தினமும் வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்குவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

அக்காலத்தில் பற்களைத் துலக்குவதற்கு எந்த பிரஷ்ஷும், டூத் பேஸ்ட்டும் இல்லை. நம் முன்னோர்கள் தங்களது பற்களைத் துலக்குவதற்கு சாம்பல், வேப்பங்குச்சி, ஆலமரக் குச்சி, அதிமதுரக் குச்சிகளைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் தான் அவர்களுக்கு எந்த ஒரு ஈறு பிரச்சனைகளும், பல் பிரச்சனைகளும், ஏன் வேறு எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைகளும் வரவில்லை எனலாம்.

வாய் துர்நாற்றம், ஈறு நோய்கள், சொத்தைப் பற்கள் போன்றவற்றிற்கான சில எளிய தீர்வுகள்!

ஏனெனில் இயற்கை பொருட்கள் எதிலும் எந்த ஒரு கெமிக்கல்களும் இருப்பதில்லை. அதிலும் அக்காலத்தில் எங்கும் மரங்கள் இருந்ததால், தங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் வீணாக நினைக்காமல் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இன்று பற்களைத் துலக்குவதற்கு ஏகப்பட்ட டூத் பேஸ்ட்டுகள், டூத் பிரஷ்கள் விற்கப்படுவதோடு, அவற்றால் வாய் சுத்தமாகிறதோ இல்லையோ, வாய் பிரச்சனைகள் அதிகமாகத் தான் உள்ளது.

பளிச்சிடும் வெண்மையான பற்கள் வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்...

எனவே என்ன தான் நவீன உலகமானாலும், எப்போதுமே நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பழக்கங்களை மறக்காமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இங்கு வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆண்களே! உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? இதோ அதை தடுக்க சில டிப்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈறு நோய்கள்

ஈறு நோய்கள்

வேப்ப மரக்குச்சியை மெல்லும் போது அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் ஜூஸ்கள் ஈறுகளைத் தாக்கிய கிருமிகளை அழித்து வெளியேற்றிவிடும். ஈறுகளில் இரத்தக்கசிவு பிரச்சனை இருந்தால், மருத்துவரிடம் செல்வதற்கு முன், வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கி வாருங்கள். இதனால் உங்கள் ஈறுகளில் இதுவரை இருந்த பிரச்சனைகள் முற்றிலும் அகலும்.

சொத்தை பற்கள்

சொத்தை பற்கள்

பற்களைத் துலக்குவதற்கு வேப்பங்குச்சியை மெல்லும் போது, அதிலிருந்து வெளிவரும் சாறு பற்களை சொத்தை செய்யும் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை முற்றிலும் அழித்துவிடும். மேலும் தினமும் வேப்பங்குச்சியால் இரண்டு முறை பற்களைத் துலக்கி வந்தால், சொத்தைப் பற்கள் போய்விடும்.

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம்

வாயில் கிருமிகள் அதிகம் இருப்பதனால் தான் வாய் துர்நாற்றம் வீசுகிறது. அத்தகைய கிருமிகளை முழுமையாக வெளியேற்றி, வாயை புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள வேப்பங்குச்சியால் தினமும் பற்களைத் துலக்குங்கள். முக்கியமாக தினமும் இரவில் படுக்கும் முன் வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கினால் வாய் துர்நாற்றம் விரைவில் நீங்கும்.

பல் வலி

பல் வலி

வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கி வருபவர்களுக்கு, பல் வலி வரவே வராது. இதற்கு வேப்பங்குச்சியில் உள்ள சக்தி வாய்ந்த உட்பொருட்கள் தான் முக்கிய காரணம்.

மஞ்சள் பற்கள் மற்றும் பற்காறை

மஞ்சள் பற்கள் மற்றும் பற்காறை

உங்களுக்கு பற்கள் மஞ்சளாகவும், பற்களின் பின் பற்காறைகள் இருந்தால், வேப்பங்குச்சியால் பற்களை தினமும் துலக்கி வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ குணங்களால், பற்களல் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்குவதோடு, பற்காறைகளும் விரைவில் அகலும்.

வாய்ப்புண்

வாய்ப்புண்

வாய்ப்புண் இருப்பவர்கள், வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கி வந்தால், வாய்ப்புண் சீக்கிரம் குணமாகும்.

வலிமையான பற்கள்

வலிமையான பற்கள்

வேப்பங்குச்சியால் தினமும் பற்களைத் துலக்கி வந்தால், பற்கள் வலிமையடையும். மேலும் வாயின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களையும் முழுமையாக வெளியேற்றிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits Of Using Neem Stick As Toothbrush

Here are some amazing teeth benefits of using neem stick as toothbrush. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter