கை தட்டுவதில் கூட இவ்ளோ விசயம் இருக்கா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

Posted By: Gnaana
Subscribe to Boldsky

சிலர் பேசும்போது, அவர்களாகவே அவ்வப்போது, கையைத்தட்டி கைகொட்டி சிரித்து மகிழ்வர், சிலர் பேசும்போது, அவர்கள் நம்மையும் கைகொட்டி சிரித்து மகிழச்சொல்வர். இது ஒருபுறம் இருந்தால், நாம் மிகவும் இரசிக்கும் நல்ல பாடலோ இசையோ, திரைப்பட காட்சியோ கண்டு, நம்மை அறியாமல், நாமும் கைதட்டி இரசிப்போம்!, இது பெரும்பாலும், அனிச்சை செயலாக நடப்பதால், இந்த கை தட்டல் குதூகலத்தை, மற்றவர்கள் கண்டு, அப்படி என்ன பெரிய அதிசயம் அந்தக் காட்சியில் என்று நம்மை சற்று ஏளனமாகப் பார்ப்பர். அவர்கள் இரசனை அவ்வளவு தான், என்று நம்மை உற்சாகப்படுத்தும் அந்த விஷயத்தை, நாம் இரசிப்போம்.

இப்படி நம்மை ஈர்க்கும் விசயங்களில், மன உற்சாகத்தில், நாமறியாமல் செய்யும் இந்த கைதட்டல், உண்மையில் நமக்கு ஒரு வரம், என்பது தெரியுமா?!

உம்மணாமூஞ்சிகளின் மத்தியில் கைதட்டி சிரித்து இரசிப்பது ஒரு வரம். மனதின் உணர்வுகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல், எப்போதும் சீரியஸ் முகமாக காட்சிதரும் மனிதர்கள் மத்தியில், நம்மை ஈர்க்கும் விசயங்களுக்கு, எளிதில் சிரித்து கைத்தட்டி மகிழும் மனிதர்கள், உண்மையில் வரம் பெற்று வந்தவர்கள்தான்! மேலும், இதனால், உடலில் வியாதி எதிர்ப்பு தன்மைகள் அதிகரித்து, உடலை வியாதிகளில் இருந்து காத்து வர முடியும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

"மனம் போல வாழ்வு!" என்பர் பெரியோர், உடலின் பல்வேறு வியாதிகளுக்கும் அடிப்படை மனம்தான்! வெற்றியடைந்தால்தான் மகிழ்ச்சி கிட்டும் எனும் எண்ணத்தை விடுத்து, உற்சாகமாக இருப்பதே ஒருவகை வெற்றிதான் எனும் சிந்தனை தெளிவு பிறந்தால், அங்கே மனம் விட்டு உற்சாகத்தில் சிரித்து மகிழ முடியும்!

மனதை இலேசாக்கிக் கொண்டு, மற்றவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், கைகளைத் தட்டி சிரித்து மகிழும் செயலால், மற்றவர்களின் தன்னம்பிக்கையை நாம் தூண்டி அவர்களின் உத்வேகத்தை அதிகரிப்பதன் மூலம், அவர்களுடன் நாமும் நலம் பெறுவோம்!

உடலை பாதிப்பும் இதய வியாதிகள், இரத்த அழுத்த குறைபாடுகள், சர்க்கரை பாதிப்புகள் போன்ற வியாதிகள் உடலை அணுக பெரும் காரணமாக இருப்பது, நமது மனம்தான், நாம் உலக நடப்புகளை இயல்பான மனநிலையில், எந்த ஒரு சூழலிலும் அகப்படாமல், கடக்கும் நிலையை அடையப் பெற்றால், அதுவே, நமது உடலுக்கு நன்மையை அளிக்கும் செயலாகும், மேலும், இதன் மூலம், உடலை வாட்டும் தற்கால வியாதிகளின் பாதிப்புகளை முற்றிலும், தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மையப் புள்ளிகள் இணையும் இடம்!!

மையப் புள்ளிகள் இணையும் இடம்!!

கைகளின் உள்ளங்கைகளை நோக்கி, அவற்றின் நிறத்தை வைத்தே, நமது உடலின் ஆரோக்கியத்தை சித்த மருத்துவர்கள் அறிவர். அதோடுகூட, கைகளே, உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு, ஆற்றல் மையமாக விளங்குகிறது. இன்னும் சொல்லப்போனால், கைகளே, உடலிலுள்ள இராஜ உறுப்புகளின் ரிமோட் கண்ட்ரோல்!

எதிர்ப்பு ஆற்றல் :

எதிர்ப்பு ஆற்றல் :

இரண்டு கைகளையும் இணைத்து தட்டுவதன் மூலம், உடல் இரத்த நரம்புகள் ஊக்கம் பெற்று, இரத்த ஓட்டம் சீராகிறது. அதன் காரணமாக, வியாதிகள் எதிர்ப்பு ஆற்றல் மேம்பட்டு, உடல் வளமாகிறது.

உடல் இயக்க :

உடல் இயக்க :

இன்னும் சொல்லப்போனால், கைதட்டுவது ஒரு வைத்தியம் போல. அதனால், கைகளின் வழியே ஆற்றல் உண்டாகி, மூளைக்கு செலுத்தப்பட்டு, அதன் மூலம் உடல் உறுப்புகள் சீராக இயங்க ஆரம்பிக்கின்றன.

உடல் நலத்தை பாதிக்கும் அட்ரினலின்!

உடல் நலத்தை பாதிக்கும் அட்ரினலின்!

உடல் இயக்கத்தில் வேகமான செயலுக்கு காரணமாக அமைபவை அட்ரினலின் ஹார்மோன் சுரப்புகள், அதிக டென்ஷன், டிரைவிங், கோபம் போன்ற சமயங்களில் அதிகமாக சுரக்கும் அட்ரினலின், இரத்த நாளங்களில் அடைப்பை உண்டாக்கி, இதயத்தின் இயக்க பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

உடல் தானே பாதிப்புகளை சரிசெய்யும் ஆற்றல்மிக்கது! அதன்படி, அதிகப்படியாக சுரக்கும் அட்ரினலினை நிறுத்த, மனம் இலேசாகி மகிழ்ச்சியாக இருந்தாலே போதும், மனதை வருத்தும் எண்ணங்களை நினைக்காமல், மனதை உற்சாகப்படுத்தும் நினைவுகளை எண்ணிவர, இந்த அட்ரினலின் சுரப்பு நின்று, உடல் அமைதியாகும்.

ரத்த அடைப்பு குணமாகும்:

ரத்த அடைப்பு குணமாகும்:

இதுபோன்ற சமயங்களில் கைத்தட்டல் சிறப்பான பலன்களைக் கொடுக்கும், இரத்த நாளங்களில் கடுமையான அடைப்புகள் இருந்து இரத்தம் செல்லமுடியாத நிலை இருந்தால்கூட, உற்சாகத்துடன் கைதட்டி குதூகலிக்க, அடைப்புகள் எல்லாம் தூளாகிவிடும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.

இந்த கைத்தட்டல் என்பது ஒரு சிகிச்சை முறை என்பதும், அது பரவலாக உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருவதும் தெரிந்தால், நம் ஊர் மக்கள் சுவாரஸ்யமான பேச்சின் இடையே கைதட்டி சிரித்து மகிழ்வதை, இன்னும் அதிக அளவில் தொடர்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

கிளாப்பிங் தெரபி!

கிளாப்பிங் தெரபி!

கைதட்டுவது பேச்சின் சுவாரஸ்யத்தில் மட்டுமல்ல, மற்றவரைப் பாராட்ட, வழிபாடுகளில் சேர்ந்திசையில் பாடுபவர்களும் கைகளைத் தட்டிக்கொண்டே பாடுவார்கள். கைதட்டுவதால் மற்றவருக்கு உற்சாகம் மட்டுமல்ல, தட்டுபவர்களுக்கும் அநேக நன்மைகள் தரும் ஒரு உடற்பயிற்சியும் கூட, எப்படி என்பதை இனி அறியலாம்.

உற்சாக மன நிலை :

உற்சாக மன நிலை :

உடலின் செயல்பாட்டை தூண்டக்கூடிய அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கும் உள்ளங்கைகளை சேர்த்து தினமும் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை தட்டுவதன் மூலம், மூளையின் பெரும்பான்மை இயக்கம் தூண்டப்பட்டு, உடல் புத்துணர்வு பெற்று, வியாதிகள் அகன்று, நாள் முழுதும் உற்சாக மனநிலையுடன் இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

 கைதட்தி வருவதால் ஏற்படும் பலன்கள்

கைதட்தி வருவதால் ஏற்படும் பலன்கள்

மூட்டு வலி பாதிப்புகள் இருப்போர் தினமும் சிறிது நேரம் கைதட்டி வர, வலிகள் விலகிவிடும். சுவாச பாதிப்புகள் நீங்கி, இரத்த அழுத்த பாதிப்புகள் விலகும்.

இதய பாதிப்பு மறையும் :

இதய பாதிப்பு மறையும் :

இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரக பாதிப்புகள் விலகி, உடலில் ஏற்படும் உணவு செரிக்காமை பாதிப்புகள் நீங்கும். நினைவு சக்தி அதிகரித்து, உன்னிப்பாக கவனிக்கும் திறன் மேலோங்கும்.

தூக்கமின்மை, கண் கோளாறுகள் :

தூக்கமின்மை, கண் கோளாறுகள் :

தலைவலி, தூக்கமின்மை, கண் பார்வைக்கோளாறு போன்ற பாதிப்புகள் சரியாகும். குழந்தைகளை தினமும் கைகளைத் தட்டிவர சொல்லித்தர, குழந்தைகளின் வார்த்தை உச்சரிப்பு தெளிவாகும்.

யாரெல்லாம் கைதட்டல் பயிற்சியை அவசியம் செய்யலாம்?

யாரெல்லாம் கைதட்டல் பயிற்சியை அவசியம் செய்யலாம்?

வீட்டிலும், அலுவலகத்திலும் ஏசி அறைகளிலேயே இருப்போர், வேர்வை வராத வாழ்க்கைமுறைகளில் வாழ்வோர், இவர்களெல்லாம், தினமும் காலையில், இருபது நிமிடங்கள் வரை, மனதில் மகிழ்ச்சியுடன், உற்சாக மன நிலையில் கைதட்டிவர, இரத்தம் சுத்தமாகி, அடைப்புகள் நீங்கி, மூளை முழுமையாக செயல்பட்டு, உடலிலும் மனதிலும், இனம்புரியாத புது உற்சாகம் தோன்றும்.

வெறுமையுடன் இருப்பவர்கள்!!

வெறுமையுடன் இருப்பவர்கள்!!

மனதில் வெறுமையுடன், எதிலும் ஈடுபாடின்றி எப்போதும் சோர்வாக உள்ளவர்களும், தினமும் கைதட்டி வர, அவர்கள் மனநிலையில் வியக்க வைக்கும் மாற்றங்கள் உண்டாகி, அவர்களின் வாழ்க்கை நல்ல உற்சாக மனநிலைக்கு திரும்பும். மருந்துகளால் கூட சரிசெய்யமுடியாத பாதிப்புகளை சரிசெய்யும் வல்லமை, இந்த கைத்தட்டலுக்கு உண்டு.

அன்று நம் சித்தர்கள் சொன்னதுதானே, இன்று நடக்கிறது!

"மனமது செம்மையாக, வியாதிகள் தீருது!"

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing health benefits of clapping hands

Amazing health benefits of clapping hands
Story first published: Friday, November 3, 2017, 16:00 [IST]