காது எச்சரிப்பதை என்றாவது கவனித்திருக்கிறீர்களா?

Posted By:
Subscribe to Boldsky

நமக்கு மிகவும் அவசியமான ஒன்று காது. அதற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கமாட்டோம்.காதில் ஏற்படும் வலி,அரிப்பு போன்றவை உங்கள் உடல்நலத்தைப் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய அறிகுறிகள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

Diseases and their symptoms of ear

காதில் ஏற்படும் பாதிப்புகள் அது எதற்கான அறிகுறிகள் என்பதையும் விரிவாக தெரிந்து கொண்டு எச்சரிக்கையுடன் இருக்க சில குறிப்புகள் 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய நோய் :

இதய நோய் :

காது மடல் சிவந்து காணப்பட்டால் அவை இதய நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இது எதனால் ஏற்ப்படுகிறது என்பதற்கான சரியான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றாலும் இதய நோய் ஏற்ப்பட்டவர்களின் பெரும்பாலானோருக்கு காதுகள் சிவந்து காணப்பட்டதாம்.

சிவந்த காதை பார்த்ததும் நீங்களே முடிவு செய்திடாமல் மருத்துவரிடம் சென்று ஆலோசனைப் பெறுங்கள்.

மடிப்புகள் :

மடிப்புகள் :

குழந்தைகள் பிறக்கும் போதே இந்த பாதிப்பு இருக்கும். காதில் இருக்கும் ஓட்டை சிறிதாக இருக்கும். விசித்திரமாக மடிப்புகள் இருக்கும்.இவர்களுக்கு லோ சுகர் ஏற்படும். உடலில் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.

சிறிய காதுகள் :

சிறிய காதுகள் :

டவுன் மற்றும் டர்னர் சிண்ட்ரோம் இருந்தால் காதுகள் சிறிய அளவில் இருக்கும். ஏனென்றால் டவுன் சிண்ட்ரோம் ஏற்படக் காரணமாய் இருக்கும் அதே க்ரோமோசோம் தான் காதுகள் சிறியதாக வளர்வதற்கும் காரணமாய் இருக்கிறது. இவர்களுக்கு உடல் மற்றும் மன வளர்ச்சியில் தாமதம் ஏற்படும் அல்லது தடையிருக்கும்.

Image Courtesy

வெளிப்புற காதே இல்லாமல் இருப்பது :

வெளிப்புற காதே இல்லாமல் இருப்பது :

குழந்தை பிறக்கும் போதே வெளிப்புற காது இல்லாமல் பிறக்கும். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.தாய் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று நம்பப்படுகிறது. இதனால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படாது. ப்ளாஸ்டிக் சர்ஜரி மூலமாக செயற்கையாக காதை உருவாக்கிட முடியும்.

Image Courtesy

ஸ்கின் டேக் :

ஸ்கின் டேக் :

காதின் ஓரத்தில் கூடுதலான தசைப்பகுதி இருப்பது. இதற்கு காரணம் குழந்தையின் கிட்னி செயல்பாட்டினைப் பொருத்து இது அமைந்திடும். ஏனென்றால் காதுகள் வளரும் அதே பருவத்தில் தான் குழந்தைக்கு கிட்னியும் வளர்கிறது. இதனால் குழந்தைக்கு காதில் அல்லது காதின் ஓரங்களில் கூடுதலான சதைப்பகுதி வளர்வதை கண்டால் குழந்தையின் கிட்னியையும் பரிசோதித்துவிடுங்கள்.

காதெரிச்சல் :

காதெரிச்சல் :

காதில் வேக்ஸ் அதிகமிருந்தால் அல்லது காதில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் காதில் ஓசை கேட்கும். ஆனால் இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. குறிப்பாக எலும்பு முட்டுகளில் ஏதேனும் பிரச்சனை என்றால் இப்படியான ஓசை கேட்கும். தலை மற்றும் கழுத்தில் பாதிப்பு ஏற்ப்பட்டாலும் காதில் ஓசை கேட்கும். வேகமாக காற்று அடிப்பது போல கேட்டால் மருத்துவரை சென்று சந்தித்திடுங்கள்.

காதில் அரிப்பு :

காதில் அரிப்பு :

காதை குடைவதைப்போல, எரிச்சல் ஏற்பட்டால் அதற்கு காரணம் காதில் தொற்று ஏற்ப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். உங்களுக்கு சோரியாசிஸ் என்ற சருமப்பிரச்சனை இருந்தாலும் இந்த அறிகுறி இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். காதிற்கு உள்ளேயும் வெளியேயும் இந்த நோய் பாதிப்பு இருக்கும் என்பதால் காது கேட்பதில் சிரமம் இருக்கும். இதனை முழுவதுமாக தீர்க்க இதுவரை மருந்துகள் இல்லை என்பதால் நோய் வராமல் பாதுகாப்பது தான் சிறந்தது.

காது வலி :

காது வலி :

காதில் தொற்று ஏற்பட்டாலோ அல்லது தொண்டையில் ஏதேனும் பிரச்சனை என்றால் காதில் வலி ஏற்படும். பற்களில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தால் கூட காது வலி வரும். குழந்தைகளுக்கு, காது வலியுடன் காய்ச்சல், வாந்தி,தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Diseases and their symptoms of ear

Diseases and their symptoms of ear
Story first published: Saturday, August 12, 2017, 12:01 [IST]