உங்கள் கண்களில் எரிச்சலா? அதை குணப்படுத்த இந்த சூப்பர் உணவுகளை முயற்சி செய்து பாருங்களேன்?

By: Srinivasan P M
Subscribe to Boldsky

நம் உடம்பிலுள்ள பல்வேறு பகுதிகளை போல், கண் இமை மற்றும் புருவங்களும் கூட பல்வேறு பாதிப்புக்குளாக வாய்ப்புக்கள் உள்ளன.

நம் புருவங்களில் எண்ணெய் சுரப்பிகள் சில தொற்றுக்களால் அடைக்கப்பட்டு கண்கள் வீக்கமடையலாம். இந்த பாதிப்பு பிளேபாரிடிஸ் அல்லது கண் இமை ரணம் எனப்படுகிறது

இந்த பாதிப்பிற்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பொடுகு, ஒவ்வாமை வெளிப்பாடு, மருந்துகளின் பக்க விளைவுகள் மற்றும் பாக்டீரியா கிருமித் தொற்றுகள் உள்ளிட்ட சில காரணங்கள் பிளேபாரிடிஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

Try thsese home remedies for burning sensation in your eye lids

இதன் அறிகுறிகள் என்னென்ன?

இமைகளில் அரிப்பு, வீங்கிய இமைகள், சிவந்த அல்லது நீர் கசியும் கண்கள், மற்றும் எரிச்சல் ஆகியவை பிளேபாரிடிஸ் தாக்கத்தின் அறிகுறிகள்.

நீங்கள் கீழே கூறப்பட்டிருக்கும் சில வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சைகள் மூலம் பிளேபாரிடிஸ் நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகளால் இருந்து நிவாரணம் பெற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 1. வேம்பு:

1. வேம்பு:

வேம்பு பொடுகை கட்டுப் படுத்தவும் கண்கள் இரத்தத்தையும் கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும். பொடுகு பிளேபாரிடிஸ் நோயின் ஒரு காரணமாக இருப்பதால் வேம்பு அதில் உள்ள தொற்றுக்களை எதிர்க்கும் தன்மையால், பொடுகைப் போக்கி நல்ல பலன் தருகிறது.

வேம்பு அலல்து வேப்பிலை தலை சருமத்தில் அரிப்பிற்கு நல்ல பலன் தரக்கூடியது. நான்கு கப் தண்ணீரில் சில வேப்பிலைகளை போட்டு நன்கு கொதிக்க விடவும்.

பின்னர் இந்த தண்ணீரால் வாரம் மூன்று முறை தலையை நன்கு அலசினால் பொடுகு அறவே நீங்கும்.

2. தேங்காய் எண்ணெய் :

2. தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் ரணங்களை ஆற்றும் தன்மை கொண்டது. இது ரணம், அரிப்பு மற்றும் வலிகளில் இருந்து ஆறுதலளிக்கக் கூடியது.

ஒரு பஞ்சினால் தேங்காய் எண்ணெயில் நனைத்து பாதிக்கப்பட்ட கண் இமைகளில் வைக்கவும். ஒரு நாளில் பல முறை இவ்வாறு செய்யலாம். பாதிக்கப் பட்ட பகுதியில் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜும் செய்யலாம்.

3. ஒமேகா-3 கொழுப்பு அமிலம்:

3. ஒமேகா-3 கொழுப்பு அமிலம்:

இது பிளேபாரிடிஸ் பாதிப்பை குறைக்க வல்லது. இது கண்களை ஈரப்பதத்துடன் வைக்கும் மேபோமியன் சுரப்பிகளை சரிவர இயங்கச் செய்யும்.

இந்த அமிலம் நிறைந்த மீன், ஆளி விதைகள் மற்றும் வால்நட் பருப்புகள் போன்ற உணவுகளை அதிகம் உண்ணுங்கள். உங்கள் மருத்துவரிடம் எவ்வளவு சாப்பிட வேண்டும் என கேட்டறிந்துகொள்ளுங்கள்.

4. விளக்கெண்ணெய்:

4. விளக்கெண்ணெய்:

இதுவும் பிளேபாரிடிஸ் நோய்க்கு நல்ல குணமளிக்கக் கூடியது. இதில் உள்ள ரிசிநோலக் அமிலம் இரணத்தை ஆற்றவல்லது. இது எரிச்சல், அரிப்பு, வலி போன்ற பிற பிளேபாரிடிஸ் நோயின் அறிகுறிகளையும் குணப்படுத்தும்.

இரவு படுக்கச் செல்லும் முன் பஞ்சை ஆமணக்கெண்ணெய்யில் நனைத்து கண் இமைகள் மீது சிறிது நேரம் வைக்கவும். காலை எழுந்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும். இதை தினமும் ஒரு முறை செய்ய வேண்டும்.

 5. தேயிலை மர எண்ணெய் (டீ ட்ரீ ஆயில்)

5. தேயிலை மர எண்ணெய் (டீ ட்ரீ ஆயில்)

பிளேபாரிடிஸ் அறிகுறிகளான அரிப்பு மற்றும் இரணம் ஆகியவற்றை குணமாக்க இந்த எண்ணெய் மிகவும் பயன்படக்கூடியது.

இந்த எண்ணெயை இரண்டு அல்லது மூன்று துளிகள் ஆலிவ் எண்ணெயிலோ அல்லது தேங்காய் எண்ணெயிலோ கலந்து பஞ்சை அதில் நனைத்து அதைக் கொண்டு கண்களை கழுவி சுத்தம் செய்யவும். இதை தினமும் இருமுறை செய்துவந்தால் பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Try thsese home remedies for burning sensation in your eye lids

If you have burning sensation in your eyes , try these super foods to get cured.
Story first published: Saturday, November 26, 2016, 7:37 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter