இந்த மூன்று உடல்நலக் கோளாறுகள் பற்றி இந்தியர்கள் உடனடியாக அறிந்துக் கொள்ள வேண்டும்!

Posted By:
Subscribe to Boldsky

வரவர உடல்நலக் குறைபாடுகள், கோளாறுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தெருவுக்கு, தெரு பெட்டிக்கடை போல மருத்துவமனைகள் உருவாகிவிட்டன என நம்மில் பலரும் புலம்புவோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் நமது உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறோம்.

தலைவலி, காய்ச்சல் என்றால் மருந்தகங்கள் சென்று ஏதோ மருந்துகளை வாங்கி விழுங்குவதில் துவங்கி, உடல்நல மாற்றங்கள், உடலில் வெளிப்படும் அறிகுறிகள் பற்றி அறிந்துக் கொள்வதில் கவனமின்றி இருப்பது என நாம் அன்றாடம் செய்யும் தவறுகள் ஏராளம்.

முக்கியமாக இந்தியர்கள் அதிகரித்து வரும் மூன்று உடல்நலக் குறைபாடுகள் பற்றி அதன் அபாயம் என்னவென்று தெரியாமால் இருகிறார்கள் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயர் இரத்த அழுத்தம்!

உயர் இரத்த அழுத்தம்!

இன்று டார்கெட்டை நோக்கி ஓடிக்கொண்டு பணியாற்றி அனைத்து ஊழியர்களுக்கும் இந்த உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருக்கிறது. ஆனால், இதைப்பற்றி யாரும் பெரிதாய் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், நாள்பட இதன் மூலம் உடல்நல அபாயங்கள் ஏற்படலாம்.

உயர் இரத்த அழுத்தம் - பக்கவிளைவுகள்!

உயர் இரத்த அழுத்தம் - பக்கவிளைவுகள்!

நாள்பட உயர் இரத்த அழுத்தம் பற்றி நீங்கள் கண்டுக் கொள்ளாமல் இருப்பதால் மிகுதியாக பாதிக்கப்படுவது நமது இதயம் தான். இதயம் மட்டுமின்றி, மூளை மற்றும் சிறுநீரகங்களும் கூட அதிகளவில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிப்படைகிறது.

குழந்தைகள் மத்தியில் மன நோய்!

குழந்தைகள் மத்தியில் மன நோய்!

தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா போன்றவர்கள் குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வரும் இந்த மன நோய் பற்றி வெளிப்படையாக பேசுவது வரவேற்க்கத்தக்கது. ஆனால், இந்திய குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வரும் இந்த மன நோய் பிரச்சனை பற்றி பெரிதாக யாரிடமும் விழிப்புணர்வு இல்லாதது வருந்தத்தக்கது.

புள்ளியல் விவரம்!

புள்ளியல் விவரம்!

ஆய்வுகள் மற்றும் புள்ளிவிவரங்கள் மூலம் அறிய வருவது என்னவெனில், மன நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளில் 50% பேருக்கு 14 வயதுக்கு முன்னரே இது உண்டாகிவிடுகிறது. மேலும், இந்த 50% பேருக்கு தகுந்த மருத்துவ முறை சிகிச்சைகள் அளிக்கப்படுவதும் இல்லை, இவர்கள் மன நோய் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டரியப்படுவதும் இல்லை.

கால்-கை வலிப்பு!

கால்-கை வலிப்பு!

புள்ளியல் விவரங்கள் மூலம் அறியவருவது என்னவெனில், ஒற்றைத்தலைவலி, ஸ்ட்ரோக்-க்கு பிறகு அதிகமாக ஏற்படும் நரம்பியல் கோளாறு கைக்கால் வலிப்பு தான். கை- கால் வலிப்பு என்பது நாள்பட நீடிக்கும் குறைபாடு ஆகும். இது தாங்க முடியாத வலியை உண்டாக்க கூடியது.

மருந்துகள்!

மருந்துகள்!

நோய் எதிர்ப்பு மருந்துகள் கொண்டு இதை கட்டுப்படுத்த தான் முடியுமே தவிர பூரணமாக குணப்படுத்த முடியாது. காக்கா வலிப்பு எனப்படும் இந்த கை-கால் வலிப்பு மருந்துகள் அதிகமாக எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் உண்டாகும் அபாயங்கள் இருக்கின்றன.

பக்க விளைவுகள்!

பக்க விளைவுகள்!

காக்கா வலிப்புக்கு அதிகமாக மருந்து எடுத்துக் கொள்வதால், ஞாபக மறதி, சோர்வு, ஓர் விஷயத்தை பற்றி தெளிவாக சிந்திப்பது போன்றவற்றில் கோளாறுகள் உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Issues That Indians Need To Know Immediately

Health Issues That India Doesn't Talk About, But Needs To Immediately,
Story first published: Friday, August 19, 2016, 12:10 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter