குறைந்த ரத்த அழுத்தத்தை சரிப்படுத்தும் விருக்ஷாசனா - தினம் ஒரு யோகா

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

விருக்ஷா என்றால் மரம் என்று சமஸ்கிருதத்தில் பொருள். மரம் அடியில் குறுகி, மேலே விரிந்து நிற்பது போன்று, ஒரு காலில் மொத்த உருவத்தையும் தாங்கி நிற்கும் இந்த யோகாவிற்கு விருக்ஷாசனா என்று பெயர் வந்துள்ளது.

ரத்த ஓட்டம் குறைவாக சென்று, போதிய ரத்தம் உறுப்புகளுக்கு சரிவர கிடைக்காமல்போகும். இதைத்தான் குறைந்த ரத்த அழுத்தம் என்று சொல்வார்கள்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் இரண்டுமே உடலுக்கு ஆபத்துதான்.

vrikshasana to cure low blood pressure

தலைசுற்றல், தலைவலி, மங்கலான கண்பார்வை குறைந்த ரத்த அழுத்ததின் அறிகுறிகள் இவையெல்லாம் குறைந்த ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள்.

திடீரென உட்கார்ந்த நிலையிலிருந்து எழும்போது, அல்லது படுத்தவுடன் எழும்போது கண்கள் இருட்டிக் கொண்டு, தலை சுற்றினால் அது குறைந்த ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகும்.

குறைந்த ரத்தம் அழுத்தம் உடலுக்கு ஆபத்தைதான் தரும். ஆகவே உடனடியாக கவனிக்க வேண்டும். அவற்றை சரி செய்ய யோகாவில் ஒரு தீர்வு உண்டு.

அதுதான் விருக்ஷாசனா. இது செய்வதற்கு மிக எளிது. ரத்த ஓட்டத்தை சீராக்கும். அதனை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

vrikshasana to cure low blood pressure

தரையில் உள்ள விரிப்பில் நேராக நில்லுங்கள். மூச்சை சீராக விட வேண்டும். கால்களை நன்றாக சம நிலைப் படுத்தி நின்றுகொள்ளுங்கள்.

vrikshasana to cure low blood pressure

முதலில் வலது காலை தூக்கி, இடது காலின் தொடை மீது பாதம் பதிய வைக்க வேண்டும். முனிவர் ஒற்றைக் காலில் தவம் செய்வது போல. இப்போது கைகளை மேலே தூக்கி நமஸ்காரம் செய்வது போல் வையுங்கள். உங்கள் உடல் நேராக இருக்க வேண்டும்.

உடல் ஆடாமல் இருக்க உங்கள் இடது காலால் நன்றாக பேலன்ஸ் செய்து கொள்ளுங்கள். கண்கள் நேராக பார்த்தபடி இருக்க வேண்டும். 1 நிமிடம் அவ்வாறு இருந்துவிட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு வாருங்கள்.

vrikshasana to cure low blood pressure

இப்போது இது போல், இடது காலுக்கும் செய்யுங்கள். இவ்வாறு ஐந்து முறை செய்யலாம்.

பலன்கள் :

உங்கள் உடலில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். மனதை ஒருமுகப்படுத்துதல் அதிகமாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நரம்பு தளர்ச்சி பிரச்சனை சரியாகும்.

குறிப்பு :

ஒற்றை தலைவலி, தூக்கமின்மை, அதிக ரத்த அழுத்தம், ஸ்பாண்டைலிடிஸ் ஆகியவை உள்ளவர்கள் இந்த யோகாவை செய்ய வேண்டாம்.

English summary

vrikshasana to cure low blood pressure

vrikshasana to cure low blood pressure
Subscribe Newsletter