செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் பெறும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

எப்படி இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் செலினியம் போன்றவை உடலுக்கு இன்றியமையாததோ, அதேப் போல் செம்புச் சத்தும் முக்கியமானது. ஒரு நாளைக்கு ஒருவருக்கு 900 மைக்ரோகிராம் செம்பு அவசியமானது. இத்தகைய செம்பு தினமும் 2-3 டம்ளர் நீரை செம்பு பாத்திரத்தில் குடிப்பதன் மூலம் எளிதில் கிடைக்கும்.

ஒருவருக்கு போதுமான அளவில் செம்புச் சத்து கிடைத்தால், அதனால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கலாம். இங்கு செம்பு எப்படி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை குறையும்

எடை குறையும்

செம்பு உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் செயலில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் செம்பு பாத்திரத்தில் நீரைக் குடித்து வருவது நல்ல பலனைத் தரும். மேலும் செம்பு கொழுப்புக்களை உடைப்பதில் இடையூறை உண்டாக்கும் நொதிகளின் செயல்பாட்டைத் தடுத்து, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரைக்கும்.

மூளை செயல்பாடு மேம்படும்

மூளை செயல்பாடு மேம்படும்

கர்ப்ப காலத்தில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்து வந்தால், கருவில் வளரும் சிசுவின் மூளை வளர்ச்சி ஆரோக்கியமாக இருந்து, பிறப்பு குறைபாட்டுடன் குழந்தை பிறப்பதைத் தடுக்கலாம். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க கொடுத்து வந்தால், மூளையின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும்.

கிருமிகள் அழிக்கப்படும்

கிருமிகள் அழிக்கப்படும்

செம்புவில் ஆற்றல்மிக்க உயிர்க் கொல்லி பண்புகள் உள்ளதால், இது உடலினுள் உள்ள பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ் நோய்த்தொற்றுக்களை அழித்து, உடலை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளும்.

இரத்த சோகை அபாயம் குறையும்

இரத்த சோகை அபாயம் குறையும்

செம்பு இரும்புச்சத்தை உறிஞ்ச உதவுவதால், உடலில் செம்பு குறைபாடு ஏற்பட்டால், அதோடு இரும்புச்சத்து குறைபாடும் ஏற்படும். மேலும் செம்பு புதிய இரத்த செல்களின் உருவாக்கத்திற்கு உதவி, இரும்புச்சத்தின் அளவை சீராக பராமரிக்கும்.

இதய நோய்கள்

இதய நோய்கள்

உடலில் செம்பு குறைபாடு ஏற்பட்டால், அதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கும். செம்பு இயற்கையாகவே ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இது தமனிகளில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் புரோஸ்டாகிளான்டின்ஸ் உற்பத்தியை அதிகரித்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Copper Is Important For Your Health

Like other minerals, namely iron, calcium and selenium, copper also has numerous health benefits. Here are five reasons you need copper for healthy living. Read on to know more.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter