For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் இடுப்பு வலியைப் போக்கும் பரிவ்ரத பார்ச்வ கோணாசனா :

|

இடுப்பு வலி என்பது பெரும்பாலான பெண்களுக்கு வரும். அதிக பளுவினைத் தூக்கினால், எலும்புகள் பலவீனமாக இருந்தால் வரும் அல்லது அதிக உடல் எடை கூடினாலும் இடுப்பு வலி தாங்க முடியாது. ஆனால் சிலருக்கு இடுப்பும் தொடையும் சேரும் இடத்தில் வலி ஏற்படும். இது விளையாட்டு வீரகளுக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு.

parivrtta parsva konasana to reduce groin pain

வலிக்கான காரணங்கள் :

இதற்கு காரணம், தசை பிடிப்பு, மூட்டு இணைப்புகளில் உள்ள சவ்வுகளில் ஏற்படும் பாதிப்பு ஆகியவைகளை சொல்லலாம்.

மேலும் ஆண்களின் விதைப்பையில் பிரச்சனைகள் இருந்தாலும், இவ்வாறான வலி தோன்றும். இதற்கு ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா என்ற பெயரும் உண்டு. பெயர் தான் அப்படியே தவிர, ஹெர்னியாவிற்கும், இந்த வலிக்கும் சம்பந்தம் இல்லை. சிறு நீரகத்தில் கற்கள் இருந்தால், சிறு நீரக தொற்று ஏற்பட்டாலும், இந்த பகுதியில் வலி ஏற்படும்.


பரிவ்ரத பார்ச்வ கோணாசனா :

இடுப்பு வலிக்கு தீர்வுகள் நிறைய இருந்தாலும், இடுப்பும், தொடையும் இணையும் கவட்டிப் பகுதியில் வலியை போக்க யோகாவில் ஒரு ஆசனம் இருக்கிறது. அது பரிவ்ரத பார்ச்வ கோணாசனா என்பதாகும். இந்த ஆசனத்தை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

முதலில் தடாசனத்தில் நிற்க வேண்டும். அதாவது நேராக நிறக் வேண்டும். மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்தபடியே இரண்டு கால்களையும் அகற்றி நில்லுங்கள். கைகள் நேராக உடலோடு சேர்ந்து இருக்க வேண்டும். பின்னர் மூச்சை விட்டபடி, உடலை வலது பக்கம் திருப்புங்கள்.

இப்போது வலது முட்டியை மடக்க வேண்டும். மெதுவாய் இடது கையை குனிந்து வலது பாதத்திற்கு இணையாக வையுங்கள்.

இடது கால் நேராக நீட்டியபடி இருக்க வேண்டும். இப்போது வலது கையை மேலே தலைக்கு மேலே உயர்த்துங்கள். தலையை மேலே பார்த்தபடி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த ஆசனத்தில் அரை நிமிடம் இருக்க வேண்டும். பின்னர் மெதுவாய் கைகளையும் , கால்களையும் தளர்த்தி, இயல்பு நிலைக்கு வாருங்கள்.

பலன்கள் :

இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் நெகிழ்வுத் தன்மையை தரும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்க வைக்கும்.
அடிவயிற்றில் உள்ள உறுப்புக்களை செயல்படவைக்கும்

குறிப்பு :

ரத்த கொதிப்பு, தூக்கமின்மை தலைவலி இருப்பவர்கள் இந்த யோகாவை தவிர்க்கவும்.

English summary

parivrtta parsva konasana to reduce groin pain

parivrtta parsva konasana to reduce groin pain
Story first published: Friday, July 1, 2016, 10:43 [IST]
Desktop Bottom Promotion