For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மன அழுத்தத்தை குறைக்கும் ஈஸியான யோகா!!

|

எல்லாருமே படித்து ஒரு வேலையில் அமர வேண்டுமென்றுதான் சிறு வயதிலிருந்து மாங்கு மாங்கென்று படிக்கிறோம். படித்தாயிற்று, வேலையும் கிடைத்தாயிற்று என்று யாராலும் நிம்மதி அடையமுடிகிறதா? இல்லை.

அதற்கு பின்னும் ஓட்டம்தான். பொருளாதரத்தை மேம்படுத்த வேண்டும். போட்டிகளை சமாளிக்க வேண்டும் ,பல பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். இதன் விளைவு மன அழுத்தம்.

How to get rid of mental fatigue

இன்று உலகளவில் மன அழுத்தம் இல்லாத மனிதர்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கவலைப்பட வேண்டிய விஷயம். அதற்காக எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட முடியுமா? இந்த பிரச்சனைகளிலிருந்து எப்படி வெளிவரலாம்.

நல்ல இசையை கேளுங்கள். வாரம் ஒருமுறை பிடித்த இடத்திற்கு சென்று வாருங்கள். மனதை முடிந்த வரை மகிழ்ச்சியான விஷயத்திற்கு திசை திருப்புங்கள். அதைவிட இன்னும் சிறப்பான ஒரு வழி யோகா. யோகாவினால் எத்தனையோ நோய்களை குணமாக்கலாம். மன அமைதி, உடல் ஆரோக்கியம் இரண்டிற்கும் வழியை தரும்.

உர்த்வ ஹஸ்தாசனா :

இந்த ஆசனம் செய்வதற்கு எளிது. மன அழுத்ததை குறைக்கும். உர்த்வ என்றால் சமஸ்கிருதத்தில் மேலே என்று பெயர். ஹஸ்தா என்றால் கைகள். கைகளை மேல் நோக்கி சல்யூட் அடிப்பது போல் செய்யப்படும் இந்த யோகாவினால் நிறைய பயன்கள் பெறலாம் எப்படி செய்வது என பார்க்கலாம்.

செய்முறை :

முதலில் தடாசனாவில் நில்லுங்கள். ஆழ்ந்து மூச்சை விட வேண்டும். முதுகை வளைக்காமல் நிமிர்ந்து நிற்க வேண்டும். கால்களுக்கு இடையே இடைவெளி தேவையில்லை.

நேராக கைகளை தூக்கி, மேல் நோக்கி நீட்டுங்கள். உங்கள் கைகளைபார்த்தவாறு முகத்தையும் மேலே உயர்த்த வேண்டும். அந்தே நிலையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும். ஆழ்ந்து மூசை விடுங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வர வேண்டும்.

பலன்கள் :

இது ஆஸ்துமாவிற்கு நல்ல பலன் தரும். சுவாசக் குழாய் சீராகும். கைகளுக்கு நெகிழ்வுத்தன்மை தரும். தோள்பட்டைகள் பலம்பெறும். மன அழுத்தம், மனப்பதட்டம் குறையும்.

English summary

How to get rid of mental fatigue

How to get rid of mental fatigue
Story first published: Monday, August 8, 2016, 11:51 [IST]
Desktop Bottom Promotion