இடுப்பிற்கு பலம் சேர்க்கும் ஏகபாத ராஜ கபோட்டாசனா - தினம் ஒரு யோகா !!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

இன்றைய காலகட்டங்களில் ஓடியாடி வேலை செய்பவர்களை விட, கணிப்பொறியின் முன் அமர்ந்து கொண்டு வேலை பார்ப்பவர்களே அதிகம்.

நாள் முழுவதும் அமர்ந்து கொண்டு வேலை செய்வதனால் உடற்பயிற்சியை மறந்துவிடுகிறோம். சின்ன சின்ன வேலைகளைக் கூட நாம் செய்வது கிடையாது. இதனால் சோம்பேறித்தனம் மட்டுமல்ல, உடல் நிலையும் ஆரோக்கியமற்ற சூழ் நிலையில்தான் இருக்கிறது.

பாதி உடலை இடுப்புதான் தாங்குகிறது. அது சமனாகும்போது, இடுப்பைதாங்கும் மூட்டு மற்றும் பாதங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படாது.

ekapatha raja kapotasana to increase flexibility for hip

நாள் முழுவதும் இடுப்பிற்கு வேலை தராமல் இருந்தால், இடுப்பில் கொழுப்பு அதிகமாகி, பெருத்து, பலமில்லாமல் போகும். தசைகள் இறுகி, இடுப்பு பின்னாளில் வளையாமல் அடம்பிடிக்கும். மூட்டும் பாரம் தாங்காமல், வலுவிழந்து மூட்டு வலி ஏற்படுகின்றது.

மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு தண்டுவட பிரச்சனைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. ஆக்வே இடுப்பில் கொழுப்புகளை தங்க விடாமல் நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பது அவசியம்.

இடுப்பு பலம்பெற உடற்பயிற்சி செய்வது நல்லது. அதனினும் யோகா செய்வது மிக நல்லது. யோகாவில் இடுப்பு எலும்புகள் பலம்பெற்று தசைகளுக்கு நெகிழ்வுத்தன்மை தருவது போல் ஆசனம் உள்ளது. அதுதான் ஏகபாத ராஜ கபோட்டாசனா.

ஏகபாத ராஜ கபோட்டாசனா :

ஏக பாத என்றால் ஒற்றி பாதம், ராஜ என்ரால் அரசன், கபோட் என்றால் புறா. புறாவை போன்ற தோற்றத்தில், ஒற்றை காலைக் கொண்டு ஆசனத்தை செய்வதால் இந்த பெயர் பெற்றுள்ளது. தலைக்கும் காலுக்கும் இடைப்பட்ட உறுப்புகளுக்கு பயிற்சி தருவது இந்த யோகாவின் பயனாகும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

செய்முறை :

ekapatha raja kapotasana to increase flexibility for hip

முதலில் மண்டியிட்டு அமருங்கள். பின்னர் குழந்தை தவழ்வது போல கைகளை முன்னே ஊன்றுங்கள். மெதுவாய் ஆழ்ந்து மூச்சை வாங்கி விடுங்கள்.

ekapatha raja kapotasana to increase flexibility for hip

இப்போது இடது காலை மடக்கி வலது காலை பின்னாடி நீட்டவும். இரு கைகளையும் ஊன்றிக் கொள்ளுங்கள்.

ekapatha raja kapotasana to increase flexibility for hip

பின்னர் மேலே படத்தில் காட்டியது போல்மெதுவாக வலது காலை மடக்கி மேலே நோக்கி கொண்டு வரவும். கைகளால் வலது பாதத்தினை பிடித்துக் கொள்ளுங்கள். இப்போது மூச்சினை ஆழ்ந்து இழுத்து விடுங்கள்.

பின்னர் இயல்பு நிலைக்கு வரவும். அதன் பிறகு இடது காலிலும் இதே போன்று செய்யவும்.

பலன் :

பின்பகுதிகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.. அடிவயிற்றுப் பகுதியிலுள்ள உறுப்புகள் நன்றாக இயங்கும். மனத்தளர்ச்சி, சோம்பல் நீங்கும்.

English summary

ekapatha raja kapotasana to increase flexibility for hip

ekapatha raja kapotasana to increase flexibility for hip
Subscribe Newsletter