தினமும் 2 டம்ளர் மிளகுத் தூள் கலந்த நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் நீண்ட நாட்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ நினைக்கிறீர்களா? நிச்சயம் யாருக்கு இந்த ஆசை இருக்காது. ஆனால் அதற்கு நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சில செயல்களை அன்றாடம் பின்பற்ற வேண்டும். மேலும் நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

தினமும் காலையில் நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் பெறும் நன்மைகள்!!!

அந்த வகையில் நம் வீட்டின் சமையலறையில் இருக்கும் ஓர் அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த பொருள் தான் மிளகு. இந்த மிளகை தினமும் சமையலில் சேர்த்து வந்தால் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அந்த அளவில் மிளகில் சத்துக்களானது ஏராளமாக உள்ளது.

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

அத்தகைய மிளகைப் பொடி செய்து நீரில் கலந்து தினமும் இருவேளை குடித்து வந்தால், நம் உடலில் பல அதிசயக்கத்தக்க மாற்றங்களைக் காணலாம். இங்கு தினமும் இரண்டு டம்ளர் மிளகு கலந்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆற்றலை வழங்கும்

ஆற்றலை வழங்கும்

கோடையில் மிளகு தண்ணீரைக் குடிப்பது என்பது ஆரோக்கியமானது. எப்படியெனில் பொதுவாக கோடையில் அதிகமாக வியர்வை வெளியேறுவதன் மூலம், உடலின் ஆற்றல் குறையும். ஆனால் இந்த மிளகு நீரைக் குடிப்பதால், நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

கோடைக்காலத்தில் மலச்சிக்கலால் சிலர் அவஸ்தைப்படுவார்கள். இந்த மலச்சிக்கலைத் தவிர்க்க வேண்டுமானால், மிளகு நீரை தினமும் இரு வேளைப் பருக வேண்டும். இதனால் குடலியக்கம் சீராக இருக்கும்.

உடல் வறட்சி

உடல் வறட்சி

வெயில் காலத்தில் வேகமாக உடல் வறட்சியடையக்கூடும். இப்படி உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாமல் இருந்தால், உடலுறுப்புக்களின் செயல்பாடு குறைந்து, அதனால் மிகுந்த சோர்வையும், இதர பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் மிளகு நீரை காலையில் ஒரு டம்ளர், இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் என பருக உடல் வறட்சியைத் தடுக்கலாம்.

எடை குறையும்

எடை குறையும்

கோடைக்காலத்தில் எடையைக் குறைக்க மிளகு நீர் மிகவும் உதவியாக இருக்கும். மிளகில் உள்ள காரத்தன்மை, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, குறைந்த காலத்தில் அதிக கலோரிகளை வேகமாக கரைக்க உதவும். எனவே எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த மிளகு நீர் ஓர் சிறந்த பானம்.

பசியைக் கட்டுப்படுத்தும்

பசியைக் கட்டுப்படுத்தும்

உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் உணவின் மீதுள்ள அதிகப்படியான நாட்டம் தான். ஆனால் மிளகு நீரை ஒருவர் தினமும் 2 வேளை பருகினால், பசியைக் கட்டுப்படுத்தி, உணவின் மீதுள்ள அதிகப்படியான நாட்டத்தைக் குறைக்கும்.

எலும்புகளுக்கு நல்லது

எலும்புகளுக்கு நல்லது

எலும்பு பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 டம்ளர் மிளகு நீரைக் குடிப்பது, எலும்புகளுக்கு நல்ல பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.

நோய்கள்

நோய்கள்

முக்கியமாக மிளகு நீர் பலரையும் வாட்டும் நோய்களான புற்றுநோய் மற்றும் நீரிழிவைத் தடுக்கும். எப்படியெனில் மிளகு நீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கெட்ட கொழுப்புக்களின் தேக்கத்தைத் தடுத்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும். எனவே ஆரோக்கியமாக வாழ இந்த மிளகு நீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

மிளகு தண்ணீர் தயாரிப்பது எப்படி?

மிளகு தண்ணீர் தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி, அதில் 2 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, அத்துடன் 1 சிட்டிகை உப்பு மற்றும் 1-2 ரோஜாப்பூ இதழ்களை சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி சிறிது தேன் கலந்து குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Happens To Your Body If You Drink Pepper Water?

Do you know what can happen to your body if your drink one glass of pepper water.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter