For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்போ, எப்படி பாலை குடிக்க வேண்டும் என தெரியுமா? ஆயுர்வேதம் சொல்வதைக் கேளுங்க!

By Hemalatha
|

ஆயுர்வேதத்தில் பாலிற்கு என்று ஒரு தனித்துவமான இடம் உள்ளது. கேசின் என்கின்ற முழுமையான புரோட்டின் அதில்தான் உள்ளது. அதுமட்டுமில்லாமல் கால்சியம் சத்தை அதிகமாக கொண்டுள்ள திரவ உணவு பால்தான்.

ஆயுர்வேதத்தின் கூற்றின்படி நமது உடல் கபம், பித்தம், வாதம் ஆகியவற்றால் ஆனது. ஆனால் இவை எதுவும் சமன் நிலையில் இல்லாத போது பிரச்சனைகள் வருகின்றன.

Benefits of drinking milk

பால் எவ்வாறு குடிக்கலாம்?

பால் முழுமையாக ஜீரணம் ஆகும். ஆனால் பாலை எப்படி எப்போது பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம் என்று ஆயுர்வேதத்தில் கூறுகின்றனர்.

ஐஸ்கிரீம், ஜில்லிடும் பால் ஆகியவை எளிதில் ஜீரணம் ஆகாது. ஆனால் வெதுவெதுப்பான பாலுடன், இஞ்சியுடனோ அல்லது ஏலக்காய் கலந்தோ குடித்தால், முழுமையாக ஜீரணம் ஆகும். உடலின் கப நிலையை சமன் செய்யும் அருமையான பானம் இது.

தேனுடன் குடிப்பதனால் உடலுக்கு மிக மிக நன்மைகளை பால் தரும் . நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். இளமையாகவும் உடல் பருமனாவதையும் தடுக்கும்

எப்போது பாலை குடிக்கலாம் :

காலையில் பாலை குடிப்பது நல்லதில்லை. எளிதில் ஜீரணம் ஆகாது. சோம்பேறித்தனத்தை அதிகப்படுத்தும். வயதானவர்கள் மாலையில் பாலைக் குடிப்பது நல்லது. கிட்னியில் கல் இருந்தால் அதற்கு குணப்படுத்த பால் நல்லதொரு பானமாகும்.

இரவினில் பால் குடிப்பது மிகவும் உகந்த நேரமாகும். அது மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியான தூக்கத்தை தருகிறது. இரவில் உடலுக்கு போதிய ஓய்வு இருப்பதால், பாலிலுள்ள கால்சியம் எளிதில் உட்கிரகிக்கப்படும்.

அது உடலிலுள்ள புரொட்டினுடன் கலந்து உடலுக்கு தேவையான போஷாக்கைத் தருகிறது.முக்கியமாய் சைவப் பிரியர்கள் கட்டாயம் பாலினை தினமும் குடிப்பது நன்மையைத் தரும்.

கர்ப்ப காலத்தில் பால் குடிப்பது வயிற்றில் இருக்கும் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

பால் குடிப்பதற்கு முன் நீங்கள் கவனிக்க வேண்டியவை :

பால் எல்லா சத்துக்களையும் கொண்டுள்ள முழுமையான திரவ உணவு. இருந்தாலும் அதிலுள்ள லாக்டோஸ் சிலருக்கு அலர்ஜியைத் தரும்.

பால் மற்றும் பாலிலான உணவுகளை சாப்பிடும்போது வாந்தி ஏற்பட்டால் உங்களுக்கு லேக்டோஸ் ஒவ்வாமை இருக்கிறது என பொருள். அவர்கள் பால் தவிர்க்க வேண்டும்.

இரவுகளில் வெதுவெதுப்பான பாலையே குடிக்க வேண்டும். மிகவும் சூடாக குடித்தால் தூக்கம் போய்விடும். அதேபோல் குளிர்ந்த பால் குடித்தாலும் எளிதில் ஜீரணம் ஆகாது. அலர்ஜி, இருமல் ஆகியவைகளும் உண்டாகும்.

பாலுடன் உப்பை என்றும் கலக்கக் கூடாது. இரண்டிற்குமே எதிரெதிர் குணங்கள் இருப்பதால், உடல் ஏற்றுக் கொள்ளாது.பாலினை, உணவு உண்ட பின்தான் குடிக்க வேண்டும். உணவிற்கு முன்னாடி குடித்தால் ஜீரணம் ஆகாது.

வயிற்றுபோக்கு, ஃபுட் பாய்ஸன் ஆகியவைகள் உள்ளபோது பாலை தவிர்க்க வேண்டும். அதேபோல், காய்ச்சல் மற்றும் சரும நோய்கள் இருந்தால் அப்போதும் பால் குடிக்கக் கூடாது.

மற்றபடி ஒரு கிளாஸ் பாலை தினமும் எடுத்துக் கொண்டால், கண் பிரச்சனை வராது. எலும்புகள் பலம் பெறும் , நிம்மதியான தூக்கத்தினையும் தரும்.

English summary

Benefits of drinking milk

Benefits of drinking milk
Story first published: Wednesday, May 18, 2016, 12:01 [IST]
Desktop Bottom Promotion