அடிக்கடி சிறுநீர் கழிந்துக் கொண்டே இருக்கிறதா? காரணங்கள் மற்றும் தீர்வுகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஓர் நாளுக்கு சராசரியாக 4 - 8 முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பது உடலில் ஏதோ தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நிறைய பேர் இதை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது அபாயகரமான உடல்நலத்தின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதை உதாசீனப்படுத்துவது பின்னாளில் எதிர்மறை விளைவுகளை சந்திக்க காரணியாக அமையலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பொதுவான காரணங்கள்

பொதுவான காரணங்கள்

நீரிழிவு, சிறுநீர் பாதை தொற்று, கர்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், புரோஸ்டேட் பிரச்சனைகள் போன்றவற்றின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம். மேலும், சிறுநீரக தொற்று, சிறுநீர்ப்பை கற்கள் போன்றவற்றின் கூட இவ்வாறு நிகழலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 ஆண்கள்!

ஆண்கள்!

அடிக்கடி சிறுநீர் கழித்துக் கொண்டே இருப்பதால் ஆண்களுக்கு எரிச்சல் உணர்வு, வலி போன்றவை உண்டாகலாம். பால்வினை நோய் தொற்று, சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரக கற்கள், புரோஸ்டேட் கோளாறுகள் இருந்தால் இதுப் போன்ற உணர்வு ஏற்படும். நீரிழிவு மற்றும் வலிநிவாரண மாத்திரைகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் கூட ஆண்கள் மத்தியில் அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணியாக விளங்குகின்றன.

 பெண்கள்!

பெண்கள்!

கர்ப்ப காலத்தின் போது பெண்களுக்கு கருப்பை பெரிதாகிவிடும். மேலும், சிறுநீர் பையில் அழுத்தம் அதிகரித்து காணப்படும். இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதிலும், இரு வகை இருக்கிறது, சிலருக்கு சிறிதளவு சிறுநீர் கழியும், சிலருக்கு பெருமளவு சிறுநீர் கழியும் எனப்படுகிறது.

 பெண்கள்!

பெண்கள்!

சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரகத்தில் தொற்று, சிறுநீர் பை அல்லது இடுப்பு பகுதியில் தாக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் கூட அடிக்கடி சிறுநீர் வெளியேற்றப்படும். மேலும், இரத்தத்தில் கால்சியம் அதிகளவு கலந்திருந்தாலும் கூட பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழியும்.

 இயற்கை தீர்வுகள்

இயற்கை தீர்வுகள்

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம். ஒருவேளை பயப்படும் அளவிற்கு எந்த பிரச்சனையும் இல்லையெனில், நீங்கள் இயற்கை உணவுகளை உண்டே இதற்கு நல்ல தீர்வுக் காணலாம்.

 மாதுளை

மாதுளை

மாதுளையின் தோலை நன்கு பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். சிட்டிகை அளவு பேஸ்ட்டை சில துளி நீர் கலந்து பருகுங்கள். ஒருநாளுக்கு இருமுறை என ஐந்து நாட்கள் தொடர்ந்து இதை பருகிவந்தால், சிறுநீர் பையின் வெப்பம் குறையும், அடிக்கடி சிறுநீர் கழியும் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும்.

கொள்ளு

கொள்ளு

நூறு கிராம் அளவு கொள்ளை வறுத்துக்கொள்ளவும். அதை வெல்லத்துடன் சேர்த்து கலந்து உட்கொள்ளுங்கள். சிறுநீர் பாதை தொற்றுக்கு இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. கொள்ளில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும்.

 பக்கவிளைவுகள் இல்லை

பக்கவிளைவுகள் இல்லை

இந்த இரண்டு வீட்டு மருத்துவ முறையும் பக்கவிளைவுகள் அற்றவை. மேலும், இதை நீங்கள் மிக சுலபமாக வீட்டிலேயே தயாரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Common Causes And Natural Treatment Of Frequent Urination In Men And Women

Common causes and natural treatment of frequent urination in men and women, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter