ஆர்த்ரிடிஸ் வலியை குணப்படுத்தும் சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள்!

By: Batri Krishnan
Subscribe to Boldsky

நாம் செயலாற்றும் நிலையில் இருப்பதற்கு நம்முடைய கால்களே பிரதானம். அத்தகைய முக்கிய உறுப்பான நம் கால்களை பாதிக்கும் மிக மோசமான நோயாக ஆர்த்ரிடிஸ் விளங்குகின்றது. அதிக வலியைத் தரும் ஆர்த்ரிடிஸ் நோய் சில நேரங்களில் கடுமையாக உள்ளது; எனினும், இது அரிதாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது.

ஆர்த்ரிடிஸ் நோய். உடலின் உள்ளே வெடித்துவிட்ட எலும்புகள் தங்களுக்குள் பின்னிப் பிணைந்து விடுவதால் வருகின்றது. ஒரு முறை இது வந்துவிட்டால் இதிலிருந்து மீள்வது மிகவும் கடினமாகும்.

ஆர்த்ரிடிஸ் நோயின் வலி ​​மற்றும் கோளாறுகளை நம்மால் பொறுத்துக் கொள்ள மட்டுமே முடியும். இந்த நோயை மருந்து மற்றும் மாத்திரைகள் மூலம் குணப்படுத்த இயலாது. இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்த ஒரே வழி அறுவை சிகிச்சை' மட்டுமே.

ஆர்த்ரிடிஸ் நோய்க்கு ஒரு சில மருத்துவ முறைகள் பயனளிக்காமல் போனால், சில கலவையான மருத்துவ முறைகள் பயன் தரலாம். எனவே ஆர்த்ரிடிஸ் சிகிச்சை என்பது நோயாளிக்கு நோயாளி மாறுபடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை குறைவு நல்ல வழி

எடை குறைவு நல்ல வழி

உங்களுடைய கூடுதல் எடையானது, உங்களின் முழங்கால் மூட்டுகளில் சுமார் 4 மடங்கு அழுத்தத்தை தரும். எனவே சிறிய அளவிளான எடை குறைப்பு கூட உங்களுடைய முழங்கால் வலிக்கு நல்ல நிவாரணம் தரும். நீங்கள் ஒரு சில கிலோ கூடுதல் எடைய குறைத்தால் அது உங்களுடைய மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் அது உங்களுக்கு ஆர்த்ரிடிஸ் நோய் வரும் வாய்ப்பை சுமார் 50 சதவீதம் வரை குறைக்கும்.

தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

ஒரு சில உணவுப் பொருட்கள் ஆர்த்ரிடிஸ் நோயுடன் நேரிடையாக தொடர்புடையது. குறிப்பாக இரவு நிழல் குடும்பத்தில் உள்ள தாவரங்களான தக்காளி, கத்திரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் மிளகு போன்றவை சிலருக்கு ஒவ்வாமை மற்றும் ஆர்த்ரிடிஸ் கோளாறுகளை அதிகரிக்கலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

மேலே உள்ள உணவுப் பொருட்களை உங்களுடைய உணவில் இருந்து ஒவ்வொன்றாக விலக்கி அதனுடய பயனை சோதித்துப் பாருங்கள். உங்களுக்கு ஆர்த்ரிடிஸ் நோயின் கோளாறுகளை அதிகரிக்கச் செய்யும் உணவுப் பொருளை இதன் மூலம் கண்டறியலாம். அந்த உணவுப் பொருளை, உங்களுடைய உணவுப் பட்டியலில் இருந்து நிரந்தரமாக விலக்கி வைப்பதன் மூலம் ஆர்த்ரிடிஸ் நோயின் கடுமையை குறைக்கலாம்.

ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களை தவிர்க்கவும்

ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களை தவிர்க்கவும்

ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சில காய்கறி எண்ணெய்கள் ஆர்த்ரிடிஸ் நோயின் கடுமையை அதிகரிக்கலாம் என சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. உங்களுடைய உணவுப் பழக்கத்தில் மேலே கூறிய ஏதேனும் சில உணவுகள் இருந்தால், அதை விலக்கி நோயின் கடுமையைச் சோதித்து அறியுங்கள். அத்தகைய உணவுகளை நிரந்தரமாக விலக்கி வையுங்கள்.

வைட்டமின் சி குறைபாடும் ஓர் காரணம்

வைட்டமின் சி குறைபாடும் ஓர் காரணம்

வேறு சில ஆராய்ச்சி முடிவுகள் வைட்டமின் சி பற்றாக்குறை ஆர்த்ரிடிஸ் நோயின் கடுமையை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கின்றன. எனவே ஒரு நாளைக்கு 500 மி.கி வைட்டமின் சி எடுத்துக் கொள்வது ஆர்த்ரிடிஸ் நோயின் கடுமையை குறைப்பதற்கு மிகவும் அவசியம்.

பீட்டா கரோட்டின் மற்றும் செம்பு குறைபாடு

பீட்டா கரோட்டின் மற்றும் செம்பு குறைபாடு

பீட்டா கரோட்டின் மற்றும் செம்பு நிறைந்த கேரட் ஜூஸை ஆர்த்ரிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக் கொள்வது அந்த நோயின் கடுமையை கண்டிப்பாக குறைக்கும்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம்

அன்னாசி பழச்சாற்றில் அதிக அளவிலான ப்ரோமெலைன் என்சைம்ஸ் உள்ளது. இது எழும்புகள் வீங்குவதை குறைக்கின்றது.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு

மெக்னீசியம் சல்பேட் நிறைந்திருக்கும் எப்சம் உப்பு கலந்த நீரில் குளிப்பது, ஆர்த்ரிடிஸ் நோயால் ஏற்படும் மூட்டு வலிக்கு இதம் தரும். மெக்னீசியம் சல்பேட்டில் நிறைந்திருக்கும் எழும்பு வீக்கத்தை எதிர்க்கும் சக்தி மற்றும் மூட்டு வலியை எதிர்க்கும் சக்தி ஆகிய இரண்டும் நம் உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் பேதியுப்பில் குளிக்கும் பொழுது மெக்னீசியம் சல்பேட் உப்பானது நம்முடைய தோலின் மூலம் மிக எளிதாக உறிஞ்சப்பட்டு விடும்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு

மெக்னீசியம் மனித உடலுக்கு மிக முக்கியமான மற்றும் அத்தியாவசிய தாதுவாகும். மேலும் நாம் உட்கொள்ளும் உணவில் இது வழக்கமான அளவில் இல்லாமல் எப்பொழுதும் பற்றாக்குறையுடனேயே காணப்படுகின்றது. எனவே ஆர்த்ரிடிஸ் நோயைக் குணப்படுத்த ஒரு சிறந்த தீர்வாக சூடான எப்சம் உப்பு குளியல் விளங்குகின்றது. அதன் மூலம் உருவாகும் வெப்பமானது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதன் காரணமாக மற்றும் தசைகள் விரிவடைகின்றது. அது வீக்கத்தையும் குறைக்கின்றது.

குறிப்பு

குறிப்பு

உடல் வலிமையை அதிகரிக்கும் உடற்பயிற்சி, உங்களுடைய வளர்ச்சிதை மாற்ற செயல்முறையை அதிகரிக்கின்றது. அது உங்களுடைய உடலில் பல்வேறு அதிசயங்களை உருவாக்கும். எனவே, இங்கே கூறிய சில வழி முறைகளைப் பின்பற்றி உங்களுடைய ஆர்த்ரிடிஸ் நோயின் கடுமையை வீட்டில் இருந்தபடியே குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies To Cure Arthritis Pain

The best way to treat arthritis pain is through home remedies. Among which epsom salt bath and drinking juices are the best and natural ways to treat arthritis.
Story first published: Sunday, April 3, 2016, 9:30 [IST]
Subscribe Newsletter