புகைப்பிடிப்பதால் உடலில் தேங்கும் நிக்கோட்டினை முழுமையாக வெளியேற்றும் அற்புத உணவுகள்!!

Posted By: Aashika
Subscribe to Boldsky

புகைப்பிடிப்பதால் உடல் நலத்திற்கு தீங்கானது என்று சொல்லி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி புகைப்பதை நிறுத்தச் சொல்கிறோம். அவர் புகைப்பதை நிறுத்திவிட்டால் எல்லாம் முடிந்ததா? இதுவரை புகைத்துக் கொண்டிருந்தவர்களின் உள்ளுறுப்புக்கள் பற்றி எதாவது யோசித்திருப்போமா?

Best Ways To flush out Nicotine from your body

புகையை நிறுத்தினால் மட்டும் போதாது. நுரையீரலில் படிந்திருக்கும் நிக்கோட்டினை அகற்றினால் மட்டுமே ஆரோக்கியம் ஓரளவுக்காவது மீளும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழங்கள் :

பழங்கள் :

சிகரெட் புகைப்பவர்களுக்கு உடலில் உள்ள விட்டமின் ஏ,சி மற்றும் ஈ அளவு குறைந்திடும். அதனை ஈடுகட்டும் விதமாக நிறைய பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக நெல்லிக்காய், கிவி பழத்தை சாப்பிடலாம். அதில் எக்கசக்கமான விட்டமின் சத்துக்கள் உள்ளன.

நுரையீரலின் செயல்பாடுகளுக்கு விட்டமின் ஏ பெரிதும் உதவிடும்.

நம் உடலில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் இருக்க உதவிடுகிறது விட்டமின் பி6. இது நுரையீரல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைத்திடும்.

கீரைகள் :

கீரைகள் :

கீரைகளில் அதிகப்படியான ஃபோலிக் அமிலம் மற்றும் விட்டமின்ஸ் நிறைந்திருக்கும். நுரையீரலை காக்க உதவிடும் விட்டமின் ஏ மற்றும் ஃப்ளேவனாய்ட் கீரைகளில் அதிகம் இருக்கும்.

அதிலிருக்கும் இரும்புச்சத்து நுரையீரலில் இருந்து உடலில் மற்ற பாகங்களுக்கு ஆக்ஸிஜனை எளிதாக கொண்டு செல்ல உதவிடும்.

இதனால் நுரையீரலுக்கு அதிக வேலை இருக்காது.

தண்ணீர் :

தண்ணீர் :

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் புகைக்கும் போது உடலில் உள்ள நீர்ச்சத்து எல்லாம் குறைந்து கொண்டேயிருக்கும்.

இதனை சரிசெய்ய சாதாரண மனிதர்களை விட புகைப்பிடித்தவரக்ள் அதிகமான தண்ணீரை குடிக்க வேண்டும்.

மூக்கு வழியாக சுவாசிக்கும் போது ஈரப்பதமான காற்று உள்ளே போகும். இதே வாய் வழியாக சுவாசிக்கும் போது வறண்ட காற்று தான் உள்ளே போகும்.

புகைப்பிடித்து ஏற்கனவே வறண்டு இருக்கும் நேரத்தில் வாய்வழியாக சுவாசிக்க கூடாது.

நுரையீரல் துரிதமாக செயல்படவும், ஈரப்பதம் மிகவும் அவசியம் அதற்கு கண்டிப்பாக அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும்.

வெங்காயம் :

வெங்காயம் :

நுரையீரலை சுத்தப்படுத்துவதில் வெங்காயத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. நுரையீரலில் வரும் தொற்று நோய்களைக் கூட இது குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

புற்றுநோயாளிகளில் தங்களது உடலில் செல் உற்பத்தியை தடுக்க வெங்காயத்தை உண்பர்.

வெங்காயத்தில் இருக்கும் ஆந்தோசயனின் என்னும் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் வெங்காயத்திற்கு இளம் சிவப்பு நிறத்தை கொடுக்கிறது.

இதுவும் வெங்காயத்தில் இருக்கும் அமினோ ஆசிட் சிஸ்டைனும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மிக முக்கிய பங்காற்றுகிறது.

ஆரஞ்ச் :

ஆரஞ்ச் :

இதில் நுரையீரல் புற்று நோய் வராமல் தடுத்திடும் க்ரிப்டோக்ஸன்தின் என்னும் மூலப்பொருள் இருக்கிறது. அத்துடன் இதில் அதிகப்படியான விட்டமின் சி இருப்பதால் இதனை உட்கொண்டால் நுரையிரல் எளிதாக ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவிடும்.

ஆரஞ்சு மற்றும் சிகப்பு நிற காய்கள் மற்றும் பழங்களில் கரோடினாய்ட்ஸ் என்னும் மூலப்பொருள் இருக்கும். இது நுரையீரல் விரைந்த செயலாற்ற உதவிடும்.

ப்ரோக்கோலி :

ப்ரோக்கோலி :

ப்ரோக்கோலியில் இருக்கும் விட்டமின் சி மற்றும் பி5 நம் உடலுக்கு மிகவும் அவசியம். புகைப்பவர்களின் நுரையீரல் பாதையான NRF2 அடைப்பட்டிருக்கும். ப்ரோக்கோலியில் இருந்து கிடைக்கும் சல்போர்பேன் இதனை தீர்த்திடும்.

பைன் ஆயில் :

பைன் ஆயில் :

பைன் ஆயில் அல்லது பைன் டீ நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடுவதில் சிறந்தது. அதில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்ஸிடன்ஸ், விட்டமின் ஏ மற்றும் சி இருக்கிறது.

நுரையீரலில் சேரும் அழுக்கு மற்றும் சளியை நீக்குவதில் இது சிறந்தது

 மக்காச் சோளம் :

மக்காச் சோளம் :

மக்காச்சோளத்தில் பீட்டா க்ரிப்டாக்ஸான்தின் இருக்கிறது. இது நுரையீல் புற்றுநோயிலிருந்து நம்மை காத்திடும்.

கார்னில் இருக்கும் பீட்டா கரோட்டின் மூலமாக நம் உடலுக்கு தேவையான விட்டமின் ஏ சத்து கிடைத்திடும்.

இஞ்சி :

இஞ்சி :

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சீனர்கள் இதனை மருந்தாக பயன்படுத்தியிருக்கிறாரகள். வீரியமிக்க பல நோய்களை இது அழிக்க துணைபுரிந்திருக்கிறது.

நுரையீரலில் சேர்ந்திருக்கும் டாக்ஸின்களை நீக்க இஞ்சி மிகச்சிறந்த மருந்தாக பயன்படும். இஞ்சியை தோல் நீக்கி அப்படியே கூட சாப்பிடலாம்.

இல்லையென்றால் ஒரு டம்பளர் தண்ணீரில் இஞ்சியை நன்றாக கொதிக்க வைத்திடுங்கள் அது அரைகப் அளவு தண்ணீர் குறையும் அளவிற்கு தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீரையும் தொடர்ந்து குடிக்கலாம்.

நுரையீரலில் சேர்ந்திருக்கும் நச்சுப்புகையை நீக்கவும் இது உதவுகிறது. அத்துடன் அதன் செயல்பாடுகளுக்கும், நுரையீரலின் தன்மை மேம்படவும் இஞ்சி எடுத்துக் கொள்ளலாம்.

கேரட் :

கேரட் :

புகைப்பதால் உள்ளூருப்புகள் மட்டுமின்றி சருமமும் பாதிப்படையும். அதனை ஈடுகட்ட விட்டமின் சத்துக்கள் நிறைந்த கேரட் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இது சருமத்திற்கு மட்டுமல்ல உள்ளே சேர்ந்திருக்கும் நிக்கோட்டினை வெளியேற்றவும் செய்யும்.

நுரையிரலில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதுடன் புகைப்பதால் உண்டான உபாதைகளின் வீரியத்தை குறைகக்வும் செய்திடும்.

தினமும் காரட்களை உண்பதால் நுரையிரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் பாதியளவு குறைந்திடும் என்கிறது ஓர் ஆய்வு!.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

நுரையிரலை ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்ள சிறந்த சாய்ஸ் உடற்பயிற்சி. உடற்பயிற்சியின் போது ஆழமான மூச்சு எடுப்போம் இது நுரையிரலுக்கு நல்ல பயிற்சியாக அமையும்.

உடற்பயிற்சி செய்வதுடன் மூச்சுப்பயிற்சியையும் செய்யலாம்.

சிகப்பு மிளகாய் :

சிகப்பு மிளகாய் :

மிளகாய்க்கு இந்த வண்ணத்தை கொடுப்பது அதிலிருக்கும் பீட்டா கரோட்டீன் தான். நுரையிரலில் தங்கியிருக்கும் சளியை அகற்ற உதவிடும்.

அத்துடன் உடலில் உள்ள கிருமிகளை நீக்கவும் இது உதவுகிறது.

செய்யக்கூடாதவை :

செய்யக்கூடாதவை :

புகைப்பதை நிறுத்தியதற்கு வாழ்த்துக்கள் ! தொடர்ந்து மேற்சொன்ன உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் நீங்கள் செய்யக்கூடாது முக்கியமான சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

மன அழுத்தம் :

புகைப்பதை நிறுத்திய பிறகு ஒரு வகையான மன அழுத்தம் உண்டாகும். இதற்கு மாற்றாக வேறு சில போதை பழக்கத்திற்கு ஆளாகமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தேவையற்ற குழப்பங்கள்,கோபம் என நீங்கள் மன ரீதியாக பாதிகப்பட்டிருப்பீர்கள். அதனை சரியான முறையில் கையாள வேண்டும்.

சர்க்கரை :

சர்க்கரை :

மாவு, சர்க்கரை, கொழுப்பு சார்ந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளாதீர்கள். இது உடலில் அதிக பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

ஏற்கனவே நுரையிரல் பாதிக்கபப்ட்டிருக்கும் நிலையில் இதனை உண்பதால் மற்றவரக்ளை விட உங்களுக்கு சீக்கரமாகவே நோய்த்தொற்று ஏற்ப்பட்டிடும்.

விலகியிருங்கள் :

விலகியிருங்கள் :

உங்கள் நட்பு வட்டத்தில் புகைப்பவர்கள் இருந்தால் அவர்களிடமிருந்து விலகியிருங்கள். சிகரெட் புகையை மறந்தும் கூட சுவாசிக்க வேண்டாம்.

குடி :

குடி :

சிகரெட் நிறுத்திய சிறிது நாட்களுக்கு குடிக்கவும் கூடாது. உடலில் சேரும் ஆல்கஹால் சிகரெட் புகைக்க தூண்டும் என்பதால் அதனையும் தவிர்த்திடுங்கள்.

ஆல் தி பெஸ்ட் !!!!!!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    Read more about: health smoking food
    English summary

    Best Ways To flush out Nicotine from your body

    Smoking is one of the deadliest killer thing. Here, some tips to flush out of nicotine from your body.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more