தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

கோடையில் உடலில் நீர்வறட்சி அதிகம் ஏற்படும். எனவே இதனைப் போக்கும் வகையில் இக்காலங்களில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்களான தர்பூசணி, அன்னாசி, முலாம் பழம், ஆரஞ்சு போன்றவற்றைக் காணலாம்.

இதில் குறிப்பாக பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது தர்பூசணியைத் தான். மேலும் உடல்நல நிபுணர்களும் கோடையில் 2 டம்ளர் தர்பூசணி ஜூஸைக் குடிப்பது நல்லது என்று கூறுகின்றனர்.

தர்பூசணியில் உள்ள உட்பொருட்கள் கலோரிகளைக் கரைப்பதோடு, சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதிலும் தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடித்தால், சுவை அற்புதமாக இருப்பதோடு, ஆரோக்கியமும் மேம்படும்.

இங்கு தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்தது குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை குறையும்

எடை குறையும்

தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது உடல் எடை குறையும் என்பது. இதற்கு இதில் சேர்க்கப்படும் மிளகுத் தூள் தான் காரணம். எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து குடியுங்கள்.

கொலஸ்ட்ரால் கட்டுப்படும்

கொலஸ்ட்ரால் கட்டுப்படும்

உங்களுக்கு உயர் கொலஸ்ட்ரால் இருந்தால், தர்பூசணி ஜூஸ் உடன் மிளகுத் தூள் சேர்த்து குடிக்க, கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

கோடை அரிப்புக்கள் தடுக்கப்படும்

கோடை அரிப்புக்கள் தடுக்கப்படும்

கோடையில் அதிகமான வியர்வையின் காரணமாக அரிப்புக்கள் ஏற்படும். இதனைத் தடுக்க தர்பூசணி ஜூஸ் உதவும்.

புற்றுநோய் தடுக்கப்படும்

புற்றுநோய் தடுக்கப்படும்

தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான லைகோபைன், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழிக்கும். குறிப்பாக ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கும்.

மாரடைப்பு

மாரடைப்பு

தர்பூசணியில் வளமான அளவில் ஃபோலேட் உள்ளது. இந்த ஃபோலேட் தான் உடலில் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் போன்றவை வராமல் இருக்கும்.

நீர்ச்சத்தை தக்கவைக்கும்

நீர்ச்சத்தை தக்கவைக்கும்

தர்பூசணி கோடையில் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ள உதவும். எனவே உங்களுக்கு கோடையில் தாகம் அதிகம் இருந்தால், ஒரு நாளைக்கு 2-3 டம்ளர் தர்பூசணி ஜூஸை மிளகுத் தூள் சேர்த்து குடித்து வாருங்கள்.

வயிற்று பிரச்சனைகள் நீங்கும்

வயிற்று பிரச்சனைகள் நீங்கும்

கோடையில் மலச்சிக்கலால் கஷ்டப்பட்டு வந்தால், தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடியுங்கள். இதனால் செரிமான மண்டலத்தில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறி, குடலியக்கம் சீராக செயல்பட்டு, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.

ஆஸ்துமா கட்டுப்படும்

ஆஸ்துமா கட்டுப்படும்

தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் டாக்ஸின் அளவைக் குறைக்கும். மேலும் ஆஸ்துமா பிரச்சனை இருந்தால், இந்த ஜூஸ் அவை வருவதைத் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Watermelon Juice With Pepper

Watermelon juice has its fair share of health benefits. When you add pepper to the juice it becomes a lot more healthier, read on to know more.
Story first published: Saturday, March 5, 2016, 12:06 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter