நீங்கள் சைவம் என்று நினைத்து சாப்பிடும் இந்த உணவுகள் உண்மையில் அசைவம் என தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

நாம் சாப்பிடும் உணவை சைவ உணவு மற்றும் அசைவ உணவு என இரு வகைகளாக பிரிக்கலாம். சிலர் சைவ உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் உண்மையில் நாம் சைவம் என நினைத்து சாப்பிடும் அனைத்து உணவுகளும் சைவம் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? இந்த உணவுகள் நாம் பெரும்பாலும் ஏன் தினசரி உபயோகப்படுத்தும் உணவு பொருட்கள் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாலட்

சாலட்

நீங்கள் விரும்பி ஆர்டர் செய்யும் வெஜிடபிள் சாலட்டில் காய்கறிகள் மட்டும் தான் உள்ளது என நீங்கள் நினைத்து கொண்டிருக்கிறீர்கள். அது உண்மை தான்! ஆனால் சாலட்டில் சுவைக்காக சேர்க்கப்படும் சாஸில் என்ன உள்ளது என தெரியுமா? சுவைக்காக அதில் முட்டை சேர்க்கப்படுகிறது.

எனவே நீங்கள் இனிமேல் சாஸ் வாங்கும் போது அதன் லேபிளை செக் செய்து வாங்குங்கள். முக்கியமாக அது இறக்குமதி செய்யப்பட்டதா என்பதை கவனிக்க வேண்டியது அவசியம்.

சூப்!

சூப்!

சூப் என்றால் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அதில் உள்ள காரம், சுவை என அனைத்தும் பிடிக்குமா? நீங்கள் ஆர்டர் செய்யும் சூப்பிற்கு தரப்படும் சாஸில் மீன் கலந்திருக்கும் என தெரியுமா? இனி மேல் அந்த சாஸ் பற்றி கேட்டறிந்து பின்னர் சாப்பிடுங்கள்.

சீஸ்

சீஸ்

இன்று நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகளில் இருக்கும் முக்கிய பொருளே சீஸ் தான். சீஸ் இல்லாத உணவா என கேட்கும் விதமாக தோசையில் இருந்து பிட்ஸா வரை அனைத்திலும் சீஸ் கலந்துள்ளது.

இதில் என்சைமஸ் (enzymes) என்ற விலங்கு கொழுப்பு அடங்கியுள்ளது. லேபிளில் இதனை பரிசோதனை செய்து வாங்க வேண்டியது அவசியம்.

ஜெல்லி

ஜெல்லி

ஜெல்லியை பார்த்தாலே உங்களது வாயில் எச்சில் ஊறுகிறதா? ஜெல்லியில் முக்கியமாக பயன்படுத்தப்படும் பொருள் ஜெலட்டின் பவுடர் என உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த ஜெலட்டின் பவுடர் முற்றிலும் விலங்கு கொழுப்புகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது ஜெலட்டின் பவுடருக்கு பதிலாக சில கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இதனை பரிசோதனை செய்து வாங்க வேண்டியது அவசியம்.

எண்ணெய்

எண்ணெய்

உங்கள் இதயத்திற்கு நல்லது என விளம்பரத்தில் நீங்கள் காணும் ஒமேகா 3 எண்ணெய்களில் மீன் எண்ணெய் கலந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இது இதயத்திற்க்கும் நல்லதல்ல.

நாண்

நாண்

நீங்கள் நாண் சைவம் தான் என நினைத்துக்கொண்டிருப்பீர்கள்...! நாண் எப்படி அசைவமாகும் என கேள்வியும் கேட்பீர்கள்.. ஆனால் நாண் பசைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இதில் சிலர் முட்டை சேர்க்கிறார்கள்.

சக்கரை

சக்கரை

சக்கரையில் சுத்திகரிக்கப்பட்ட சக்கரையை விரும்புவரா நீங்கள்! ஆம் என்றால் நீங்கள் சாப்பிடும் சக்கரையில் கூட அசைவம் இருக்கிறது. சக்கரையை சுத்திகரிக்க நெச்சுரல் கார்பன் பயன்படுத்தப்படுகிறது. இது விலங்குகளின் எலும்புகளில் இருந்து தான் கிடைக்கிறது என தெரியுமா?

இனிமேல் சக்கரை வாங்குவது என்றால் சுத்திகரிக்கபடாத சக்கரை வாங்குங்கள் இல்லையெல் வெல்லத்திற்கு மாறுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

These Common Vegetarian Foods That are Actually Nonveg

These Common Vegetarian Foods That are Actually Nonveg
Story first published: Tuesday, July 25, 2017, 9:46 [IST]