நம்பினால் நம்புங்கள்!! இருமுறை பல் துலக்குவது இதயத்திற்கு நல்லது!

Posted By:
Subscribe to Boldsky

தினமும் பல் துலக்குவது பற்களுக்கும், வாய்க்கும் நல்லது என்று தெரியும், அது எப்படி இதயத்திற்கு நல்லது என்று தானே யோசிக்கிறீர்கள். நம்பி தான் ஆகவேண்டும் என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறுகிறார்கள் இதயநல நிபுணர்கள். பல் மற்றும் ஈறுகளின் நலனுடன் இதயத்தின் நலனும் கைகோர்த்து இருக்கிறது என இவர்கள் கூறுகிறார்கள்.

இனிமேல் தினமும் பல் துலக்குவது நல்ல புன்னகைக்கு மட்டுமின்றி இதய நலத்திற்கும் உதவும். பல வகைகளில் இதய நோய்கள் ஏற்பட ஈறுகளில் ஏற்படும் நோய்கள் காரணமாக இருக்கின்றன என இதய நல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பல்லீறு

பல்லீறு

தொற்று ஏற்பட்ட பல்லீறுகளில் இருந்து வெளியேறும் பாக்டீரியாக்கள் இரத்த நாளங்கள் வழியாக இரத்த ஓட்டத்தில் கலந்து, கட்டி உருவாக காரணியாக இருக்கின்றன.

ஈறுகளில் வீக்கம்

ஈறுகளில் வீக்கம்

ஈறு நோய் பாதிப்பின் காரணமாக வீக்கம் ஏற்படுவது கட்டி உருவாக தூண்டுதலாக இருக்கின்றது. இந்த கட்டிகள் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் வேகத்தை குறைக்கின்றன. இதனால் இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.

மாரடைப்பு

மாரடைப்பு

இரத்த ஓட்டம் குறைந்து இரத்த அழுத்தம் ஏற்படுவது நாள்ப்பட ஒட்டுமொத்தமாக மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

18 வயது பெண்

18 வயது பெண்

சமீபத்தில் சந்திரா எனும் மருத்துவர் 18 வயது பெண்ணுக்கு இதய சிகிச்சையளித்த போது, அந்த பெண்ணின் இதய வால்வுகளில் ஏற்பட்ட தொற்றுக்கு காரணம் வாய் பாக்டீரியாக்கள் என கண்டறியப்பட்டது. இரத்த ஓட்டத்தின் வழியாக தான் பாக்டீரியா இதய வால்வுக்கு பரவியுள்ளது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பல் துலக்காமல் இருப்பது

பல் துலக்காமல் இருப்பது

பல் துலக்காமல் இருப்பது வாயில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு இதய வால்வுகளில் இது மேலும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

மற்ற அபாயங்கள்

மற்ற அபாயங்கள்

பல்லீறு நோய் காரணியானது இதய நோய் மட்டுமின்றி, ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழவு, சுவாச தொற்றுகள் போன்ற பாதிப்புகளும் ஏற்பட காரணமாக இருக்கிறது.

நாள்பட்ட ஈறு பிரச்சனை

நாள்பட்ட ஈறு பிரச்சனை

நீண்ட நாட்களாக பல்லீறு பிரச்சனையுடன் இருப்பவர்களுக்கு மாரடைப்பு பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது எனவும், சாதாரண ஈறு பிரச்சனை உள்ளவர்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது எனவும் இதயநல நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு பிரிவுகள்

இரண்டு பிரிவுகள்

பொதுவாக கரோனரி இதய நோய் மற்றும் இதய வால்வு தொற்று என ஈறு அல்லது பல் பிரச்சனையின் காரணமாக இரண்டு பிரிவிலான இதய கோளாறு ஏற்படுகின்றன. பெரும்பாலும் இதய வால்வுகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறது என குர்கானை சேர்ந்த பிரபல மருத்துவர் தபன் கோஷ் கூறியுள்ளார்.

இருமுறை பல் துலக்க வேண்டும்

இருமுறை பல் துலக்க வேண்டும்

இதனால் தான், பற்கள் மற்றும் ஈறுகளின் நலன் காக்க தினமும் இரண்டு முறை பல் துலக்குங்கள். அதிலும் முக்கியமாக இரவு உணருந்திய பிறகு உறங்கும் முன்னர் பல் துலக்க மறக்க வேண்டாம். ஈறு பிரச்சனையின் காரணமாக இதய வால்வுகளில் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் தான் மருத்துவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுரைகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Brushing Your Teeth Twice A Day Can Revitalize Your Heart

Believe it or not Brushing Your Teeth Twice A Day Can Revitalize Your Heart, take look to know about it.
Subscribe Newsletter