For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சோடா குடிப்பதனால் உடலுக்குள் இதெல்லாம் நடக்கிறதா! விபரீத விளைவுகள்!!

சோடா குடிப்பது நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதை விட பல மடங்கு அதிகமாக தீங்கு விளைவிக்கிறது. அவை என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்

|

உங்களுடைய உடல் ஆரோக்கியம் குறித்து யாரெல்லாம் அக்கறையுடன் இருக்கிறீர்கள் என்று கேட்டால் எல்லாருமே கையைத் தூக்குவார்கள். அப்படி எல்லா சூழலிலும் நீங்கள் ஆரோக்கியம் குறித்து சிந்தித்து உடலுக்கு கேடு தருபவற்றை தவிர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நிச்சயம் இல்லை.

இன்று ஒரு நாள் மட்டும்,ஒரு நாள் சாப்பிடுவதால் என்ன ஆகிடப் போகிறது என்று சொல்லி சொல்லியே வருடக் கணக்கில் சாப்பிட்டுக் கொண்டிருப்போம். அதிலும் குறிப்பாக துரித உணவுகளை சாப்பிடுவோருக்கு இதன் பாதிப்பு இரட்டிப்பாக அமைந்திடும்.

இன்றைக்கு பலரும் நாகரிகம் கருதி பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு வகைகளையே பெரிதும் விரும்புகிறார்கள். ஆனால் இது உடலுக்கு பெரும் தீங்கினை விளைவிக்க கூடியது.

இன்றைக்கு ஹோட்டல்,தியேட்டர்,பார்க் என்று எங்கு சென்றாலும் ஸ்நாக்ஸ் மற்றும் உணவுடன் சேர்த்து சோடா குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடயே இப்பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. உடலுக்கு தீங்கு தரக்கூடியது என்று தெரிந்தும் சுவைக்காக தொடர்ந்து குடித்துக் கொண்டிருக்கிறோம். சிலருக்கு சோடா குடிப்பதில் அடிக்‌ஷனே ஏற்ப்பட்டு அதனை நிறுத்த முடியாத சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் கூட சோடாவுடன் இன்னொரு தின்பண்டத்தை சேர்த்து சாப்பிட்டதால் உடலில் ஏற்ப்பட்ட கெமிக்கல் மாற்றத்தினால் ஒருவர் உயிரிழந்தார் என்ற செய்தியை படித்திருப்போம் ஆனால் இன்னமும் தொடர்ந்து சோடா குடித்துக் கொண்டிருக்கிறோம். தனக்கு நடக்காத வரையில் எதுவும் நம்மை பாதிப்பதில்லை. ஏதேனும் நடந்தால் அய்யோ அம்மா என்று சமூகத்தை நோக்கி திட்ட ஆரம்பிக்கிறோம். முதலில் மாற்றங்களை நீங்கள் உங்களிடமிருந்துதான் தொடங்க வேண்டும்.

10 Shocking side effects of Drinking Soda

இதனுடைய பின் விளைவுகள் பற்றி எதுவும் யோசிக்காமல் தொடர்ந்து குடித்துக் கொண்டிருப்பதால் நம்முடைய உடலுக்கு எத்தகைய தீங்கு ஏற்படுகிறதோ அதேயளவு சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுகிறது.

அதை விட தவறான தகவல்களால் மருத்துவம் என்று நினைத்து சில தவறான பழக்கங்களை கடை பிடித்துக் கொண்டிருக்கிறோம். அஜீரணம் ஏற்ப்பட்டால் சோடா குடித்தால் சரியாகும். உணவு எளிதாக செரிக்கும் என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருப்போம். இது உண்மையா? சோடா உடலுக்குள் சென்றால் என்ன பாதிப்புகள் எல்லாம் ஏற்படுத்தக்கூடும் என்று தெரிந்து கொள்ளுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Shocking side effects of Drinking Soda

10 Shocking side effects of Drinking Soda
Story first published: Thursday, October 12, 2017, 11:44 [IST]
Desktop Bottom Promotion