மனிதனின் ஆயுட்காலத்திற்கு எல்லை இல்லையா! ! சுவராஸ்யமூட்டும் தகவல் தெரிய இதப் படிங்க

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

நாம் வாழ்வதற்கான சில கோட்பாடுகள் மனிதனின் ஆயுட்காலம் எல்லைகளையுடையது என்று சொல்கின்றனர். ஆனால் ஆராய்ச்சி செய்ததில் மனிதனின் ஆயுட்காலம் முடி வதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும் ஆயுட்காலம் அதிகரிப்பது நிற்பதும் இல்லை என்று முந்தைய கண்டுபிடிப்பிலிருந்து ஒரு மாறுபட்ட விஷயத்தை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

முந்தைய ஆராய்ச்சிகள் என்ன சொல்கிறது என்றால் ஒரு மனிதனின் அதிகபட்ச ஆயுட்காலம் 115 வருடங்கள் ஆகுமாம். எது எப்படி இருப்பினும் புதிய ஆராய்ச்சியின் தகவலானது மனிதனின் ஆயுட்காலத்திற்கு எல்லை உண்டு என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதை நாளிதழ் நேச்சர்(journal nature) வெளியிட்டுள்ளது.

No Evidence For Limit On Human Lifespan: Study

அதன் அதிகபட்ச அளவை அடைவது அல்லது அதிகபட்ச அளவை கண்டுபிடிப்பது என்பது சாத்தியமில்லை என்று Siegfried Hekimi biologists at the McGill University in Canada விலிருந்து சொல்கிறார். ஆயுட்காலம் எவ்வளவு ஆண்டுகள் நீடிக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.

இருப்பினும் அதற்கு ஒரு எல்லைக் கோடிட்டு பார்த்தால் அந்த எல்லையை அடைந்த பிறகு நாம் வாழ மாட்டமா அல்லது நமது எதிர்காலம் இல்லாமல் போய் விடுமா என்று கேட்கிறார்.

இருப்பினும் சில அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள், முன்னேற்றமான வாழ்க்கை முறை போன்றவைகள் மனிதனை அவர்களது ஆயுட்கால எல்லைக்கு தள்ளிச் செல்கிறது என்று வாதிடுகின்றனர்.

No Evidence For Limit On Human Lifespan: Study

இவர்கள் சொல்வது ஒரு புறம் இருப்பினும் "மனிதனின் ஆயுட்காலத்தை எல்லையிட முடியாது என்பதை Hekimi திட்ட வட்டமாக கூறியுள்ளார். இதை கணிப்பது மிகவும் கடினம், 300 வருடங்களுக்கு முன்பு பல மனிதர்கள் குறைந்த ஆயுட்காலத்தோடு வாழ்ந்தனர்.

அதில் அதிகமானோர் 100 வருடங்கள் வாழ்ந்தாங்களா என்று கேள்வி எழுப்புகிறார். எனவே மனிதனின் ஆயுட்காலத்திற்கு எல்லை உண்டு சொல்வது பைத்தியக்காரத்தனமான விஷயம் என்கிறார் அவர்.

English summary

No Evidence For Limit On Human Lifespan: Study

No Evidence For Limit On Human Lifespan: Study
Story first published: Thursday, July 6, 2017, 7:00 [IST]