இரத்த தானம் செய்யும் முன் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய 6 முக்கியமான விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

தானத்தில் சிறந்த தானம் எது என்பது போட்டி கிடையாது. அது அந்தந்த சூழலை சார்ந்து அமைகிறது. பசியில் இருக்கும் ஒருவனுக்கு உணவளிக்கும் போது அன்னம் தான் சிறந்த தானம். வறுமையில் வாடும் ஒருவனுக்கு படிப்பை அளிக்கும் போது கல்வி தான் சிறந்த தானம்.

உணவு, பாடப் புத்தகம் போன்றவற்றை விலைக் கொடுத்து வாங்கிவிடலாம். ஆனால், உயிரைக் காக்கும் இரத்தத்தை அப்படி எளிதாக வாங்கிவிடவும் முடியாது, எளிதில் கிடைத்தும் விடாது. அதனால், தான் தானத்தில் ஒரு சிறப்பு இடத்தை வகிக்கிறது இரத்த தானம்.

Things You Need to Know Before Giving Blood

இரத்த தானம் சிலர் அச்சம் கொள்வார்கள், தயங்குவார்கள். இவை தேவையற்றது. உண்மையில் இது இரத்தம் பெறுபவர் மட்டுமின்றி, தரும் உங்களுக்கும் பல நன்மைகள் விளைவிக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தகவல் #1

தகவல் #1

சிலர் இரத்த தானம் செய்வதால் நமது உடலுக்கு ஏதனும் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுவதும் உண்டு. ஆனால், சிறிதளவு வலி கூட இருக்காது என்பது தான் உண்மை. முதல் முறை நரம்பில் ஊசி குத்தப்படும் போது மட்டும் சிறிது வலி உண்டாகலாம். மற்றபடி இரத்த தானம் செய்யும் போது எந்த வலியும் இருக்காது.

தகவல் #2

தகவல் #2

சிலர் இரத்த தானம் செய்தவுடன் ஒரு நாள் ஓய்வெடுக்க வேண்டுமா என்றெல்லாம் கருதுவார்கள். உண்மையில் இரத்த தானம் செய்தவுடன் 10 - 30 நிமிடங்கள் ஓய்வே போதுமானது. மற்றபடி, இரத்த தானம் செய்த பிறகு நீங்கள் புத்துணர்ச்சியாக தான் உணர்வீர்களே தவிர சோர்வாக அல்ல.

தகவல் #3

தகவல் #3

இரத்த தானம் செய்வதற்கு ஓரிரு மணிநேரத்திற்கு முன்பே ஆரோகியமான உணவுகள் உண்ண வேண்டியது அவசியம். உணவு உண்ணாமல் இரத்த தானம் செய்வது தவறு. மருத்துவர்களும் இப்படி இரத்தம் எடுக்க சம்மதிக்க மாட்டார்கள்.

தகவல் #4

தகவல் #4

நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்கள் என்றால், ஆண்கள் 12 வாரங்களுக்கு ஒருமுறையும், பெண்கள் 16 வாரங்களுக்கு ஒருமுறையும் இரத்த தானம் செய்யலாம். உங்கள் உடலில் இருந்து எடுக்கப்படும் இரத்தம் 24 மணிநேரத்திற்குள் மீண்டும் உடலில் புதியதாக ஊறிவிடும்.

தகவல் #5

தகவல் #5

உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள் சில சமயம் இரத்த தானம் செய்தால் உடல் வலிமை குறைந்துவிடுமோ என்று அச்சம் கொள்ளலாம். கடுமையான பயிற்சிகளை மட்டுமே இரத்த தானம் செய்த உடனே செய்யாமல் தவிர்ப்பது நல்லது. சிறிது இடைவேளைவிட்டு செய்யலாம்.

தகவல் #6

தகவல் #6

உண்மையில் இரத்த தானம் செய்வதால், உங்கள் உடலுக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகள் தான் உண்டாகின்றன. சீரான இடைவேளையில் இரத்த தானம் செய்பவர்களுக்கு ஸ்ட்ரோக் மற்றும் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் உண்டாகும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

இதற்கு காரணம் சீராக இரத்த தானம் செய்யும் நபர்களின் உடலில் புதிய இரத்தம் அதிகம் சுரப்பது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things You Need to Know Before Giving Blood

Six Important Things You Need to Know Before Giving Blood
Story first published: Saturday, October 8, 2016, 15:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter