Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
உங்களுக்கு லோ பிரஷர் இருக்கா? கொஞ்சம் உப்பும், பீட்ரூட்டும் மட்டும் போதும்!
குறைந்த இரத்த அழுத்தத்தை சரி செய்ய நீங்கள் செய்ய வேண்டியவை பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
உயர் இரத்த அழுத்தம் பற்றியும், அதன் பாதிப்புகள் பற்றியும் மக்கள் பேசிவரும் இந்நிலையில், பலருக்கு குறைந்த இரத்தம் அழுத்தமும் உள்ளது. இது உலகளவில் பலரை பாதித்துள்ளது. இதனை பலர் தங்களுக்கு மயக்கம் அல்லது உடல்நிலை சரியில்லாமல் போனாலோ தான் மருத்துவரிடம் சென்று பின்னர் உணர்கின்றனர். உயர் இரத்த அழுத்தம் எந்த அளவுக்கு ஆபத்தான ஒன்றோ அதே போல தான் குறைந்த இரத்த அழுத்தமும் ஆகும்.

நீர் பற்றாக்குறை :
போதுமான அளவிற்கு நீரை பருகுவது முக்கியமான ஒரு விஷயமாகும். நீங்கள் வெளியில் செல்லும் போது அடிக்கடி குளிர்பானம் அல்லது தண்ணீர் பருக வேண்டியது அவசியம். உங்களது உடலில் போதிய அளவு நீர் இல்லாமல் போகும் பட்சத்தில் குறைந்த இரத்த அழுத்தம் உருவாகலாம்.

கர்ப்பம்
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில், உங்களது இரத்தம் அழுத்தம் குறைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. இது பொதுவான ஒன்றாக இருந்தாலும் கூட, நீங்கள் அடிக்கடி உங்களது இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இருதய பிரச்சனை
சில வகையான இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் கூட, உங்களது உடலில் இரத்த ஓட்டம் சரியாக இருக்காது.

ஊட்டச்சத்து குறைபாடு :
உடலுக்கு தேவையான சில முக்கிய விட்டமின்களின் குறைபாடுகளினாலும் உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் உண்டாகும். பி 12 மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இரத்த குறைபாட்டை ஏற்படுத்தும். இது குறைந்த இரத்த அழுத்தமாகவும் மாற வாய்ப்புகள் உள்ளது.

தீர்வுகள் :
உப்பு சேர்த்தல் :
பொதுவாக மக்கள் தங்களது டயட்டில் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்வதை தவிர்க்கின்றனர். இரத்த அழுத்த குறைபாட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உப்பு உதவியாக இருக்கும். உங்களது மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் உப்பு சேர்த்த உணவுகளை சாப்பிடலாம்.

தண்ணீர் குடிப்பது :
உடலின் செயல்பாடுகளுக்கு தண்ணீர் மிக முக்கிய தேவையாக உள்ளது. இது உடல் வறட்சியடைவதை தடுக்க உதவுகிறது. தண்ணீர் பருகும் அளவை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். இதனை மறவாதீர்கள்.

பாட்டி வைத்தியம்
1. ஒரு கப் பீட்ரூட்டை எடுத்துக்கொண்டு அதில் ஜூஸ் செய்து தினமும் இரண்டு முறை பருகுங்கள். இது குறைந்த இரத்த அழுத்தத்திற்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
2. ஒரு கப் கருங்காப்பி குடிப்பதும் மிகச்சிறந்த தீர்வாக அமையும்.
3. சிலர் பாதாமை பேஸ்ட்டாக அரைத்து, மிதமான சூடுள்ள நீரில் கலந்து பருகுவதை கூட பரிந்துரை செய்வார்கள்.

உடற்பயிற்சி :
தினமும் சிறிது நேரம் நடப்பதும், வேகமாக நீந்துவதும் சிறந்தது. இது உங்களது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











