செரிமான மண்டலம் சுத்தமாகி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்பட இத தினமும் கொஞ்சம் குடிங்க...

Posted By:
Subscribe to Boldsky

உடலில் செரிமான மண்டலம் மிகவும் முக்கியமானது. இது சரியாக இயங்கினால் தான், உண்ணும் உணவுகள் சரியாக செரிக்கப்பட்டு, அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாம் சாப்பிடும் உணவுகள் சரியாக செரிமானமாகாமல் இருந்தால், அதனால் குடல் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

One Elixir To Charge Your Digestive System

செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை ஊக்குவித்து, அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் ஓர் அற்புத பானம் குறித்து தான் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானத்தை தினமும் சிறிது பருகினால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். சரி, இப்போது அந்த பானம் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

சிவப்பு முட்டைக்கோஸ் - 1/4 கப்

வெள்ளரிக்காய் - 1/2

பச்சை ஆப்பிள் - 1

புதினா - 1 கையளவு

துளசி - 1 கையளவு

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

முதலில் அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும். இப்போது இந்த பானத்தைக் குடிப்பதால் கிடைக்கும் இதர நன்மைகளைக் காண்போம்.

நன்மை #1

நன்மை #1

இந்த பானத்தில் கலோரிகள் குறைவு மற்றும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் ஏராளமாக உள்ளதால், இதைக் குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்படும். இதனால் உடல் எடையும் குறையும்.

நன்மை #2

நன்மை #2

இந்த பானத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ ஏராளமான அளவில் உள்ளது. ஆகவே இதைக் குடித்தால், விரைவில் முதுமைத் தோற்றம் வருவது தடுக்கப்படும்.

நன்மை #3

நன்மை #3

இந்த பானம் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக இதில் வைட்டமின் ஏ வளமாக உள்ளதால், இது கண் புரை மற்றும் மாகுலர் திசு சிதைவடைவதைத் தடுக்கும்.

நன்மை #4

நன்மை #4

இந்த பானத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. இது இரத்த வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை தூண்ட உதவி, நோய்க் கிருமிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கும்.

நன்மை #5

நன்மை #5

இந்த பானத்தில் உள்ள ஆந்தோசையனின்கள், ப்ளேக் உருவாக்கத்தைக் குறைத்து, ஞாபக மறதி பிரச்சனையைத் தடுக்கும்.

நன்மை #6

நன்மை #6

இந்த பானத்தில் உள்ள கனிமச்சத்துக்கள், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் மற்றும் ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் அழற்சி போன்றவற்றை எதிர்த்து எலும்புகளுக்கு நல்ல பாதுகாப்பு வழங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

One Elixir To Charge Your Digestive System

Try this best natural remedy for digestive health and see the changes for yourself. Read this article to find out.
Story first published: Thursday, February 9, 2017, 10:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter