அமெரிக்கர்களை விட இந்தியர்களுக்கு 3 மடங்கு மாரடைப்பு அபாயம் அதிகம் ஏன்?

Posted By:
Subscribe to Boldsky

மேற்கத்தியம், அமெரிக்க பண்பாடு, உணவு முறை, வாழ்வியல் முறை மாற்றத்தின் மேலான மோகம் போன்றவற்றின் காரணமாக நாம் அமெரிக்காவை பொருளாதார ரீதியில் தோற்கடிக்க மறந்து, உடல்நல அளவில் தான் அவர்களை மிஞ்சி நிற்கிறோம்.

அமெரிக்கர்களை விட மூன்று மடங்கு அதிகமாக இந்தியர்களுக்கு மாரடைப்பு அபாயம் ஏற்படுகிறது என கடந்த வாரம் டெல்லியில் நடந்த இதய நல கருத்தரங்கில் கூறப்பட்டுள்ளது. மேலும் உணவு முறையில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே இதிலிருந்து தப்பிக்க முடியும் எனவும் கூறியுள்ளனர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
40 வயதிலேயே

40 வயதிலேயே

அமெரிக்கர்களுக்கு 50 வயதில் சராசரியாக மாரடைப்பு ஏற்படுகிறது எனில், இந்தியர்களுக்கு சராசரியாக 40 வயதிலேயே மாரடைப்பு ஏற்படுபிறது.

காரணம்

காரணம்

நடு வயதிலேயே அதிகம் மாரடைப்பு ஏற்பட நமது ஒழுங்கற்ற வாழ்வியல் முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையும் தான் காரணம் என டெல்லி இதய நல மையத்தில் கூறப்பட்டுள்ளது.

மரபணு காரணம்

மரபணு காரணம்

வாழ்வியல் மற்றும் உணவுமுறை மட்டுமின்றி, குடும்ப மரபணு காரணத்தாலும் கூட, அமெரிக்காவை விட இந்தியர்களுக்கு மூன்று மடங்கு அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது.

இந்தியா முதலிடம்

இந்தியா முதலிடம்

மாரடைப்பு அபாயம் அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் இதர உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இது மிகவும் வருந்தத்தக்கது என பிரபல இதய நல மருத்துவர் பவன் ஷர்மா கூறியுள்ளார்.

வளர்ந்து வரும் நாடுகளில் அபாயம்

வளர்ந்து வரும் நாடுகளில் அபாயம்

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இளைஞர் மத்தியில் மாரடைப்பு அபாயம் அதிகரிப்பது வளர்ச்சிக்கான முட்டுக் கட்டையாக தான் அமைகிறது.

பேச்சாளர்கள் கருத்து

பேச்சாளர்கள் கருத்து

டெல்லியில் இதய நல கருத்தரங்கில் பங்கேற்ற பல பேச்சாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உலகளவில் இதய நலன் குறித்த பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என வலியுறுத்தினர்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

வாழ்வியல் முறை, உடற்பயிற்சி, உணவுமுறை என பலவற்றில் ஆரோக்கிய மாற்றம் ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே இந்த அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும்.

தவிர்க்க வேண்டியவை

தவிர்க்க வேண்டியவை

இரசாயன கலப்பு உணவுகள், சோடா பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும், இயற்கை உரம் கொண்டு விவசாயத்தை வரவேற்க வேண்டும்.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

மேலும், நெஞ்சில் வலி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது எனில், உடனடியாக பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். நீங்களாக சாதாரணமாக கருதுவது தான் மாரடைப்பு அபாயம் ஏற்படுவதற்கான முக்கிய காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indians 3 Times More Prone To Cardiac Arrest Than Americans

New Delhi: Indians are three times more prone to cardiac arrest than Americans owing primarily to poor lifestyle, eating habits and genetic reasons, medical experts have said.