For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க தினமும் சரியா தூங்காம இருந்தா, இந்த நோய்கள் உங்களை எளிதில் தாக்கும்!

நாள்பட்ட தூக்கமின்மை உயிரைப் பறிக்கும் மோசமான நிலைகளான இதய நோய் முதல் புற்றுநோய் வரை பல நோய்களுக்கு வழிவகுப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு தூக்கமின்மையால் வரக்கூடிய நோய்கள் இதோ!

|

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. இது தான் நீண்ட நேரத்திற்குப் பின் உடலுக்கு புத்துணர்வு அளிக்கும் வழியும் கூட. ஒருவர் தூங்கும் போது, உடலில் மில்லியன் கணக்கிலான செயல்பாடுகள் நடைபெறும். முக்கியமாக பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, புத்துயிர் அளிக்கப்படும்.

Diseases Your Lack of Sleep Could Be Causing

ஆனால் இன்றைய மன அழுத்தமிக்க மற்றும் வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையில், பலர் சரியான தூக்கத்தை மேற்கொள்வதில்லை. மேலும் பல நோய்களால் அவஸ்தைப்படுகின்றனர். நோய்க்கும், சரியான தூக்கம் மேற்கொள்ளாமல் இருப்பதற்கும் நிறைய தொடர்பு உள்ளது.

ஆய்வுகளில் நாள்பட்ட தூக்கமின்மை உயிரைப் பறிக்கும் மோசமான நிலைகளான இதய நோய் முதல் புற்றுநோய் வரை பல நோய்களுக்கு வழிவகுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு ஒருவர் சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், வரக்கூடிய நோய்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய நோய்

இதய நோய்

இதய பிரச்சனைகளுக்கும் தூக்கமின்மை பிரச்சனைக்கும் சம்பந்தம் இருப்பது பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதுக்குறித்து ஒரு குழுவினர் 14 வருடம் ஆய்வை நடத்தினர். இந்த ஆய்வில் 25 முதல் 64 வயதிற்குட்பட்ட 657 ரஸ்ய ஆண்கள் கலந்து கொண்டனர். அதில் தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் மாரடைப்பு பிரச்சனையை சந்தித்தது தெரிய வந்தது.

பெருங்குடல் புண்

பெருங்குடல் புண்

ஒருவர் சரியான அளவு தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தாலோ அல்லது அளவுக்கு அதிகமான தூக்கத்தை மேற்கொண்டாலோ, பெருங்குடலில் புண் ஏற்பட்டு, நாள்பட்ட குடல் நோயால் அவஸ்தைப்படக்கூடும். எனவே தினமும் போதிய தூக்கத்தை மேற்கொள்ளுங்கள். அதுவும் 6 மணிநேரத்திற்கு குறைவாகவோ அல்லது 9 மணிநேரத்திற்கு அதிகமாகவோ தூக்கத்தை மேற்கொள்ளும் பழக்கத்தைக் கொள்ளாதீர்கள்.

உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய்

உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய்

பல ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தூக்கமின்மை பிரச்சனைக்கும், சர்க்கரை நோய்க்கும் தொடர்பு உள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனால் சிகாகோ பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தூக்க பிரச்சனை கொண்டவர்களுக்கு உடல் பருமனுடன் சர்க்கரை நோயும் வருவதாக கூறுகின்றனர்.

அல்சைமர் நோய்/ஞாபக மறதி நோய்

அல்சைமர் நோய்/ஞாபக மறதி நோய்

2013 ஆம் ஆண்டு ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தூக்கம் இல்லாமை அல்சைமர் நோயை உண்டாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக தூங்கும் போது பெருமூளை சம்பந்தப்பட்ட கழிவுகள் வெளியேற்றப்படும். ஆனால் சரியான அளவு தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், அக்கழிவுகள் மூளையிலேயே தங்கி, அல்சைமர் நோயை உண்டாக்கும்.

புரோஸ்டேட் புற்றுநோய்

புரோஸ்டேட் புற்றுநோய்

ஒரு ஆண் தினமும் போதிய அளவு தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், அது புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோயை உண்டாக்குவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தற்கொலை

தற்கொலை

2014 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தூக்க பிரச்சனைக்கும், தற்கொலைக்கும் சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது. இதற்கு காரணம் தூக்கமின்மையால் மன அழுத்தம் அதிகரித்து, மனதில் எதிர்மறை எண்ணங்களை பெருக்கி, தற்கொலை முடிவுக்கு தூண்டுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diseases Your Lack of Sleep Could Be Causing

Studies have found that sleep deprivation can cause serious, even life-threatening conditions, from heart diseases, diabetes, to cancer. These are the 6 diseases which are caused by the lack of sleep.
Story first published: Saturday, November 19, 2016, 10:17 [IST]
Desktop Bottom Promotion