For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வைட்டமின் குறைபாட்டை வெளிப்படுத்தும் அறிகுறிகள் மற்றும் தீர்வளிக்கும் உணவுகள்!

|

நமது உடற்திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது வைட்டமின் சத்துக்கள். வைட்டமின் எ, பி, சி, டி, கே என பலவன இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடல் உறுப்பின் நலனுக்கு உறுதுணையாக செயல்படுகின்றன.

வைட்டமின் ஏ அதிகம் இருக்கும் உணவுகள்!!!

எனவே, வைட்டமின் குறைபாடு என்பது நமது உடலின் ஒட்டுமொத்த செயல்திறனை குறைக்கும் தன்மை உடையது ஆகும். சிலர் வைட்டமின் குறைபாடு என்றால் உடனே, மருந்தகங்களில் விற்கப்படும் மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு.

வைட்டமின் ஈ அதிகம் உள்ள 10 உணவுகள்!!!

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளின் மூலமாகவே இதை சரி செய்ய முடியும். மேலும், முதலில் உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உதட்டு வெடிப்பு

உதட்டு வெடிப்பு

வைட்டமின் பி , இரும்பு மற்றும் ஜின்க் போன்ற ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் உதட்டு வெடிப்புகள் தோன்றலாம். முட்டைகள், மீன், வேர்கடலை, போன்ற உணவுகளில் இந்த சத்துக்கள் நிறைய இருக்கின்றன.

முடி உதிர்தல்

முடி உதிர்தல்

வைட்டமின் கே, ஈ, டி, பி7 மற்றும் எ போன்ற வைட்டமின் சத்துக்கள் குறைவாக இருந்தால் முடி உதிர்தல் ஏற்படலாம். உலர்ந்த பழங்கள், வாழைப்பழம், காளான், பூசணி விதைகள் போன்ற உணவுகளில் இந்த சத்துக்கள் கிடைக்கின்றன.

உடல் முழுதும் பருக்கள்

உடல் முழுதும் பருக்கள்

வைட்டமின் எ மற்றும் டி ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் இந்த பிரச்சனை ஏற்படலாம். உலர்ந்த பழங்கள், சர்க்கரைவள்ளி கிழங்கு, கேரட், வால்நட், பாதம் போன்ற உணவுகளில் இந்த சத்துக்கள் இருக்கின்றன.

அரிப்பு, உணர்ச்சியின்மை

அரிப்பு, உணர்ச்சியின்மை

வைட்டமின் பி, பி 12, 9, 6 போன்றவற்றின் குறைபாடு ஏற்பட்டால் இது போன்ற மாற்றங்கள் உடலில் ஏற்படலாம். கடல் உணவுகள், முட்டை, பருப்பு உணவுகள் போன்றவற்றில் இந்த வைட்டமின் சத்துக்கள் நிறைய கிடைக்கின்றன.

தசைப்பிடிப்பு

தசைப்பிடிப்பு

வைட்டமின் பி, மினரல்ஸ், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. பாதாம், வாழைப்பழம், கீரை, ஆப்பிள் போன்ற உணவுகளில் இந்த சத்துக்கள் நிறைய கிடைக்கின்றன.

வைட்டமின் பி

வைட்டமின் பி

மயக்கம், தூக்கமின்மை, மன அழுத்தம், செரிமான கோளாறு, உடல் எடையில் மாற்றம் போன்றவை வைட்டமின் பி குறைபாடு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள்.

வைட்டமின் சி

வைட்டமின் சி

ஈறுகளில் இரத்தம் வழிதல், செரிமானக் கோளாறு, மூக்கில் இரத்தம் கசிதல், புண்கள் ஆற தாமதம் ஆவது போன்றவை வைட்டமின் சி குறைபாடு உள்ளது என வெளிக்காட்டும் அறிகுறிகள். தினமும் எலுமிச்சை ஜூஸ் பருகி வந்தால் இதற்கு நல்ல தீர்வுக் காண முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read in English: Signs Of Vitamin Deficiency
English summary

Signs Of Vitamin Deficiency

Do you know about the Signs Of Vitamin Deficiency? read here tamil.
Desktop Bottom Promotion