Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
விடியற்காலையில் இப்படி நீரை அருந்துவதால் உண்டாகும் பலன்கள் என்ன?
நோயில்லாத வாழ்க்கைக்கு இயற்கை முறையில் வாழ்வதே சிறந்தது. இயற்கை முறையில் நீங்கள் நோய்களை வராமல் தடுக்கவும் , குணப்படுத்தவும் இங்கே மருத்துவ முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நமது சித்த மருத்துவத்தில் பல எண்ணிடலங்கா அற்புதங்கள் இருக்கின்றன. அவற்றிலுள்ள மூலிகைகள் நோய்களை தீர்க்கும் மற்றும் நோய்களை தடுக்கும் அபூர்வ ஆற்றல் பெற்றவை.

நீண்ட ஆயுளுடன் திடமாகவும், வளமாகவும் வாழ இந்த குறிப்புகளை கொஞ்சம் செய்து பாருங்களேன்.

விடியற்காலையில் :
துளசி, வில்வம் அல்லது அருகம்புல் ஆகிய்வற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து இரவில் ஒரு லிட்டர் நீரில் போட்டு மூடி விடுங்கள்.
மறுநாள் அந்த நீரை விடியற்காலையில் அருந்த வேண்டும். அவ்வாறு உண்டால் உண்டாகும் பலன்கள் அற்புதமானது. தொடர்ந்து படியுங்க

மூலிகை நீர் அருந்துவதால் உண்டாகும் நன்மைகள்:
உடலிலுள்ள அனைத்து குடல்கள் மற்றும் சிறு நீப்பையில் இருக்கும் வெப்பம் தணியும். உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி பெறும். மலச்சிக்கல் குணமாகும். உடலில் வெப்பம் சம்பந்தமான நோய்கள் தீரும்.

மூலிகை நீர் அருந்துவதால் உண்டாகும் நன்மைகள் :
ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் நெருங்காது. அவ்வாறு இருந்தாலும் அவர்களுக்கு நோயின் தீவிரம் குறைந்து கட்டுப்படும்.

சர்க்கரை நோய் குணமாக :
மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளவும். 1 ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் நோய் குணமாகும்.

தலை வலி குணமாக :
ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

வாயுத் தொல்லைக்கு :
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.



Click it and Unblock the Notifications
