For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆணுறுப்பு, மார்பகம் பகுதிகளில் மட்டும் சருமம் அதிக கருமையாக காணப்படுவது ஏன்?

|

சிறு வயதில் நமது சருமத்தின் நிறம் உடல் முழுதும் பெரும்பாலும் ஒரே நிறத்தில் தான் இருக்கும். ஆனால், இளம் வயதில் இருந்து திடீரென நமது பிறப்புறுப்பு பகுதிகளில், மார்பக முலைக்காம்பு பகுதிகளில் சருமத்தின் நிறம் கருமையடைய தொடங்கும். ஏன் சிலருக்கு கருமையாகவே மாறிவிடும். வெள்ளை, மாநிறம் கருப்பு என எந்த நிறத்தில் இருந்தாலும் சரி, அனைவருக்கும் இது பொதுவாக நடக்கும்.

சிலர் அந்தரங்க இடங்களில் இருக்கும் கருமையை போக்க என்ன முயற்சி செய்தாலும் அந்த கருமை போகாது. இது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? நமது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஒருசில உடல்நலக் கோளாறுகள் தான் இதற்கான காரணிகளாக இருக்கின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெலனின்

மெலனின்

உடலில் பாலுணர்வு ஹார்மோன்கள் எழுச்சி அடையும் போது மெலனின் உற்பத்தி உண்டாகிறது. உங்கள் கூந்தல் மற்றும் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ப இதன் உற்பத்தி இருக்கும். மெலனின் என்பது கருப்பு நிறத்தை தரவல்லது ஆகும்.

பருவமடைதல்

பருவமடைதல்

ஆண், பெண் இருவரும் பருவமடையும் போது தான், ஆண்களுக்கு ஆணுறுப்பு மற்றும் முலைக்காம்பு பகுதிகளிலும், பெண்களுக்கு பிறப்புறுப்பு இதழ்கள் மற்றும் சிற்றிடதிலும் கருமை நிறம் அதிகரிக்கிறது என ஐரோப்பிய நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடல்நிலை காரணங்களும் இருக்கின்றன

உடல்நிலை காரணங்களும் இருக்கின்றன

பிறப்புறுப்பு பகுதியில் கருமை அதிகரிப்பது, ஒருவரது நாள்பட்ட உடல்நல பாதிப்பு அல்லது நீரிழிவு நோய்கான அறிகுறியாக கூட இது ஏற்படலாம் எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கொலம்பியா மருத்துவ பல்கலைகழகம்

கொலம்பியா மருத்துவ பல்கலைகழகம்

நியூயார்க்கில் இருக்கும் கொலம்பியா பல்கலைகழகத்தின் மருத்துவ மையத்தில் பணிபுரியும் மருத்துவர் லிண்ட்சே, "உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது கூட உடலின் சில பகுதிகளில் சரும நிறம் கருமை அடைந்துக் காணப்படலாம்" என கூறுகிறார்.

முலைக்காம்பு

முலைக்காம்பு

பெண்களுக்கு இளம் வயதில் முலைக்காம்புகள் வெளிர் நிறத்தில் தான் காணப்படும். ஆனால், பருவமடைந்த பிறகு அவர்களது ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தினால் முலைக்காம்பு நிறம் கருமையாக மாறுகிறது.

டெஸ்டோஸ்டிரோன்

டெஸ்டோஸ்டிரோன்

ஆண்களின் உடலை சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும் போது ஆணுறுப்பு பகுதியும், முலைக்காம்பு பகுதியும் கருமையடைகின்றன.

ஈஸ்ட்ரோஜன்

ஈஸ்ட்ரோஜன்

பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும் போது பிறப்புறுப்பு இதழ்கள் மற்றும் சிற்றிடத்தில் நிறம் கருமையடைகின்றன. இது இயற்கையானது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மெலனோசைட்டுகள்

மெலனோசைட்டுகள்

டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்றவை மெலனோசைட்டுகளை சீராக்குகின்றன, இவை மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும் இந்த செயல்முறையினால் தான் பருவமடைந்த பிறகு சில உடல் பாகங்களில் நிறம் கருமை அடைகின்றது.

தொற்றுகள்

தொற்றுகள்

சில சமயங்களில் கிருமி தொற்று, அரிப்பு போன்றவற்றின் காரணமாக கூட பிறப்புறுப்பு பகுதியில் அதிகமாக கருமையடைந்து காணப்படலாம்.

கருத்தரிப்பு

கருத்தரிப்பு

பெண்கள் கருத்தரிக்கும் போது அல்லது கருத்தரிப்பு மாத்திரைகள் உட்கொண்டு வரும் போதிலும் கூட இவ்வாறு சருமம் கருமையடையலாம் என கூறப்பாடுகிறது.

தடகள வீரர்கள்

தடகள வீரர்கள்

ஓட்டம் (ஓடுதல் சார்ந்த விளையாட்டுகள்), நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும் தடகள வீரர்களுக்கு கூட கால்கள் உராய்வுகளில் இருப்பதால் அவ்விடம் அதிக கருமையாக காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Your Penis And Nipples Are Darker Than The Rest Of Your Skin

Do you know why your penis and nipples are darker than the rest of your skin? read here in tamil.
Desktop Bottom Promotion