திடமான, விரிவடைந்த மார்பும் புஜமும் பெற செய்யுங்கள் கோமுகாசனா:

Written By: Hemalatha
Subscribe to Boldsky

கோ என்றால் மாடு என்று பெயர். மாட்டின் முகம் போல இருக்கும் இந்த ஆசனத்திற்கு கோமுகாசனா என்ற பெயர் வந்தது. இந்த ஆசனம் செய்தால், சுருங்கிய ,கூன் விழுந்த மார்பகம் நிமிர்ந்து விரிவடைகிறது. அகன்ற புஜம் கிடைக்கும்.

செய்முறை :

முதலில் நன்றாக ஆழ்ந்த மூச்சினை இழுத்து விடுங்கள். பின் தரையில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். முதுகு நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும். இப்போது இடது காலை மடித்து அதன் மீது அமருங்கள். இடது பாதம் வலது புட்டத்தின் அடியில் இருக்க வேண்டும்.

பின் வலது காலை இடது தொடைக்கு மேலே வையுங்கள், (கால் மேல் கால் போட்டு அமர்வது போல)பாதம் தரையில் பட்டபடி இருக்க வேண்டும்.

yoga that making your rib cage stronger

இப்போது இடதுகையை தூக்கி பின்புறம் கழுத்தின் கீழே கொண்டு செல்லுங்கள்.  வலது கையை கீழிருந்து பின்னே கொண்டு சென்று, இரண்டு கைகளையும் பூட்டு போடுவதைப் போல கோர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த நிலையில் அரை நிமிடம் இருக்க வேண்டும்.

yoga that making your rib cage stronger

பிறகு கைகளை விடுவித்து மெதுவாய் கால்கள் ஒன்றொன்றாய் விடுவித்துக் கொள்ளுங்கள். திரும்பவும் பழையபடி கால்களை நீட்டிக்கொள்ளுங்கள்.

இப்போது இதே போன்று இடது காலிற்கு செய்ய வேண்டும். வலது காலை மடித்து, அதன் மீது அமர்ந்து, இடது காலை ,வலது காலின் மேல் போட்டு, வலது கையை மேலே பின் பக்கமாய் தூக்கி, இடது கையை பின்பக்கம் கொண்டு சென்று இரு கைகளையும் கோர்த்தபடி அரை நிமிடம் இருக்கவேண்டும். அதன் பிறகு ஒன்றன்பின் ஒன்றாய் விடுவித்து கால்கலை பழையபடி நீட்டிக்கொள்ளுங்கள். இது போல் தினமும் நான்கு முறை செய்யலாம்.

yoga that making your rib cage stronger

பலன்கள் :

இந்த யோகாசனத்தை செய்து வந்தால், கூனல் முதுகு நேராகும். புஞ்சங்கள் விரிவடையும். சிறிய மார்பகங்கள் கொண்ட பெண்களுக்கு மார்பகங்கள் விரிவடையும். கால் சுளுக்கு, தடை பிடிப்பு ஆகியவை குணம் பெறும்.

English summary

yoga that making your rib cage stronger

yoga that making your ribcage stronger
Please Wait while comments are loading...
Subscribe Newsletter