ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ஐந்து ரகசியக் குறிப்புகள்!

By: Batri Krishnan
Subscribe to Boldsky

நேற்று மற்றும் நாளை என்பது நம்முடைய வாழ்வை மாற்றப்போவதில்லை. இன்று மட்டுமே நிஜம். அதிலும் உங்களுடைய இன்றைய ஆரோக்கியம் என்பது உங்களுடைய எதிர்கால வாழ்க்கைகையே தீர்மானிக்கின்றது. இப்பொழுது நம்முடைய ஆரோக்கியத்தைப் பற்றிய இன்றைய நிதர்சனத்தை சில கேள்விகளின் மூலம் அறிய முயல்வோமா?.

உங்களுடைய இன்றைய செயல்திறன் ஆற்றல் என்பது நேற்றைய செயல்திறன் ஆற்றலை விட குறைந்துள்ளதா? உங்களுடைய வேலை மற்றும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சில விஷயங்கள் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றதா? உங்களுடைய இடுப்புப் பகுதியில் புதிதாக உண்டாகியிருக்கும் ஒரு 3 கிலோ கூடுதல் சதை மடிப்பை இழக்க விரும்புகின்றீர்களா?

மேற்கூறிய ஏதேனும் ஒரு கேள்விக்கு உங்களுடைய பதில் ஆம் எனில், உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பற்றி பாடம் வேண்டும். ஒரு சாமானிய நபர் அவரது வாழ்க்கையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கை வேலைக்காக செலவழிக்கின்றார். அது அலுவலகத்தில் புரியும் வேலையாகட்டும், அல்லது செய்கின்ற வேலையாகட்டும், அல்லது வேலையைப் பற்றிய யோசனையாகட்டும், நமது வாழ்க்கையைச் சார்ந்தே இருக்கின்றது.

மீதமுள்ள பெரும்பாலான நேரம் தூங்கத்தில் செலவழிக்கப்படுகிறது. தேவையற்ற அழுத்தத்தை நீக்குவது என்பது உங்கள் தினசரி வாழ்வில் நிறைவேற்ற வேண்டிய கடினமான விஷயங்களில் ஒன்றாக இருக்கலாம். மறுபுறம், அது உங்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரும் தாக்கத்தை உருவாக்கலாம்.

நீங்கள் எப்பொழுதேனும் "சிறிய விஷயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்கிற சொற்றொடரை கேள்விப்பட்டதுண்டா? இப்போது இந்த வார்த்தைகளை நடைமுறைப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. எனவே, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் வாழும் பொருட்டு நாம் பின்பற்ற வேண்டிய சில ரகசிய குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்களுடைய உற்சாகத்தை ஒன்று திரட்டுதல்

உங்களுடைய உற்சாகத்தை ஒன்று திரட்டுதல்

நீங்கள் இன்னும் சோர்வாக உணர்கின்றீர்களா?. அதை துரத்தியடிக்க முயற்சி செய்யலாமா? சில மெழுகுவர்த்தியை ஏற்றி வையுங்கள். ஒரு நல்ல குளியல் போடுங்கள். ஒரு உடற்பயிற்சி ஸ்பாவிற்கு செல்ல முயலுங்கள். அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகத்தைப் படிக்க முயற்சி செய்யுங்கள். இவை அனைத்தும் கண்டிப்பாக உங்களுடைய மன அழுத்தத்தை விரட்ட உங்களுக்கு உதவி புரியும்.

புகைப்பிடிப்பதை நிறுத்துதல்

புகைப்பிடிப்பதை நிறுத்துதல்

நீங்கள் உங்களூடைய புகைப்பிடிக்கும் பழக்கத்தைப் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை எனில், அதை இப்பொழுதே கண்டிப்பாக நிறுத்த முயற்சிக்குமாறு நாங்கள் உங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றோம். புகைப்பிடிப்பது ஒரு குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்கலாம். ஆனால் புகைப்பிடிப்பதை நிறுத்துவது என்பது நீண்ட கால நோக்கில் நல்ல ஆரோக்கியமான விளைவுகளை உங்களுக்குத் தரும்.

உங்களுடைய உணவே மிகவும் முக்கியம்

உங்களுடைய உணவே மிகவும் முக்கியம்

ஒரு ஆரோக்கியமான மற்றும் சமநிலையான உணவு என்பது உங்களுடைய ஆற்றலை அதிகரிக்கும். பச்சை காய்கறிகளும், பழங்கள் மற்றும் போதுமான அளவு இறைச்சி, மற்றும் பால் பொருட்களுடன் நிறைய தண்ணீர் மற்றும் பால் குடித்து வருவது உங்களுடைய உடல் எடையை குறைக்க உதவுவதுடன் உங்களை செல்வந்தர் போல் உணர வைக்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தினசரி அல்லது ஒரு வழக்கமான இடைவெளியில் நீங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சியானது உங்களை நன்றாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சியானது உங்களுடைய ஆற்றலை அதிகரிக்கும், மன அழுத்தத்தை குறைக்கும் மற்றும் உங்களை சுறுசுறுப்பாக்கும். இதையெல்லாம் விட உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

சுகாதாரக் கல்வி

சுகாதாரக் கல்வி

சுகாதார கல்வி என்பது ஆரோக்கியமாக வாழும் புதிய வழிமுறைகளைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு நல்ல வழி. தொலைக்காட்சி சேனலைப் பார்ப்பது அல்லது சுகாதார பத்திரிக்கையை வாசிப்பது என்பது சந்தையில் தற்பொழுது என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து நீங்கள் உங்களுக்கு உதவி புரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Secret Tips For A Healthy Lifestyle

To live a healthy life you need to follow a healthy lifestyle. So, read to know tips for a healthy lifestyle. Stay fit and eat well.
Story first published: Saturday, April 9, 2016, 9:30 [IST]
Subscribe Newsletter