இந்த ஏழு சைலண்ட் கில்லர்களை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உள்ளுறுப்பில் ஏற்படும் சில மாற்றங்களை எல்லாம் அறிகுறிகளாக வெளிப்படும். அப்போதே அதனைக் கண்டறிந்து உரிய சிகிச்சைமுறைகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

Scary disease without symptoms

என் வேலையில் நான் கவனமாக இருக்கிறேன் என்று சொல்லி அலட்சியப்போக்குடன் செயல்பட்டால் பிரச்சனை பெரிதாகி உயிருக்கே ஆபத்தாய் முடிந்திடும். சில பெரும் பிரச்சனைகள் சத்தமின்றி அதவாது எந்த வித அறிகுறிகளும் தெரியாது உங்களைத் தாக்கும் சில ஆபத்தான நோய்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சைலண்ட் கில்லர் :

சைலண்ட் கில்லர் :

இது ஒரு சைலண்ட் கில்லர் என்றே சொல்லலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பதனால் பல்வேறு உடற்பிரச்சனைகள் பின்னாடியே தொற்றிக் கொள்ளும். இதனை சரியான நேரத்தில் கண்டு கொள்ளாது, உரிய சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால் மாரடைப்பு, பக்கவதாம் உள்ளிட்டவை ஏற்படும்.

ரத்தக்கொதிப்பு இருப்பது சர்வ சாதரணமானது தான் என்ற போக்கு இன்று நம்மிடையே பலருக்கும் இருக்கிறது. ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து நீங்கள் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

கொழுப்பு :

கொழுப்பு :

உடலில் சேரும் அதீத கொழுப்பும் ஆபத்தானது. குழந்தைப் பருவத்திலிருந்தே குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும். குண்டாக இருந்தால் தான் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களை பருமன் ஆக்குவது பெற்றோர்கள் தான்.

உடலில் சேரும் கெட்ட கொழுப்புகள், ரத்த நாளங்களில் படிந்து மாரடைப்பு வருவதற்கு வழி செய்திடும்.

ஆகவே, குண்டாக இருப்பது தான் ஆரோக்கியமானது என்று நினைப்பதை கைவிடுங்கள். உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும். இதைத் தாண்டி அதிகமானால் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

இன்றைக்கு பரவலாக பெரும்பாலானோருக்கு பரவிக் கொண்டிருக்கும் நோய் சர்க்கரை நோய். இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால் சர்க்கரை நோய் வயது வித்யாசமின்றி பலருக்கும் வருகிறது.

இதன் அறிகுறிகள் உடனடியாக உங்களுக்கு வெளியில் தெரியாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உங்களின் ரத்தச் சர்க்கரை அளவை பரிசோதிப்பது நல்லது. திடீரென பெரிய பிரச்சனையில் வந்து முடியும் போது கவனிப்பதை விட முன்கூட்டியே கவனிப்பது நன்று.

நுரையீரல் புற்றுநோய் :

நுரையீரல் புற்றுநோய் :

அமெரிக்க புற்றுநோய் கழகத்தின் அறிக்கையின் படி ஒவ்வொரு ஆண்டும் நுரையிரல் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளியில் அறிகுறி தெரிவதற்குள் அது உள்ளேயே பல்மடங்கு பல்கிப் பெருகுவதால் இப்பிரச்சனை உண்டாகிறது.

ஹெப்படைட்டீஸ் சி :

ஹெப்படைட்டீஸ் சி :

இதுவும் நுரையிரலை பாதிக்கும் ஓர் நோ தான். இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டால் நுரையீரல் பாதிப்படையும் மேலும் இதனால் மரணம் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புகள் உண்டு.

போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட வாய்புண்டு.

பால்விணை நோய் :

பால்விணை நோய் :

பல நபர்களிடத்தில் உறவு கொள்வதால் உண்டாகும் நோய் இது பாபிலோமா வைரஸ் மூலமாக இது பரவுகிறது.

இந்த வைரஸ் தாக்கினால் அதன் தாக்கம் அவ்வளவாக வெளியில் தெரியாது, லேசான அலர்ஜி போன்றோ அல்லது செரிமானப்பிரச்சனை ஏற்படுவது போன்றே தான் இருக்கும் ஆனால் இந்த வைரஸ் நம் செல்களின் வளர்ச்சியையே திசை மாற்றும் திறன் கொண்டது.

சின்ன சின்ன பிரச்சனைகள் என்று நாம் சாதரணமாக கண்டுகொள்ளாமல் விடுவது புற்றுநோய் ஏற்படுவதற்கு வழிவகை செய்திடும்.

எலும்புத் தேய்மானம் :

எலும்புத் தேய்மானம் :

எலும்பு பலவீனமடைந்து உடையும் போது தான் பலரும் தங்களுக்கு எலும்புத்தேய்மானம் இருக்கிறதென்றே அறிகிறார்கள். இது பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படும் என்றாலும் புகைப்பழக்கம், மது அருந்துதல், அதீத கொழுப்பு, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, அதிகப்படியான மருந்துகளை உட்கொள்வது,ஸ்டிராய்டு பயன்படுத்துவது போன்ற காரணங்களால் இப்பிரச்சனை ஏற்படும்.

பெரும்பாலும் உடல் அலுப்பாக இருக்கும், கை கால்களில் வலி உண்டாகும். ஆனால் இதனை யாரும் அவ்வளவு பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Scary disease without symptoms

Scary disease without symptoms
Story first published: Friday, October 6, 2017, 15:35 [IST]