நீரிழப்பினால் உண்டாகும் ஆபத்துகள் பற்றி தெரியுமா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

நீரின்றி அமையாது உலகு. நமது உடலும் கூடத்தான். நமது உடல் 64% நீரினால் ஆனது. உடலில் அனைத்து இயக்கங்களுக்கும், என்சைம், ரத்தம் ஆகியவற்றிற்கும் நீர் மிகவும் இன்றியமையாதது.

நீர்ச்சத்து தேவையான அளவு இருந்தால்தான் ரத்த ஓட்டம் நன்கு அமையும். ஜீரண சக்தி துரிதமாகும். ஹார்மோன் செயல்படும். மூளை , சிறு நீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.

போதிய அளவில் நீர் குடிக்காததும் உடல் பருமனுக்கு காரணமாகும் என்பது தெரியுமா? அதோடு நீரிழப்பினால் உண்டாகும் இன்னபிற பிரச்சனைகளையும் இப்போது பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோர்வு :

சோர்வு :

உடலுக்கு தேவையான சக்தியை தருவதில் மிக முக்கியமானது நீர்தான். நீர் குறைவாகும்போது என்சைம் செயல்கள் குறையும். இதனால் உடல் சோர்வு தன்னிச்சையாக ஏற்படும்.

ரத்தக் கொதிப்பு :

ரத்தக் கொதிப்பு :

ரத்தத்தில் 92% நீர்தான் உள்ளது. நீரிழப்பு உண்டாகும்போது ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகிவிடும். இதனால் ரத்த ஓட்டம் குறைந்து ரத்த அழுத்தம் உண்டாகிவிடும். இது ஆபத்தானது.

 ஆஸ்துமா மற்றும் அலர்ஜி :

ஆஸ்துமா மற்றும் அலர்ஜி :

நீர்ச்சத்து குறையும்போது, போதுமான காற்று உள்ளே வருவது தடைபடும். இதனால் ஹிஸ்டமின் என்ற அலர்ஜியை உண்டாக்கும் புரதம் அதிகமாகி, நுரையீரல் சம்பந்தமான நோயை உண்டாக்கும்.

சரும நோய்கள் :

சரும நோய்கள் :

நீரிழப்பினால் நச்சுக்கள் வெளியேகாமல் சருமத்தின் உள்ளடுக்களிலேயே தங்கும். ரத்தமும் அசுத்தமாகிவிடும். இதன் எதிரொலியாக சரும வியாதிகள் உண்டாகும்.

கொலஸ்ட்ரால் அதிகமாகும் :

கொலஸ்ட்ரால் அதிகமாகும் :

போதுமான நீரில்லாதபோது கொழுப்புகள் வளர்சிதை மாற்றத்திற்குட்படாமல் உடலிலேயே தங்கும்போது கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடும். இதனால் உடல் பருமன், இதய நோய்களுக்கான ஆபத்துகள் தாக்கும்.

ஜீரண சக்தி பாதிக்கும் :

ஜீரண சக்தி பாதிக்கும் :

ஜீரண சக்தி கடுமையாக குறைந்துவிடும். அல்சர், நெஞ்செரிச்சல் ஆகியவைகள் உண்டாகும்.

சிறு நீரகம் கோளாறுகள்:

சிறு நீரகம் கோளாறுகள்:

சிறு நீரகத்தில் வந்தடையும், கழிவுகள், நச்சுக்கள் வெளியேற முடியாது. இதனால் தொற்று நோய்கள் தாக்கும். அதோடு கரையாத மினரல்கள் சிறு நீரகத்திலேயே தங்கி, கற்களை உருவாக்கிவிடும். இதனால் பலப் பிரச்சனைகளைத் தரும்.

மலச்சிக்கல் :

மலச்சிக்கல் :

நீர்ச்சத்து குறையும்போது மலக்குடலில் நெகிழ்வுத்தன்மை குறைந்து கெட்டிப்படும். இதனால் மலச்சிக்கல் உண்டாகி, பைல்ஸ் போன்ற வியாதிகளும் ரத்தமும் ஏற்பட வாய்ப்புண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Dangerous Effects of Body Dehydration

Dangerous Effects of Body Dehydration
Subscribe Newsletter