For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  கண் புரை வராமல் தடுக்க வீட்டிலேயே எளிய மருத்துவங்கள்!!

  |

  வயதானவர்களுக்கு ஏற்படும் நோய்களில் ஒன்று இந்த கண்புரை. இது கண்களில் உள்ள கருவிழியில் வெள்ளைப்படலம் போல தோன்றும். இதை ஆங்கிலத்தில், "காட்டிராக்ட்' என்பர். கண்களில் உள்ள லென்ஸ்,கண்களில் புரை ஏற்படுவதினால் கருவிழி ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது

  ஆங்கிலத்தில் இதன் பெயரான காட்ராக்ட் என்பது இலத்தீனில் நீர்வீழ்ச்சி என்பதற்கான சொல் cataracta என்பதிலிருந்து வந்தது. தெளிவான நீர் ஓர் அருவியிலிருந்து கொட்டும்போது வெண்மையாக காட்சியளிப்பது போன்று கண்பார்வை மங்கலை இது குறிக்கிறது. பேச்சுவழக்கில் ஆங்கிலத்தில் இது pearl eyed என்றும் அழைக்கப்படுகிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ப்ரோட்டீன் :

  ப்ரோட்டீன் :

  கண்களில் இருக்கும் இரண்டு முக்கியமான பொருட்கள் தண்ணீர் மற்றும் ப்ரோட்டீன். வயாதாகும் போதோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களாலோ ப்ரோட்டீன் கருவிழியில் படரத் துவங்குகிறது, காலப்போக்கில் அவை கருவிழியை முழுதாக மூடிவிடும். முக்கியமாக வயதானவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கும் அதைத் தவிர வேறு என்ன காரணங்கள் உண்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

  காரணங்கள் :

  காரணங்கள் :

  முக்கியமாக சர்க்கரை நோயின் மற்றும் அதிக ரத்தம் அழுத்தம் இருந்தால் கண்களில் புரை ஏற்படும். இவை கண்வில்லையின் புரதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பிறக்கும்போது அல்லது மிக இளமையில் கண்புரை ஏற்படுவது மரபுவழியினால் குடும்பத்தின் வரலாறு காரணமாக அமையும்.

  அதிகமாக புகை மற்றும் மதுப்பழக்கம், விட்டமின் குறைபாடு,கரு உருவாகும் போது ஏற்படும் பிரச்சனையினால் குழந்தைக்கு கூட இந்த பாதிப்பு ஏற்படலாம்.தவிர கண்ணிற்கு ஏற்படும் காயங்களாலும்,கதிர்வீச்சுகளால் கண்களில் புரை ஏற்படுகிறது

  அறிகுறிகள் :

  அறிகுறிகள் :

  கண்புரை ஏற்ப்பட்டதுமே ஆரம்பத்தில் தீவிரமான அறிகுறிகள் எதுவும் தெரியாது. அதிக வெளிச்சத்தை பார்க்க முடியாமல் சிரமப்படுவது, அடிக்கடி கண்களில் தூசு விழுந்ததைப் போன்ற உணர்வு, நிறங்கள் மங்கித் தெரிவது, மனிதர்களின் முகங்கள், பொருட்கள் என துல்லியமாக தெரியாமல் இருப்பது,எல்லாமே இரண்டிரண்டாக தெரிவது என இருக்கும். புரை வளர வளர பார்வை முழுதாக மங்கிப் போகும்.

  வகைகள் :

  வகைகள் :

  கண்புரை மையப்புரை (nuclear), புறத்துபுரை (cortical), முதிர்ந்த புரை (mature), மிகமுதிர்ந்த புரை (hypermature) என வகைப்படுத்தப்படுகின்றன.

  மேலும் அவற்றின் இடத்தைப் பொறுத்து வெளிப்புறப் புரை மற்றும் உட்புறப் புரை எனவும் பிரிக்கப்படுகின்றன.

  சிகிச்சை முறைகள் :

  சிகிச்சை முறைகள் :

  கண் புரை முற்றிய நிலையில் இருந்தால் கண்டிப்பாக அறுவை சிகிச்சை மூலமாக மட்டுமே புரையை அகற்ற முடியும். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் கண் பார்வையை பறிக்கவும் செய்திடும்.

  கண்களில் சிறு பிரச்சனைகள் தெரிய ஆரம்பிக்கும் போதே இதனை கவனிக்கத் துவங்குங்கள். ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது இதனை முயற்சித்துப் பார்க்கலாம் அவை உங்களுக்கு சிறந்த பலனைத் தரும்.

  அன்னாசிப் பூ :

  அன்னாசிப் பூ :

  அன்னாசிப்பூ பொடி இரண்டு டீஸ்பூன், நாட்டுச்சர்க்கரை ஒரு டேபிள் ஸ்பூன், மல்லித்தூள் இரண்டு டீஸ்பூன், மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். அதனை அப்படியேவோ அல்லது தண்ணீர் கலந்தோ குடிக்கலாம். தினமும் காலை,மாலை என இரு வேலையும் குடிக்கலாம்.

  பசலைக் கீரை :

  பசலைக் கீரை :

  கீரைகளில் பீட்டா கரோட்டீன் நிறைந்து உள்ளது. அதோடு லுட்டின்,ஜியாக்சிந்தின் ஆகியவையும் காணப்படுகின்றன. இவை கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக புறஊதாக் கதிர்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க கூடும்

  முதலில் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தில் கீரை முங்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்திடுங்கள்.

  ஐந்து நிமிடம் நன்றாக கொதித்ததும் கீரையை வடிகட்டி அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள்.இந்த பேஸ்ட்டை வேக வைத்த நீருடன் கலந்து சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

  பாதாம் :

  பாதாம் :

  இது மிகவும் எளிதான வழிமுறையாகவே இருக்கும். பாதாமில் பார்வையை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது.

  முதல் நாள் இரவு நான்கைந்து பாதாமை பாலில் ஊற வைத்துக்கொள்ளுங்கள் மறுநாள் காலை இதனை பேஸ்ட்டாக்கி கண்களின் மேல் பூச வேண்டும். இதனால் கண் எரிச்சல் குறையும். தினமும் காலை வெறும் பாதாம் சாப்பிடலாம்.

  மிளகு :

  மிளகு :

  இதிலும் பாதாம் பயன்படுத்தப்படுகிறது. எட்டு பாதாம் வரை எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடான நீரில் அரைத்த பாதாம்,சிறிதளவு மிளகு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து,தினமும் இந்த கலவை சேர்த்த நீரை குடித்து வர நல்ல பலன் கிடைத்திடும்.

  க்ரீன் டீ :

  க்ரீன் டீ :

  க்ரீன் டீயில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது.இவை கண்களுக்கு சிறந்த பாதுகாப்பை அளித்திடும். இதிலிருக்கும் ஃபேலவனாய்ட் கண்புரையிலிருந்து கண்களை காக்கிறது. தினமும் இரண்டு வேலை க்ரீன் டீ குடிக்கலாம்.

  ரோஜா இலைகள் :

  ரோஜா இலைகள் :

  கண்புரை நோய்க்கு இது ஒரு சிறந்த வடிகாலாக அமைந்திடும். இதனைக் கொண்டு கணகளை சுத்தப்படுத்தலாம்.

  ரோஜாப்பூ இதழ்கள் ஒருகப் மற்றும் ரசப்பெர்ரி இலைகள் நான்கு டீஸ்ப்பூன் இரண்டும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்திடுங்கள்.குறைந்த தீயில் இரண்டு நிமிடம் வரை வேகட்டும். பின்னர் அது ஆறியதும் அதனைக் கொண்டு கண்களை கழுவிடுங்கள்.

  பூண்டு :

  பூண்டு :

  பூண்டில் இருக்கும் சில திரவங்கள் கண்களில் உள்ள லென்சை பாதுகாக்கிறது. பூண்டினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர் மாத்திரை முழுங்குவது போல தண்ணீரைக் கொண்டு முழுங்கிட வேண்டும்.

  அதனை கடித்துச் சாப்பிட்டால் கெட்ட நாற்றத்தை கொடுக்கும்.

  கேரட் :

  கேரட் :

  கேரட்டின் பீட்டா கரோட்டீன் அதிகமுள்ளது. அவை விட்டமின் ஏ வாக உருமாற்றம் பெறுகிறது , இவை கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மேல் புறத்தோலை எல்லாம் சீவி கேரட்டை தண்ணீரைக் கொண்டு சுத்தமாக்கிக் கொள்ளுங்கள்.

  பின்னர் சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் இரண்டு வேலை இதனைக் குடித்தால் கண்புரையை தவிர்க்கலாம்.

  இஞ்சி :

  இஞ்சி :

  இஞ்சியில் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இவை கண்புரையை நீக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. அதே போல் வெங்காயத்தில் இருக்கும் quercetin சர்க்கரை நோயினால் ஏற்படும் கண்புரையை கட்டுப்படுத்தும்.

  இஞ்சிச் சாறு மற்றும் வெங்காயச் சாறு மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறையும் கலந்து குடித்து வாருங்கள். தேவையென்றால் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

  ஏலக்காய் :

  ஏலக்காய் :

  ஏலக்காயில் அதிகப்படியான ரிபோஃபைலின் இருக்கிறது. அதோடு பயோ ஃப்லேவனாய்ட் மற்றும் விட்டமின் சி நிறைந்திருக்கிறது. இவை கண்களின் பாதுகாப்பிற்கு உறுதுணையாய் நிற்கிறது.

  இரவு படுக்கச் செல்வதற்கு முன்னால் தினமும் ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைத்திடும்.

  பப்பாளி :

  பப்பாளி :

  பப்பாளியில் இருக்கும் பப்பாயன் என்ற என்சைம் உடலில் ப்ரோட்டீனை செரிக்கச் செய்திடும். காட்ராக்ட் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு ப்ரோட்டின் சரியாகவும் முழுமையாகவும் செரிப்பதில்லை.தொடர்ந்து பப்பாளி சாப்பிட்டு வர ப்ரோட்டீன் செரிமானம் ஆகி காட்ராக்ட் பிரச்சனை குறைந்திடும்.

  தவிர்க்க :

  தவிர்க்க :

  நோய் வந்தவுடன் சிகிச்சை முறைகளை செய்து சோதிப்பதும், மருத்துவமனைக்கு அலைவதும் என்று இல்லாமல் அவை வருவதர்கு முன்னரே எச்சரிக்கையுடன் இருப்பது தான் சிறந்தது.

  துரித உணவுகள்,பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்த்திடுங்கள்.

  சத்தான காய்கறி மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.கண்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ப்ராணாயாமம் செய்யலாம்,உடலில் சர்க்கரையளவை கட்டுப்பாட்டிற்க்குள் வைத்திருங்கள்,புகை மற்றும் போதைப் பழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Home remedies to prevent cataract

  Home remedies to prevent cataract
  Story first published: Tuesday, October 24, 2017, 11:44 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more