாற்றம் வருகிறது? அதற்கு காரணம் என்ன என்பதற்கான விளக்கங்கள்!!

By Divyalakshmi Soundarrajan
|

பெண்கள் உடலின் அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் துர்நாற்றம் அவர்களது உடல் நிலையை குறிக்கும். அந்த நாற்றம் வாழ்க்கை முறையைப் பொருத்தும், உணவுப் பழக்கத்தை பொருத்தும், மற்ற சில காரணங்களாலும் மாறிக்கொண்டே இருக்கும். உடலில் பாக்டீரியாக்கள் ஆரோக்கியமாக இருந்தாலும், ஆரோக்கியமாக இல்லை என்றாலும் கூட நாற்றம் வித்தியாசம் தெரியும்.

Different Vaginal Odours & What They Indicate

ஆரோக்கியமான அந்தரங்க பகுதியின் பி.எச். அளவானது 4.5 ஆகும். துர்நாற்றமானது பாக்டீரியாக்களில் இருந்தும் ஒரு வகை திரவத்தில் இருந்தும் வெளிப்படும். துர்நாற்றத்தோடு சேர்த்து வலி மற்றும் எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.

இங்கே சில வகை துர்நாற்றங்கள் எந்த உடல் உபாதையை குறிக்கிறது என்று கொடுப்பட்டுள்ளது. வாருங்கள் இப்போது அவற்றைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழுகிய மீன் நாற்றம்

அழுகிய மீன் நாற்றம்

இந்த நாற்றம் இருந்தால் பாக்டீரியா வஜினோசிஸ் அல்லது ட்ரிகோமோனியாசிஸ் போன்ற தொற்றுநோய்களின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, உடனே மருத்துவரை அணுகி தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஈஸ்ட் நாற்றம்

ஈஸ்ட் நாற்றம்

ஈஸ்ட் தொற்று ஏற்பட்டிருந்தால் கூட அந்த இடத்தில் நாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரிப்புடன் கூடிய நாற்றம் ஏற்பட்டால் அது நிச்சயம் ஈஸ்ட் தொற்றாகத் தான் இருக்கும். எனவே, கவனமாக இருங்கள்.

 அம்மோனியா

அம்மோனியா

சிறுநீர் பாதையில் நோய் தாக்கம், குடல் கசிவு மற்றும் பாக்டீரியா வோஜினோசிஸ் போன்றவையும் கூட அம்மோனியா வாசனை போலவே தோற்றமளிக்கும். இதற்கு தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். மேலும், மருத்துவரை அணுகுவது சிறந்தது.

ஊசிப்போன நாற்றம்

ஊசிப்போன நாற்றம்

உடற்பயிற்சி மற்றும் அதிகமான உடல் வேலையில் ஈடுபடும் போது ஊசிப் போன நாற்றம் ஏற்படக்கூடும். அந்த நாற்றத்தைக் குறைகக விரும்பினால் அந்தரங்கப் பகுதியில் இருக்கும் முடியினை நீக்கிவிட்டு நன்கு கழுவி விட வேண்டும்.

மாதவிடாய் நாற்றம்

மாதவிடாய் நாற்றம்

மாதவிடாய் காலங்களில் வெளியேறும் இரத்தத்தின் நாற்றம் அந்த பகுதிகளில் நிச்சயம் ஏற்பட தான் செய்யும். அதிலும், சற்று மாறுபட்ட நாற்றமாக இருந்தால் அது இரும்புச் சத்தின் நாற்றமாகக் கூட இருக்கலாம்.

ப்ளீச் நாற்றம்

ப்ளீச் நாற்றம்

சில சமயங்களில் ப்ளீச் நாற்றம் வரக்கூடும். இந்த நாற்றம் உடலுறவில் ஈடுபட்டப் பின் ஏற்படக்கூடியது. இதற்குக் காரணம் லூப்ரிகண்டுகள் மற்றும் உபயோகிக்கும் காண்டமை பொருத்ததாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Different Vaginal Odours & What They Indicate

Different Vaginal Odours & What They Indicate,
Story first published: Friday, May 26, 2017, 12:15 [IST]
Desktop Bottom Promotion